Published:Updated:

வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு!

வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு!
News
வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு!

வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு!

யாஷ் பிர்லா குரூப் தலைவர் யசோவர்தன் பிர்லா, கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனிருந்தும் திருப்பிச்செலுத்தாதவர்கள் (வில்ஃபுல் டிஃபால்ட்டர்) பட்டியலில் சேர்க்கப்பட்டார். யசோவர்தன் பிர்லா, பிர்லா சூர்யா நிறுவனத்தின் இயக்குநராகவும் யாஷ் பிர்லா குழுமத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் பிரபல தொழிலதிபர் பிர்லா குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த யாஷ் பிர்லா குழுமத்தின்கீழ் 12 நிறுவனங்கள்வரை இருக்கின்றன.   

வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு!

யூகோ வங்கியில் பிர்லா சூரியா நிறுவனம், சூரிய சக்தி தயாரிப்புக்கான பொருள்கள் வாங்குவதற்காக 100 கோடி ரூபாய் வங்கிக்கடன் பெற்றிருக்கிறார்கள். அந்தக் கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தாததால் 2013, ஜூன் மாதத்திலேயே வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், அத்தொகையை வசூலிப்பதற்காகப் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவற்றுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. வாங்கிய கடனில் 67.65 கோடி ரூபாய்வரை இன்னமும் திருப்பிச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வங்கிக்கடன் பெற்றவர்களில், திருப்பிச் செலுத்தும் திறனிருந்தும் சொத்து இருந்தும், திருப்பிச் செலுத்தாதவர்களில் 25 லட்சத்துக்கு மேல் வாராக்கடன் வைத்திருப்பவர்களின் பட்டியலை அவ்வப்போது வங்கிகள் வெளியிட வேண்டுமென்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அப்படி வெளியிடப்படுபவர்களின் பெயரோடு புகைப்படமும் இணைத்தே வெளியிட வேண்டுமென்றும் கூறியிருந்தது. யசோவர்தன் பிர்லாவுக்கும் சொத்துகள் இருந்தும் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஆண்டுக்கணக்காக இழுத்தடித்ததால் தற்போது 'வில்ஃபுல் டிஃபால்ட்டர்' என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மட்டுமன்றி அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் குழுவில் உள்ளவர்கள், சாட்சிக் கையெழுத்திட்டவர்கள் எனப் பலரும் இதில் அடங்குவார்கள். 

வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாத பிர்லா குடும்பத்து வாரிசு!

வங்கிக்கடனைத் திருப்பிச் செலுத்த வசதியற்ற வர்க்கத்தினர் மன உளைச்சலால் தவறான முடிவெடுக்கும் இதே நாட்டில், வங்கிக்கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதியிருந்தும் திருப்பிச்செலுத்தாத வர்க்கத்தினரும் இருக்கிறார்கள் என்பது வேதனை.