ஜிஎஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பல பொருள்களின் ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளன. ஆனால், என்ன காரணத்திற்காக ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறதா, கடைக்கோடி வாடிக்கையாளர்களுக்கும் ஜி.எஸ்.டி வரி குறைப்பு எட்டி யிருக்கிறதா என்பது கேள்விக்குறியே. இந்தக் கேள்வியினை ஆடிட்டர் கோபால்கிருஷ்ண ராஜுவிடம் கேட்டோம். நம் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தவர், ஜி.எஸ்.டி தொடர்பான பிற பிரச்னைகளுக்கும் உரிய விளக்கம் தந்தார்.

‘‘பொதுவாக, ஜி.எஸ்.டி சதவிகிதத்தைக் குறைக்கும்போது நிறுவனங்கள், ஜி.எஸ்.டி-யைக் குறைத்து, அடிப்படை விலையை ஏற்றி மீண்டும் அதே விலையில் விற்று லாபம் சம்பாதிக்கின்றன. இந்த வரி ஏய்ப்பைக் கண்டறிய நுகர்வோர்கள் அவர்களுக்குள் ஒரு கூட்டமைப்பாக இணைந்து செயல்பட்டால்தான் முடியும். ஒரு பொருளுக்கு ஜி.எஸ்.டி வரியைக் குறைப்பதற்குமுன் இருந்த விலை ரசீது, ஜி.எஸ்.டி குறைப்புக்குப் பிந்தைய விலை ரசீது இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, அடிப்படை விலையில் ஏதேனும் மாற்றம் செய்திருப்பது தெரியவந்தால், அதுகுறித்து புகார் செய்யலாம். அப்படிப் புகார் செய்தால், உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

சில தயாரிப்புகளுக்கு அதிகபட்ச சில்லறை விலைக்கு (MRP) மேலாக ஜி.எஸ்.டி சேர்த்து வசூலிக்கிறார்கள். அத்தகைய ஏமாற்று வேலைகளை எப்படித் தடுப்பது என்பது முக்கியமான பிரச்னை. பொதுவாக, பேக்கிங் செய்து ஒரு பொருளை விற்கும்போது, அந்தப் பொருள் குறித்து என்னென்ன தகவல்கள் பேக்கிங்கின்மேல் தரப்பட்டிருக்க வேண்டும் என்பதை ‘The Standards of Weights and Measures Act, 1956’ என்ற சட்டம் விரிவாக வரையறுத்துள்ளது.

பொருளின் நிகர எடை, எண்ணிக்கை, மூலப் பொருள்கள், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட வற்றுடன் அந்தப் பொருளுக்கான அதிகபட்ச சில்லறை விலையும் (MRP) குறிப்பிடப்பட வேண்டும். அந்த எம்.ஆர்.பி விலைக்குள்ளாகவே வரியும் அடங்கிவிடுகிறது. எனவே, எம்.ஆர்.பி விலையுடன் கூடுதலாக ஜி.எஸ்.டி வசூலிக்கப் படுவதைத் தடுக்க, பேக்கிங் பொருள்களின்மீது பிரின்ட் செய்யப்பட்டுள்ள விலை விவரங்களைப் படித்துப் பார்த்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பேக்கிங்கில் குறிப்பிட்ட தொகைக்குமேல் ஜி.எஸ்.டி வரியினை வசூலித்தால், அதுகுறித்து உடனே புகார் அளிக்க வேண்டும்.

பேக்கிங்கில் பொருள்களை விற்பனை செய்பவர்கள், பொருளின் விலை உயர்வு காரணமாக எம்.ஆர்.பி விலையை அதிகரிக்கவேண்டியிருந்தால், எம்.ஆர்.பி விலையைத் திருத்த வேண்டும். எம்.ஆர்.பி விலையைத் திருத்தவேண்டுமெனில், ஜி.எஸ்.டி சட்ட விதிமுறைப்படி, ஏற்கெனவே குறிப்பிடப் பட்டுள்ள விலைமீது திருத்தப்பட்ட எம்.ஆர்.பி விலையைக் குறிப்பிட்டு, ஸ்டிக்கர் ஒட்டவேண்டும். இதன்படி பார்க்கும் போது, ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டதன் காரணமாக எம்.ஆர்.பி விலையையும் குறைக்கும் போது, புதிய விலையைக் குறிப்பிட்டு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். ஆனால் இதைப் பெரும்பாலான நிறுவனங்கள் செய்வதில்லை. இப்படியான தவறுகளுக்கு எதிராக நுகர்வோர்கள்தான் கேள்வியெழுப்ப வேண்டும்.

காம்போஸிட் டீலர்களுக்கான ஜி.எஸ்.டி-யும் தனிநபர்கள் மீதுதான் திணிக்கப் படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. இதனைக் கண்டறிவதற்கும் வழிமுறைகள் உள்ளன. காம்போஸிட் டீலர்கள் என்பவர்கள், பல்வேறு பிராண்டுகளைத் தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள். இவர்களில் ஆண்டு டேர்ன்ஓவர் ரூ.1.5 கோடிக்குக் குறைவாக இருப்பவர்களுக்கு, உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு 1% ஜி.எஸ்.டி-யும், ரெஸ்டாரன்டுகளுக்கு 5% ஜி.எஸ்.டி-யும், சேவைத்துறை சார்ந்தவர்களுக்கு 6% ஜி.எஸ்.டி-யும் விதிக்கப்படுகிறது. இது ஒப்புக்கு விதிப்பது போன்ற குறைவான ஜி.எஸ்.டி-தான். இதனைக்கூட இவர்கள் அரசுக்குச் செலுத்தாமல், அந்த வரியினை நுகர்வோர்கள் தலையில் கட்டுவது பெருங்குற்றம். காம்போஸிட் டீலர்கள் நுகர்வோரிடம் ஜி.எஸ்.டி வசூலிக்கக் கூடாது என்பதற்காகவே, அவர்களைத் தனியாக இனம் பிரித்துக் காட்டுவதற்காக நிறுவனத்தின் பெயர்ப் பலகையிலேயே தாங்கள் ஒரு காம்போஸிட் டீலர்கள் என்றும், ஜி.எஸ்.டி வசூலிக்க மாட்டோம் என்றும் குறிப்பிடும்படி விதிமுறை உள்ளது. ஆனால், இந்த விதிமுறையைப் பெரும்பாலான வர்கள் பின்பற்றுவதே கிடையாது. இந்தத் தவற்றினைச் செய்பவர்கள்மீதும் உடனடியாகப் புகார் அளிக்கவேண்டும்.

சிலர், ஜி.எஸ்.டி பதிவே செய்யாமல் வாடிக்கை யாளர்களிடம் வரி வசூலிக்கிறார்கள். போலியான ஜி.எஸ்.டி எண்ணைப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இந்த மோசடியையும் நாம் எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.

ஜி.எஸ்.டி எண் போலியாகத் தந்தால், அதைக் கண்டறிய ஓர் இணையதளமே இருக்கிறது. நீங்கள் கூகுள் தேடலில் ‘verify gstin’ என டைப் செய்து தேடினால் https://services.gst.gov.in/services/searchtp என்ற லிங்க் திறக்கும். இதில் Search Taxpayer என்ற பெட்டியில் ஜி.எஸ்.டி எண்ணைப் பதிந்தால், நிறுவனம் குறித்த விவரங்களைக் கொடுத்துவிடும். இதன்மூலம் போலியான ஜி.எஸ்.டி எண்ணைப் பயன்படுத்துவோரை அடையாளம் கண்டு, அவர்கள்மீது புகார் அளிக்கலாம்’’ என்றார்.

பொதுவாக, பெரும்பாலான மக்கள் ஜி.எஸ்.டி-யைக் கட்டாமல் தவிர்ப்பதற்கான வழியையே எதிர்பார்க்கிறார்கள். இந்த மனநிலை நமது தேசத்தின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல. ஜி.எஸ்.டி சதவிகிதம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அதனைக் குறைப்பதற்கு ஜி.எஸ்.டி கவுன்சிலில் முறையிடலாம். அதைவிடுத்து, ஜி.எஸ்.டி-யையே கட்டாமல் வரி ஏய்ப்பு செய்ய நினைத்தால் அது நாட்டின் வளர்ச்சியையே பாதிக்கும்!

தெ.சு.கவுதமன் - படம்: பா.காளிமுத்து