மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

சில வருடங்களுக்கு முன், புதிதாக வேலைக்குச் சேர்ந்த என் தோழி ஒருவருக்கு தர்மசங்கடமான அனுபவம் ஒன்று ஏற்பட்டது. அவருடைய சகபணியாளர் (ஆண்) இவரோடு உரையாடும்போதெல்லாம் தொட்டு பேசுவதாகவும், இதனால் இவர் எரிச்சலும் சங்கடமும் அடைவதாகவும் என்னிடம் கூறினார். அதேசமயம் இந்த நடுத்தர வயது சகபணியாளர் மிகவும் கனிவானவர்; உதவும் மனப்பான்மை கொண்டவர் என்பதால் அலுவலகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுபவர். எனவே, அவர் நடத்தையில் தீயநோக்கம் கற்பிப்பதும் கடினம் என தோழி என்னிடம் கூறினார். தோழிக்கு என் ஆலோசனை ''அவர் நோக்கம் எதுவாக இருந்தாலும் உனக்குப் பிடிக்காத விஷயத்தை அனுமதிக்காதே. இந்த நடத்தை தொடராமல் தடுக்க உன் அதிருப்தியை பணிவோடும், உறுதியோடும் சொல்லிவிடு'' என்பதே.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

துபோன்ற அனுபவங்கள் பல பெண்களுக்கு ஏற்பட்டிருக் கலாம். இவற்றில் பெரும்பாலானவை பாலியல் தொல்லைகள் (Sexual Harassment) என்ற வரையறைக்குள் நேரடியாக வராவிட்டாலும், அவற்றால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள் கவனிக்கப்பட வேண்டியவை. பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் நேரடியாகவும், உடல் அளவிலும் இருக்க வேண்டும் என்றில்லை. நிஜத்தில் பெரும்பாலான பாலியல் தொந்தரவுகள் மறைமுகமாகவும், உளவியல் ரீதியான பாதிப்புகளை தரக்கூடியவையாகவே இருக்கின்றன. எனவே, பணிக்குச் சேரும் பெண்கள் இத்தகைய தொந்தரவுகள் குறித்த புரிதலையும், அவற்றை சரியாக கையாளத் தேவையான உறுதியையும் வளர்த்துக் கொள்வது அவசியம்.

பணியிடத்தில் ஏற்படும் இத்தகைய செயல்கள் குறித்து ஆண்களும் விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில், அறியாமையினால் அந்த செயல்களில் நீங்கள் மறைமுகமாக ஈடுபடுவதைத் தவிர்க்க முடியும். மேலும், இரு பாலினருக்கும் இத்தகையச் செயல்கள் குறித்த விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே, உயர்பதவிக்குச் செல்லும்போது இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க உதவும்.

##~##
நேரடியான பாலியல் தொல்லைகள் தவிர, உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுத்தும் செயல்கள் எவை என பார்ப்போம்.

1. மிகவும் நெருக்கமாக நின்று உரையாடுவது.

2. தேவையில்லாமல் தொடுவது, தட்டுவது.

3. பாலியல் கலந்த ஜோக்கு களை சொல்வது அல்லது ஈ-மெயிலில் ஃபார்வர்ட் செய்வது.

4. உங்கள் உடல் அமைப்பு குறித்த கமென்ட்கள் அடிப்பது.

5. உங்களை பின் தொடர்வது.

6. அவசியமற்ற உங்கள் பெர்சனல் விஷயங்கள் குறித்து கேட்பது அல்லது தலையிடுவது.

மேற்சொன்ன விஷயங்கள் மேலோட்டமாகப் பார்ப்பதற்குச் சாதாரணமான செயல்களாக இருந்தாலும், அவை உங்களுக்குப் பிடிக்காதப் பட்சத்தில் அல்லது எரிச்சலை உண்டாக்குமெனில் அவை கண்டிப்பாகத் தவறானவையே. மேலும், பெரும்பாலான சமயங்களில் உளவியல் ரீதியாக தரப் படும் தொல்லைகள் ஆரம்பத்திலேயே கண்டிக்கப்படா விட்டால், அது உடல் ரீதியான பாலியல் தொல்லைகள் ஏற்படு வதற்கான சூழலை உருவாக்கி விடலாம்.

ஆனால், இத்தகைய மறைமுக பாலியல் தொல்லைகளை பெரிதுப்படுத்தி நாம் ஏன் தேவையில்லாதப் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள வேண்டும் என சில பெண்கள் மௌனமாக இருந்து விடுகின்றனர். இப்படி இந்த பிரச்னைகளை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதனால் பிற்காலத்தில் நேரடி யாகவும், உடல் ரீதியாகவும் பிரச்னை கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. அப்போது முன்பே ஏன் இதுபற்றி சொல்லவில்லை. எனவே, இதில் உங்கள் பங்களிப்பும் உள்ளது என உங்கள் மீதே பழி சுமத்தப் படலாம்.

மேலும் சிலர் 'துஷ்டரை கண்டால் தூர விலகு’ என்ற மனநிலையில் வேறு அலுவலகத் திற்குப் பணிமாற்றம் பெற்று இத்தகையச் சூழ்நிலைகளை தவிர்க்கின்றனர். இதுவும் இத்தகைய தொல்லைகளுக்கு நிரந்தர தீர்வாகாது.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் பல்வேறு பணியிடங்களுக்காக 203 நபர்களைத் தேர்வு செய்ய இருக்கிறது. இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஏப்ரல் 24-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

கெமிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் போன்ற பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்ப இருக்கிறது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம். ஏப்ரல் 30-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் அசிஸ்டென்ட் மற்றும் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் பதவிகளுக்கு ஆட்களை எடுக்க இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 20-ம் தேதி கடைசி.

ஏனெனில், பிற்காலத்தில் இதேபோல தொல்லைகள் ஏற்படும்போது ஒவ்வொரு முறையும் புதிய இடத்திற்கு மாறிக் கொண்டிருக்க இயலாது. இப்படி பிரச்னைகளைத் தவிர்ப்பதனால், நேரடியான பாலியல் தொல்லைகள் ஏற்படும்போது சுயபச்சாதாப உணர்வுக்கோ, இதை முளை யிலேயே கிள்ளி எறியாத குற்ற உணர்விற்கோ, மன அழுத்தத்திற்கோ ஆளாக நேரிடலாம்.

தவிர, இத்தகைய தொல்லை தரும் நபர்கள் கண்டிக்கப் படாவிட்டால் 'ருசி கண்ட பூனை போல’ எல்லோரிடமும் தங்கள் கைவரிசையைக் காண்பிக்க வாய்ப்புண்டு. இந்த பூனைகளுக்கு மணி கட்ட ஒரே வழி, அந்த நபர்களை நேரடியாக கண்டிப்பதுதான். உங்கள் அலுவலகத்தில் தவறான நோக்கத்துடன் யாராவது உங்களிடம் நடந்துகொண்டால், உங்கள் அதிருப்தியையும், மறுப்பையும் துணிவுடன் தெரிவியுங்கள். அவர்கள் நடத்தையில் உங்களுக்கு விருப்பமின்மையையும், அதனால் உங்களுக்கு ஏற் படும் மனஉளைச்சலையும் உறுதியோடு தெரிவியுங்கள்.

அதையும் மீறி அத்தகையச் செயல்கள் தொடர்ந்தால் உங்கள் அதிருப்தியையும், நிலைப்பாட்டையும் அவர் களுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவியுங்கள். ஏனெனில், இது உங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததற்கான எழுத்துப் பூர்வமான சாட்சி. இது பிற்காலத்தில் உங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகள் வருவதையும், பழி வாங்கும் நடவடிக்கைகளையும் தவிர்க்க உதவும். குறிப்பாக, அந்த நபர் உங்கள் மேலதிகாரியாக இருக்கும் பட்சத்தில், இது மிக மிக அவசியம்.

சில சமயங்களில் உங்கள் மன உறுதியால் அந்த நபர் மேலும் கோபமடைந்து பணி ரீதியாக வேறு சில தொல்லைகள் தரலாம். இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகள் உங்களுக்கு மேலும் மன அழுத்தத்தையும் மன உளைச்சலையும் தரலாம். அத்தகையச் சமயங்களில் உங்களுக்கு நம்பகமான நண்பர்களிடம் மனம்விட்டு பேசுங்கள். இத்தகைய பழி வாங்கும் நடவடிக்கைகளைச் சமாளிக்க மனிதவளத் துறையில் (HR Department) உள்ள மேலதிகாரிகளிடம் எழுத்துப் பூர்வமாக உங்கள் நிலைப்பாட்டையும் குற்றச் சாட்டையும் தெரிவியுங்கள்.

பணியிடங்களில் ஏற்படும் இத்தகைய பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பல சட்ட வரைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, அத்தகையச் செயல்களை நிறுவன நிர்வாகிகள் தடுக்கத் தவறினால் அது சட்ட விரோத மற்றும் தண்டனைக்கு உரிய செயலாகும். மேலும் தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களின் நலனை காப்பது மேலாளர்களின் தார்மீக கடமையும்கூட.

நிறுவனங்கள், இத்தகைய பாலியல் தொல்லைகள் சார்ந்த நடத்தைகளை கட்டுப் படுத்தவும், விசாரிக்கவும் ஒரு குழு அமைக்க வேண்டியது (Internal complaints committee) சட்ட வரையறையாகும். ஆகவே, பிரச்னைகள் ஏற்படும்போது இந்த குழுவிடம் முறையிடலாம்.

முறையீடு செய்தவர் யார் என்பதை அறிவிக் காமலேயே விசாரணை நடத்தவும், தண்டனையை பரிந்துரை செய்யவும் இந்த குழுவுக்கு அதிகாரம் உண்டு. இந்த குழுவிடம் முறையிட்ட பின்னும் உங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள அரசு குழுவிடம்     (District level complaints committee) உங்கள் குற்றச்சாட்டை பதிவு செய்யலாம். எனவே, இத்தகைய தொல்லைகள் ஏற்படும்போது சகித்துக் கொண்டு இருக்காமல் உங்கள் நியாயமான உரிமை களுக்காகப் போராடத் தயங்காதீர்கள்.

(தயாராவோம்)

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

ருவர் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் எனில் உணவு உட்கொள்ளும் முறையில் கவனம் செலுத்த வேண்டும். ஏதோ கண்ணில் பட்டதையும், வாய் ருசிக்கும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் உடலுக்கு வரும் நோய்களின் அளவு அதிகரிக்கும். உணவுகளை சரிவிகிதத்தில் சாப்பிடவும், உடலுக்குத் தகுந்த உணவு முறைகளைப் பின்பற்றும் முறைகள் பற்றியும் படிப்பதுதான் நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.

டிப்ளமோ படிப்புகள் மூலம் இந்த கோர்ஸ்களை படிக்கலாம். நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ் சான்றிதழ் படிப்பு ஆறு மாத காலம்தான்.

இதில் நியூட்ரிஷியன் பற்றிய அடிப்படை விஷயங்கள், டயட் உணவு வகைகள் அதன் பயன்கள், குடும்பத்திற்கான நியூட்ரிஷியன் போன்ற அம்சங்கள் இருக்கும். அடுத்து இதிலே டிப்ளமோ படிப்பும் இருக்கிறது. டிப்ளமோ இன் டயட்டிக்ஸ், ஹெல்த் அண்ட் நியூட்ரிஷியன் என்ற இந்த படிப்பில் எடை பராமரிப்பு, உணவு பராமரிப்பு போன்றவைகளை தெரிந்து கொள்ள முடியும்.

வேலைவாய்ப்பு எப்படி?

இந்த படிப்பை படிக்க 15 மாதங்கள் ஆகும். மருத்துவமனை, கார்ப்பரேட் வீடுகள், உடற்பயிற்சி நிலையங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இங்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் நியூட்ரிஷியன் படித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலைகள் கொட்டிக் கிடக்கின்றன.

-பானுமதி அருணாசலம்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!