கடந்த வியாழக்கிழமை ஃப்யூச்சர்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ் (எஃப் அண்டு ஓ), நல்லபடியாக நிறைவுபெற்றது. தேர்தல் முடிவுகளுக்கு முன், மத்தியில் பாரதிய ஜனதா தலைமையில் நிலையான ஆட்சி அமையும் என்கிற எதிர்பார்ப்பில், இந்தியப் பங்குச் சந்தை கணிசமான ஏற்றத்தைக் கண்டது. இதையொட்டியே தேர்தல் முடிவுகள் வந்ததால், அதன்பிறகு சந்தை அதிக ஏற்றம் காணவில்லை.

தற்போது இந்தியப் பங்குச் சந்தை ஜூலை 5 -ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டை எதிர்பார்த்து நிற்கிறது. இந்த முழு பட்ஜெட்டில் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. பல சாதகமான விஷயங்கள் கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு விட்டன. எனவே, அந்த அறிவிப்புகளை ஒட்டியே புதிய அறிவிப்புகளும் இருக்கும்.
பட்ஜெட்டில் மக்களின் விருப்பப் பட்டியல்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், அவற்றில் ஏதேனும் நிறைவேறுமா என்பது பட்ஜெட் அன்றுதான் தெரியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரும் வாரத்தில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கும் பொசிஷசன்களைப் பொறுத்துத்தான் பங்குச் சந்தையின் செயல்பாடு இருக்கும். நிஃப்டி 11700/11800-ல் அதிக எண்ணிக்கையில் ஷார்ட் புட் பொசிஷன்கள் இருக்கின்றன. இந்த நிலை பட்ஜெட் தேதிக்குமுன் பிரேக் அவுட் ஆக வாய்ப்பில்லை என்றே சொல்லலாம்.
அதேநேரத்தில், 11900-12000-ல் அதிக எண்ணிக்கையில் ஷார்ட் கால் பொசிஷன்கள் இருக்கின்றன. இது நியாயமான ரெசிஸ்டன்ஸ் நிலையாக இருக்கிறது. அந்த வகையில் வரும் வாரத்தில் நிஃப்டி 200 புள்ளிகள் என்கிற ரேஞ்ச் பவுண்டில் வர்த்தகமாகும் என எதிர்பார்க்கலாம்.

நிஃப்டியுடன் ஒப்பிடும் போது, பேங்க் நிஃப்டி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அது காளையின் போக்கில் இருக்கிறது. சந்தையை ஏற்றப் பாதைக்கு பேங்க் நிஃப்டிதான் கொண்டு செல்கிறது.
முன்னணி வங்கிப் பங்கு களான ஹெச்.டி.எஃப்.சி பேங்க், எஸ்.பி.ஐ போன்றவற்றின் விலை சார்ட்டுகள் கவர்ச்சிகரமாக உள்ளன. எனவே, பேங்க் நிஃப்டி இன்னும் மேலே செல்ல வாய்ப்பி ருக்கிறது. அந்த வகையில், பேங்க் நிஃப்டியைக் கவனித்து, வரும் வாரத்தில் வர்த்தகம் செய்யலாம்.

ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ் (HDFCLIFE)
தற்போதைய விலை: ரூ.464.05
வாங்கலாம்
காப்பீட்டு நிறுவனப் பங்கு களுக்கு சற்றுத் தாமதமாகவே தேவை உருவாக ஆரம்பித்திருக் கிறது. ஆயுள் காப்பீட்டு துறையில் ஹெச்.டி.எஃப்.சி லைஃப் மிக முக்கியமான நிறுவனம் என்பதால், இதன்மீது முதலீட்டாளர்களுக்கு மதிப்பும், எதிர்பார்ப்பும் இருக்கிறது.
இந்தப் பங்கின் விலை வரைபடத்தில் ஹையர் பாட்டம் உருவாகியிருப்பதால், பங்கு வர்த்தகத்தில் வால்யூம் அதிகரித்துக் காணப்படுகிறது. அதேசமயம், இந்தப் பங்கின் விலைப்போக்கும் வலிமை பெற்றிருக்கிறது. இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கலாம்.
பங்கின் உடனடி ரெசிஸ்டன்ஸ் ரூ.470-ஆக உள்ளது. இதைத் தாண்டினால், பங்கின் 505 ரூபாய் வரை செல்லும். தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 440 ரூபாய் வைத்துக் கொள்ளவும்.

ஃபெடரல் பேங்க் (FEDERALBNK)
தற்போதைய விலை: ரூ.108.40
வாங்கலாம்
மீண்டும் வங்கிப் பங்குகளுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. இந்தப் பங்கின் விலை வரைபடமும் இந்தத் தேவை சிறப்பாக இருப்பதையும் விலையில் ஏற்றம் இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
கடந்த சில வாரங்களாகவே ஃபெடரல் பேங்க் பங்கு விலை ஏற்றத்தில் இருக்கிறது. குறுகிய காலத்தில் பங்கு விலை தொடர்ந்து ஏறும் என்பதை வரைபடம் காட்டுகிறது. நீண்ட கால நோக்கில் முதலீடு செய்பவர்கள் இந்தப் பங்கை வாங்கலாம். விரைவில் பங்கின் விலை ரூ.120-125 வரை உயரக் கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.103 வைத்துக்கொள்ளவும்

கோத்ரேஜ் பிராப்பர்டீஸ் (GODREJPROP)
தற்போதைய விலை: ரூ.1,002.30
வாங்கலாம்
கடந்த வாரம் இந்தப் பங்கின் விலை அதிகபட்ச உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இந்திய ரியல் எஸ்டேட் துறையில் மிகச் சிறந்த நிறுவனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நீண்ட காலமாக அதிக ஏற்றமும் இல்லாமல், இறக்கமும் இல்லாமல் ஒரே நிலையில் இதன் பங்கின் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது, தற்போது 790 ரூபாயில் பிரேக்அவுட் ஆகியி ருக்கிறது. தற்போது இந்தப் பங்கின் வால்யூம் நிலையாகக் காணப்படுகிறது.
இந்தப் பங்கினை தற்போதைய நிலையில் வாங்கலாம். 950 ரூபாய்க்குக்கீழ் குறைந்தாலும் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 900 ரூபாயாக வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை 1,250 ரூபாய்.
தொகுப்பு: சி.சரவணன், செ.கார்த்திகேயன்
டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES