மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

கல்லூரி, பெற்றோர், நண்பர்கள் என ஒரு பாதுகாப்பான உலகத்தில் இருந்து போட்டி, நிரந்தரமின்மை, வேலைப்பளு என பணி சார்ந்த ஒரு புதிய உலகுக்குச் செல்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. எனவேதான் முதல் வேலையில் சேர்வது தாயின் கருவறையில் இருந்து வெளி உலகுக்கு நுழைவதற்குச் சமமானது.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

குறிப்பாக, புதிய வேலையில் சேர்ந்த முதல் மூன்று வருடங்கள் மிக மிக முக்கியமானவை. ஏனெனில், இந்த மூன்று வருடங்களில்தான் உங்கள் அடுத்த 40 வருட பணிக் காலத்தின் அடித்தளம் உருவாகிறது. எனவே, நீங்கள் கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்த முதல் மூன்று வருடங்களில் ஒரு சாதனையாளராக உங்களை உருவாக்கிக் கொள்வது எப்படி என்பது பற்றி இனிவரும் வாரங்களில் பேசப் போகிறேன்.

முதல் வேலையின் நியமனக் கடிதம் கிடைத்தவுடன் நாம் அடையும் மகிழ்ச்சி வார்த்தைகளில் சொல்ல முடியாதது. இந்த கடிதத்தைத் தங்களுக்கு வந்த முதல் காதல் கடிதம் போல பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

##~##
ஆனால், நியமனக் கடிதத்தைத் தெளிவாகப் படிப்பது அவசியம். ஏனெனில் சம்பளம், பதவி பற்றிய தகவல்கள் மற்றும் வேறு நிபந்தனைகள் குறித்து தெளிவாகப் படித்து அறிந்து கொண்ட பின்னரே வேலையை ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா? என்று முடிவு செய்ய வேண்டும்.

குறிப்பாக, கடிதத்தில் சம்பளம் பற்றி குறிப்பிடும்போது cost-to-the company என்று ஒரு தொகை மொத்தமாக குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த சிடிசி-யில் நிலையான பாகம் (fixed pay) எவ்வளவு? மாறும் பாகம் (variable -pay) எவ்வளவு? என தெளிவாகக் கேட்டு அறிந்து கொள்வது அவசியம்.

சில சமயம் சிடிசி என குறிப்பிட்டுள்ள தொகையில் 45 சதவிகிதமே கையில் கிடைக்கும் சம்பளமாக இருக்கலாம். அதேபோல வேலையில் இருந்து விலக அல்லது விலக்க நோட்டீஸ் கால அளவு என்ன? அது தொடர்பான வேறு நிபந்தனைகள் என்ன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

முதல் வேலையில் சேர்ந்தபிறகு முதல் மூன்று மாதங்களுக்கு நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்தே உடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலதிகாரி உடனான உங்கள் உறவு அமையும்.

பெரும்பாலான நிறுவனங்களில் இந்த முதல் மாதத்தில்தான் பணி தொடர்பான அறிமுக பயிற்சி அளிக்கப்படும். இந்த அறிமுக பயிற்சியை induction training  என்பார்கள். இந்த அறிமுக பயிற்சியின்போது நிறுவனம் மற்றும் அதன் செயல்பாடு, கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள், பணியில் நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி சொல்லித் தரப்படும்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

பெரிய தொழில் நிறுவனங்கள் இத்தகைய அறிமுக பயிற்சியை பெரிய நட்சத்திர ஓட்டல்களிலோ, சுற்றுலாத் தலங்களிலோ நடத்தக்கூடும். இது புதிய பணியாளர்களை ஊக்குவிப்பதற்கான முயற்சி. இந்த அறிமுக பயிற்சியில் நீங்கள் கேட்டு அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

• உங்கள் நிறுவனத்தில் உள்ள துறைகள், பிரிவுகள் என்னென்ன? அவை எங்கெங்கு உள்ளன, அவற்றின் முக்கிய செயல்பாடுகள் என்ன? அவற்றின் தலைவர்கள் யார்? பல்வேறு துறைகளுக்கும், பிரிவுகளுக்கும் உள்ள தொடர்புகள் என்ன?

• உங்கள் நிறுவனத்தின் தொடக்க வரலாறு மற்றும் கடந்த காலத்தில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? இதை அறிந்து கொள்வது உங்கள் நிறுவனத்தின் மீது ஒரு ஒட்டுதலை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அதன் தற்கால நிலையை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும்.

• உங்கள் நிறுவனத்தின் நிர்வாக கட்டமைப்பு (Organisational structure) என்ன? குறிப்பாக, உங்கள் துறை மற்றும் பிரிவின் முக்கிய நிர்வாகிகள் யார்? அவர்களின் செயல் அதிகாரங்கள் (Administrative Powers) என்ன?

• உங்கள் பிரிவில் கையாளப்படும் சேவை அல்லது தயாரிக்கப்படும் பொருட்களின் பணி நிலைகள் (Work flow) என்னென்ன?

• கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய மற்றும் விடுமுறை சம்பளம், போனஸ் தொடர்பான மற்ற சட்டதிட்டங்கள் என்னென்ன?

மேற்சொன்ன விஷயங்களை உங்கள் விரல்நுனியில் வைத்து இருப்பது அவசியம். இதனால் உங்கள் முடிவு எடுக்கும் திறனும் வேகமும் அதிகரிக்கும். அது உங்கள் மேலதிகாரியிடமிருந்து பாராட்டை பெற்றுத் தரும்.

மேற்சொன்ன விஷயங்கள் தவிர உங்கள் அலுவலகச் சூழலை உற்று கவனிப்பதன் மூலம், நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில நுட்பமான விஷயங்கள் சில உள்ளன. அவை:

1. உங்கள் அலுவலகத்தில் உள்ள எழுதப்படாத வரையறைகள் (NORMS) என்ன? சிலசமயம் இந்த வரையறைகள் எழுதப்பட்ட சட்டதிட்டங்களைவிட வலிமையானவை. உதாரணத்திற்கு, உங்கள் பாஸை பெயர் சொல்லி அழைக்கக்கூடாது. இது ஒரு எழுதப்படாத வரையறை.

2. உங்கள் அலுவலகத்தில் உள்ள நட்புக் குழுக்கள் (Informal Groups) என்னென்ன? அதில் யார் யார் உள்ளார்கள்? அந்த குழுக்கள் இடையே பிரச்னைகள் உள்ளதா? அந்த குழுக்களில் உள்ள மைய நபர் யார்? போன்ற அலுவலக அரசியல் (ளியீயீவீநீமீ றிஷீறீவீtவீநீs) சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது. இது பிரச்னைகளில் இருந்து ஒதுங்கி இருக்க உதவும். அதேபோல உங்கள் துறையிலும், தொடர்புடைய மற்ற துறைகளிலும் அனுபவம் மற்றும் அதிகார ரீதியில் முக்கியமான நபர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதும் நல்லது.

உங்கள் துறையோடு அதிகம் தொடர்புடைய துறைகள் எவை? அங்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் யார் என்பதை அறிந்து கொள்வது உங்கள் பணிகளை எளிமையாக முடிக்க உதவும்.

(தயாராவோம்)

ஓட்டல் மேனேஜ்மென்ட்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

''பன்னிரண்டாம் வகுப்பில் எந்த குரூப்பில் நீங்கள் படித்திருந்தாலும் இந்த படிப்பை படிக்கலாம். ஃபிரன்ட் ஆபீஸ், ஹவுஸ் கீப்பிங், உணவு தயாரிப்பு, ஃபுட் அண்ட் பிரிவரேஜ் என நான்கு மேஜர் சப்ஜெக்ட்டுகள் இதில் உள்ளன. தவிர, அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களும் உண்டு.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இந்த துறையில் படிச்சா ஓட்டல்ல மட்டும்தான் வேலை கிடைக்கும் என்பது தவறான கருத்து. ஓட்டல் மேனேஜ்மென்ட் வேலைக்கான ஆட்களைத் தேர்வு செய்யும்போது நிறுவனங்களை பொறுத்தே தேர்வு நடத்தப்படும். சில நிறுவனங்கள் மூன்று நிலையிலும், இன்னும் சில நிறுவனங்கள் எட்டு நிலை வரையும் இன்டெர்வியூ நடத்துகின்றன. பொதுவாக இந்த துறையில் நடத்தப்படும் இன்டெர்வியூ இப்படித்தான் இருக்கும்.

1. ஆப்டிடியூட் டெஸ்ட், 2. குரூப் டிஸ்கஷன், 3. டிரையல்,

  4. பெர்சனல் இன்டெர்வியூ, 5. மெடிக்கல்.

மேனேஜ்மென்ட், சூப்பர்வைசர் மற்றும் வொர்க்கர் என இந்த இரு துறைகளுக்கும் முதலில் வைப்பது ஆப்டிடியூட் டெஸ்ட்தான். இந்த ஆப்டிடியூட் டெஸ்ட், உங்களைப் பற்றிய பொதுவான அபிப்ராயங்கள் மற்றும் திறமைகள் பற்றி தெரிந்து கொள்ள வைக்கப்படுகிறது. இந்த டெஸ்டுக்குப் பிறகுதான் அவர்கள் எந்த துறை என்பது நிரூபணமாகும்.

குரூப் டிஸ்கஷன் தேர்வு மாணவர்களின் மொழி போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வைக்கப்படுகிறது. டிரையல் நிலையில் மாணவர்கள் தனக்கு தெரிந்த அல்லது தங்களது புதுவித உணவை சமைத்துக் காட்ட வேண்டும். பெர்சனல் இன்டெர்வியூவில் மாணவர்களின் பாடி லாங்குவேஜ் போன்றவற்றை தெரிந்து கொள்வார்கள். இவை எல்லாம் முடிந்த பின் தான் கடைசியாக மெடிக்கல் நிலை.

இப்படி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இரண்டு வருடம் பயிற்சி கொடுக்கப்படுகிறது. பின்னர் சிஞிறி (Chef de Partie) அல்லது SOUS chef என்ற நிலைக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதல் டெஸ்டில் சரியாக சாதிக்காதவர்களை வெளியே அனுப்பாமல், அந்த நபருக்கு எந்த வகை உணவில் இஷ்டமோ அந்த வகை உணவை சமைக்க வேண்டும். அதற்கேற்ப அவர்களுக்கு சூப்பர்வைசர் அல்லது வொர்க்கர் வேலை கிடைக்கும்.

வேலை வாய்ப்பு?

ஓட்டல் துறை, ஏர் ஹோஸ்டஸ் மற்றும் சப்போர்ட்டிங் ஸ்டாஃப் போன்ற வேலைகளுக்குப் போகலாம். ரயில்வே கேட்டரிங் சர்வீஸ், ஷிப்பிங் கேட்டரிங் (Marine Catering) போன்ற வேலைகள் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் இன்னும் அதிகம். இந்த துறையை பொறுத்தவரை பொறுமை மிக மிக அவசியம். இதையெல்லாம் பின்பற்றினால் வேலை நிச்சயம்.

-பானுமதி அருணாசலம்,
அ.முகமது சுலைமான்

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!