Published:Updated:

முதலீட்டில் மனத் தடைகளை உடையுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முதலீட்டில் மனத் தடைகளை உடையுங்கள்!
முதலீட்டில் மனத் தடைகளை உடையுங்கள்!

முதலீடுஜி.அண்ணாதுரை குமார், நிதி ஆலோசகர்.

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவில் வேலை பார்க்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள், வங்கிச் சேமிப்பு, ஃபிக்ஸட் டெபாசிட், தங்க நகைகள் என்று சில வழிகளில் பணத்தைச் சேமிக்கிறார்கள். ஆனாலும், எதிர்காலச் செலவுகளுக்குத் தேவைப்படும் பணத்தினை யாரையும் எதிர்பாராமல் பெறும் வகையில், நீண்டகால முதலீடுகளைச்  செய்திருக்கிறார்களா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பெரும்பான்மையானவர்களின் பதிலாக இருக்கிறது. இதில் மாத வருமானம் பெறுபவர்கள் மட்டுமல்ல, சொந்தத் தொழில் செய்பவர்களும் அடங்குவர்.

முதலீட்டில் மனத் தடைகளை உடையுங்கள்!

எதிர்காலப் பணத் தேவைகளுக்காக முதலீட்டினை இவர்கள் நாடாமல் இருப்பதற்கும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இவர்கள் எந்தவிதமான நாட்டத்தையும் காட்டாமலே இருப்பதற்கும் காரணம் என்ன என்று கவனித்தால்,  இவர்களிடம் போதிய பணம் இல்லாததோ அல்லது இப்படிப்பட்ட முதலீட்டு முறையை அறியாமல் இருப்பதோ மட்டுமல்ல. இவற்றையும் தாண்டி, மனம் சம்பந்தப்பட்ட சில தடைகள் இருப்பதே காரணம். முதலீட்டின் மீதான மனத் தடைகளையும், அதை உடைக்கும் வழிகளையும் பார்ப்போம்.

தடை ஒன்று : பயமும், தயக்கமும்

சாதாரண, மிகச் சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மக்களுக்கு இயல்பாகவே பணம் தொடர்பான தயக்கங்கள் எப்போதும் இருக்கும். இன்றைக்குக் கைகொடுக்கும் வருமானம் நாளை இல்லாமல்போனால் என்னவாகும் என்கிற எதிர்மறை எண்ணம், அவ்வப்போது அவர்களின் பயத்தைத் தூண்டிவிடும். அதன் விளைவாக, தங்கள் பணத்தைப் பெட்டியில் போட்டுப் பூட்டியோ அல்லது சிறு சேமிப்பாகவோ வைத்துக் கொள்வார்கள். இப்படி அந்தப் பணத்தைப் பணவீக்கத்தைத் தாண்டி  வளரவிடாமல்  ஊனமாக்கிவிடுகிறார்கள். கடினமாக உழைத்து ஒவ்வொரு ரூபாயாகச் சேமித்த பணத்தை ஒரே வருடத்தில் இரட்டிப்பாக்கித் தருகிறோம், மாதந்தோறும் 25% வட்டி தருகிறோம் என்று ஆசையைத் தூண்டி, பின்னர் அலைக்கழித்து ஏமாற்றுபவர்களிடம் மொத்தமாக இழந்துவிடுகிறார்கள்.

வாழ்வதற்குத் தேவையான பணத்தைப் பேராசையால் இழத்தலும் பணவீக்கத்தினை வெல்ல முடியாத சேமிப்பாக வைத்திருப்பதும் எதிர்காலத்தில் நம்மை ஒரே மாதிரியான கையறு நிலையில் கொண்டுபோய் நிறுத்திவிடும். இதற்கெல்லாம் முதலீடு பற்றிய நமது பயமும் அதைச் சார்ந்த தயக்கமும்தான் காரணம்.

முதலீட்டில் மனத் தடைகளை உடையுங்கள்!இதுபோன்ற நிலைக்கு ஆளாகாமல் இருக்க, சரியான முதலீடுகளின்மூலம் நம்  பணத்தின் மதிப்பைச் சிறிதளவாவது உயர்த்துவதற்குத் திட்டமிடவேண்டும். பின்னர், முதலீடு பற்றிய பயத்தையும் தயக்கத்தையும் உடைப்பதற்கு நல்ல திட்டங்களைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்ய முன்வர வேண்டும்.

எடுத்துக்காட்டாக, தங்களின் வங்கிச் சேமிப்புக் கணக்கில்  உள்ள பணத்தின் ஒருபகுதியை வெளியில் எடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதை  லாக் இன் பீரியட் மற்றும் வெளியேறும் கட்டணம் இல்லாத, குறைந்த ரிஸ்க் குறைந்த வருமானம் கொண்ட லிக்விட் ஃபண்ட் போன்ற திட்டங்களில் முதலீட்டைத் தொடங்கலாம். அப்படிச் செய்வதால், அந்தத் திட்டங்களின் வளர்ச்சியின் மூலம் நாளடைவில் உங்கள் பயத்திற்கே பயம் காட்டலாம்.

ஆண்டு முடிவில் அல்லது உங்கள் தேவையின்போது, வங்கிச் சேமிப்புக் கணக்கில் உங்களுடைய பணம் பெற்றுத் தந்த வட்டியையும் அதே வேளையில் நீங்கள் முதலீடு செய்திருந்த லிக்விட் ஃபண்ட் திட்டங்கள் தந்த வருமானத்தையும் நீங்களே ஒப்பிட்டுப் பார்த்தால், முதலீட்டின் சக்தி உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்.

முதலீட்டில் மனத் தடைகளை உடையுங்கள்!

அதன்பின் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் பக்கம் உங்கள் பார்வையைத் திருப்பினால் கூட முதலீட்டைப் பொறுத்தவரை பயமும் தயக்கமும் உங்களைவிட்டு ஓடிவிடும். கூடவே, சந்தையின் ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ளும் தைரியமும் உங்களுக்கு வந்துவிடும்.

தடை இரண்டு : அப்புறம் பார்க்கலாம் எனும் அதீத எச்சரிக்கை உணர்வு

இவர்கள் கொஞ்சம் முரண்பட்ட சிந்தனை உடையவர்கள். எப்படியென்றால், சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பற்றியும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பற்றியும் இவர்கள் நன்கறிவார்கள். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் லாபங்கள் பெற்றுத்தந்த திட்டங்கள் பற்றியும்கூட நன்கு புரிந்துவைத்திருப்பார்கள்.

முதலீட்டில் மனத் தடைகளை உடையுங்கள்!

ஆதலால், சந்தையின் ஏற்றமான காலகட்டங்களில் முதலீடு செய்தீர்களா என்றால், “பங்குச் சந்தை நன்றாக ஏறிக்கொண்டிருக்கிறது, அப்புறம் பார்க்கலாம்” என்பார்கள். சந்தை இறங்கும் நேரங்களில் கேட்டால், “இன்னும் கொஞ்சம் இறங்கட்டும், அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்வார்கள். ஆகமொத்தத்தில், தகுந்த சமயத்தை எதிர்பார்ப்பதாக நினைத்துக்கொண்டு காலம் தாழ்த்தியே முதலீட்டிற்கான நல்ல வாய்ப்புகளை இழந்துவிட்டு, பின்னர் வருந்துவார்கள்.

இனிவரும் காலத்திலாவது கரடியின் பிடியில் சந்தை இருக்கும்போது முதலீடு செய்ய முன்வருவார்களா என்றால், அப்போதும் “இறங்கட்டும், அப்புறம் பார்க்கலாமே” என்று எச்சரிக்கை உணர்வுடனே  பதிலளிப்பார்கள்.

 உதாரணத்திற்கு, 2018-2019-ம் நிதியாண்டு காலகட்டத்தையே எடுத்துக்கொள்வோம். முதலீடு செய்யச் சொல்லி யாராவது கேட்டால், அப்புறம் பார்க்கலாம் என்று சொல்வதற்கு அவர்களிடம் பல காரணங்கள் கொட்டிக் கிடந்தன. டி.ஹெச்.எஃப்.எல், ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனங்களின் வீழ்ச்சி, ரிலையன்ஸ் குழுமப் பங்குகளின் விலை சரிவு, நாடாளுமன்றத் தேர்தல், அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி எனப் பல காரணங்களை அடுக்குவார்கள். 

ஆனால், இத்தகைய சீரற்ற சூழ்நிலையிலும் சென்செக்ஸ் கடந்த ஒரு வருடத்தில் 10.80% வருமானம் தந்திருப்பதைக் கவனிக்கத் தவறி விட்டார்கள் அவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

சரியான அளவில் ஏற்படும் எச்சரிக்கை உணர்வானது நம்மை நிதானத்துடன் செயல்பட வைக்கும் என்பதையும், அதீத எச்சரிக்கை உணர்வானது அப்புறம் பார்க்கலாம் என்ற  எண்ணத்தை உருவாக்கி நம்மைச் செயலிழக்க செய்துவிடும் என்பதையும் உணர வேண்டும்.  அலைகள் ஓயட்டும்; பிறகு கடலில் இறங்கலாம் என நினைத்துக் காத்திருப்பதைவிட, தக்க துணையோடு கடலில் மூழ்கி எழுவது சிறப்பானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முதலீட்டில் மனத் தடைகளை உடையுங்கள்!

அப்படியில்லாமல் அப்புறம் பார்க்கலாம் என்ற எச்சரிக்கையுடன் இருந்துவிட்டால், சந்தையின்மீது காளைகள் ஆதிக்கம் செலுத்தும் நேரத்திலும் முதலீடு செய்வதைத் தவற விட்டுவிட்டு, பிறகு கவலையுடன் வேடிக்கை பார்க்கவேண்டியிருக்கும்.

எனவே, யாராலும் சரியாக யூகிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாத சந்தையின் போக்கை நினைத்து காலம் தாழ்த்தாமல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டைத் தொடங்கி, பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து நீண்ட காலத்தில் நல்ல முதலீட்டாளராகும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.

உங்களின் ரிஸ்க் எடுக்கும் தன்மையைக் கருத்தில்கொண்டு லார்ஜ்கேப், லார்ஜ் மற்றும் மிட்கேப் அல்லது மல்டிகேப் ஃபண்டுகளில் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட திட்டங் களைத் தேர்வு செய்து, அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப்போடும் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வாங்குவதும் விற்பதும் எளிது. ஆனால், அந்தத் திட்டங்களை அதன் ஏற்ற இறக்க காலங்களில் வைத்திருப்பது தான் சவாலானது. அதைச் சரியாகச் செயல்படுத்து வதில்தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது. சாதாரணமாக வாழ்வதற்குச் சேமிப்பு போது மானது. ஆனால், பணவீக்கத்தை வென்று எதிர்காலத்தில் உங்கள் வாங்கும் சக்தியை த் தக்க வைத்துக்கொள்ள முதலீடு அவசியமானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

முதலீட்டின் மீதான உங்கள் மனத் தடைகளை உடைத்து, நாளைய வாழ்வில் வளம் சேர்க்க இன்றே முதலீட்டைத் தொடங்குகள்!

குறிப்பு : அட்டவணைகளில் தரப்பட்டுள்ள ஃபண்டுகள் வருமான ஒப்பீட்டுக்கான உதாரணங்களே; பரிந்துரை அல்ல.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு