1377-ம் ஆண்டு. விஜயநகரப் பேரரசு மதுரை மண்டலத்தைத் தன்னுடைய ஆளுகையின் கீழ் கொண்டு வந்த வருடம். விஜயநகரப் பேரரசு கர்நாடகாவின் ஹம்பியை தலைநகராகக் கொண்டு செயல்பட்டது. மதுரையை சுல்தான்களிடமிருந்து கைப்பற்றியதன் மூலம் தமிழகமே விஜயநகரப் பேரரசின் கீழ் வந்தது.

. இ.தற்கு பின்பு ஆந்திராவிலிருந்து பெருமளவிலான மக்கள் தமிழகத்திற்குக் குடிபெயர ஆரம்பித்தனர். அதிலும் குறிப்பாக, திருமலை நாயக்கர் ஆட்சியின்போது அதிக அளவில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் குடிபெயர ஆரம்பித்தனர். அப்படி குடிபெயர்ந்தவர்களில் முக்கியமான சமூகத்தினர்தான் நாயுடுகள்..
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்த சமூகத்தினர் நாயக்கர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். திருமலை நாயக்கரின் வழித்தோன்றல்களாக வந்ததினால் இவர்கள் நாயக்கர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

இந்த சமூகத்தினர் தெலுங்கு பேசுகிறவர்கள். தெலுங்கு மொழியை தமிழில் 'வடகு’ என்று அழைப்பார்கள். அதனால் இந்த சமூகத்து மக்களை 'வடகர்கள்’ என்றும் அழைப்பதுண்டு. இன்று அவர்கள் நம்மவர்கள் என்று சொல்கிற அளவுக்கு தமிழ் மக்களுடன் கலந்துவிட்டனர்.

ஆந்திராவிலிருந்து வந்து பல ஆண்டுகள் ஆனபிறகும் தாய்மொழியான தெலுங்கு மொழியை இன்றும் பேசி வருகின்றனர். எனினும், தெலுங்கு மொழியில் எழுதுவது, படிப்பது போன்ற வழக்கங்கள் மெள்ள மெள்ள மறைந்து வந்தாலும், தங்களுக்குள்ள கலாசார மரபுகளையும் இதுவரை இவர்கள் கைவிடவே இல்லை. இவர்கள் வைணவ மரபைச் சேர்ந்தவர்கள் என்பதால் வைணவக் கோயில்களுக்கு அடிக்கடி சென்று வருவார்கள்.

இந்த சமூகத்தைச் சேர்ந்த பலர் இன்று பல்வேறு துறைகளில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பிரபல சினிமா இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், நடிகை ஸ்ரீதேவி போன்றோர் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ம.தி.மு.க.வின் தலைவர் வைகோ இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் இந்த சமூகத்தைச் சேர்ந்தவரே.

மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி என தென் மற்றும் மேற்கு தமிழகத்தில் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். தமிழகத்தின் வட பகுதியான சென்னை ஆந்திராவுக்கு அருகில் இருப்பதால், இங்கும் நாயுடு சமூகத்தினர் அதிகம்.

நாயுடுகளின் பூர்வீகத் தொழிலே விவசாயம்தான். ஆந்திராவில் இருந்தபோதும் விவசாயத் தொழிலில் சிறந்து விளங்கினார்கள். தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தபோதும், இவர்கள் கிராமங்களில்தான் பெரிய அளவில் வசித்தனர். ஆங்காங்கு மன்னர்கள் வழங்கிய நிலங்களை உழுது, வளப்படுத்தி, நம் உணவு உற்பத்தியைப் பெருக்கியதில் நாயுடுகளின் பங்கு அளப்பரியது.

உணவுத் தானியங்களை வளர்ப்பதோடு மட்டுமின்றி, பருத்தி போன்ற பணப் பயிர்களையும் மிளகாய் போன்ற வர்த்தகப் பயிர்களையும் அதிக அளவில் சாகுபடி செய்வதில் நாயுடுகள் சிறந்து விளங்கினார்கள்.

தமிழகத்தின் நிலப்பரப்பு வித்தியாசமானது. தென் மாவட்டங்களில் விவசாய நிலம் ஒரு மாதிரியாகவும், வட தமிழகத்தில் வேறு மாதிரியாகவும் இருக்கிறது. குறிப்பாக, கோவையைச் சுற்றியுள்ள நிலங்களில் நிலத்தடி நீருக்குப் பஞ்சமில்லை என்றாலும், அந்த நிலத்தை உழுது செப்பனிடுவது என்பது சாதாரண காரியமில்லை. ஒன்றுக்கு இரண்டு முறை உழுதால் மட்டுமே இந்த நிலத்தை ஓரளவுக்காவது பண்படுத்த முடியும். கோவையைச் சுற்றியிருந்த நாயுடு சமூகத்தினர் இந்த வேலையை கஷ்டம் பார்க்காமல் செய்தனர். இப்படி பல ஆண்டுகளாகச் செய்து வந்ததன் விளைவாக, எந்த விஷயமாக இருந்தாலும் அதில் எத்தனை கஷ்டம் வந்தாலும் கடைசி வரை போராடும் குணம் நாயுடு சமூகத்து மக்களிடம் நிறையவே உண்டு.

காலம் காலமாக விவசாயத் தொழிலில் சிறந்து விளங்கினாலும், ஆங்கிலேயர்களின் இந்திய வருகையால் ஏற்பட்ட தொழில் மாற்றங்களை சட்டென கற்பூரம் போல பற்றிக் கொண்டனர் நாயுடு சமூகத்தினர். நவீன முறையில் பருத்தி உற்பத்தி செய்வதாகட்டும், புதிய தொழில்நுட்பக் கருவிகளை அறிமுகப்படுத்துவதாகட்டும் நாயுடு சமூகத்தினர் முன்னணியில் இருந்ததன் விளைவே இன்று அந்த சமூகம் பிஸினஸிலும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

இந்த சமூகத்தின் மிகப் பெரிய பிஸினஸ்மேன்கள் பலர். அவர்களில் தலை மகனாக பிறந்தவர் பி.எஸ்.கோவிந்தசாமி நாயுடு. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிறந்தார். இவருக்கு அடுத்தபடியான பெரிய பிஸினஸ்மேன் என்றால் ஜி.டி.நாயுடு.

இப்படி இந்த சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பிஸினஸ்மேன்கள் பற்றியும், அவர்கள் பிறந்த ஆண்டு வரிசைப்படி அடுத்து வரும் வாரங்களில் விளக்கமாகப் பார்ப்போம்.

(அறிவோம்)