Published:Updated:

“சந்தை இறக்கத்திலும் எஸ்.ஐ.பி முதலீடு அதிகம் பாதிக்கவில்லை!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“சந்தை இறக்கத்திலும் எஸ்.ஐ.பி முதலீடு அதிகம் பாதிக்கவில்லை!”
“சந்தை இறக்கத்திலும் எஸ்.ஐ.பி முதலீடு அதிகம் பாதிக்கவில்லை!”

நானும் எஸ்.ஐ.பி-யும்!

பிரீமியம் ஸ்டோரி

த்து மாதங்களுக்குமுன் பங்குச் சந்தையில் அதிக இறக்கம் வந்த போது, அதுபற்றி நான் கவலையேபடவில்லை. காரணம், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கத்தில் இருக்கும். ஆனால், நீண்ட காலத்தில்தான் அதிக வருமானம் தரும் என்பதை நான் தெளிவாகப்  புரிந்துகொண்டிருக்கிறேன் எனத் தேர்ந்த முதலீட்டாளர் போலப் பேசும் குணசேகரன், மதுரையைச் சேர்ந்தவர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவருகிறார். அவரின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

“சந்தை இறக்கத்திலும் எஸ்.ஐ.பி முதலீடு அதிகம் பாதிக்கவில்லை!”

``மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் 50,000 ரூபாய் முதலீடு செய்கிறேன். முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்க ஐந்து ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என நிதி ஆலோசகர் எஸ்.ராமலிங்கத்தின் ஆலோசனையின்படி, தலா 10,000 ரூபாயை முதலீடு செய்து வருகிறேன். ஒரு லார்ஜ்கேப் ஃபண்ட், ஒரு மல்டிகேப் ஃபண்ட், ஒரு ஸ்மால்கேப் ஃபண்ட், இரண்டு மிட்கேப் ஃபண்டுகள் என முதலீட்டைப் பிரித்திருக்கிறேன். இப்படிச் செய்வதால், சந்தை ஏற்ற இறக்கத்தைத் தாண்டி எனது ஃபண்டுகள் நல்ல வருமானம் கொடுக்கின்றன” என மகிழ்ச்சியுடன் சொன்னவர், சற்று நிறுத்தி மீண்டும் தொடர்ந்தார்.

“சந்தை இறக்கத்திலும் எஸ்.ஐ.பி முதலீடு அதிகம் பாதிக்கவில்லை!”



``மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது கஷ்டமான விஷயமாக இருக்குமோ என்று நினைத்தேன். காரணம், மாதந்தோறும் ஐந்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவேண்டும் என்றால், ஐந்து ஃபண்ட் நிறுவனக் கிளைகளுக்குச் சென்று வரவேண்டுமோ என்று நினைத்தேன். ஆனால்,  இ.சி.எஸ் மூலம் நம் வங்கிக் கணக்கிலிருந்து எளிதாகப் பணத்தை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவிடுகிறார்கள். இது எனக்கு மிகவும் வசதியாக உள்ளது. 

எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்வது தவிர்த்து, நான் ஓய்வுபெற்றபோது கிடைத்த பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் மொத்த முதலீடாகச் செய்தேன். இது சந்தை இறக்கத்தின்போது அதிகமாக இறங்கியது. ஆனால், எஸ்.ஐ.பி முதலீடு அந்த அளவுக்கு இறங்கவில்லை.

நான் தாமதமாகத்தான் எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறேன். இந்த முதலீட்டைப் பற்றி முன்பே தெரியாமல் போய்விட்டது.அப்படித் தெரிந்திருந்தால், இன்னும் நிறைய பணத்தைச் சேர்த்திருப்பேன். நான் செய்த இந்தத் தவற்றை இன்றைய இளம்தலைமுறையினரும் செய்யக்கூடாது. வேலைக்குச் சேர்ந்தவுடனே அவர்களால் எவ்வளவு பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் மூலம் சேர்க்க முடியுமோ, அதைச் சேர்க்கத் தொடங்கிவிடுவது நல்லது. கல்யாணம் மட்டுமல்ல, முதலீட்டையும் காலத்தில் செய்யத் தொடங்கிவிடுவது நல்லது’’ - சிரித்தபடி பேசி முடித்தார் குணசேகரன்.

சி.சரவணன் - படம்: ஈ.ஜெ.நந்தக்குமார்

உங்களின் எஸ்.ஐ.பி முதலீட்டு அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயிலுக்கு அனுப்பிவைக்கலாம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு