மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப்: வளரும் துறைகள்... ஒளிரும் வேலைகள்!

கல்வி-வேலை

நாணயம் ஜாப்: வளரும் துறைகள்... ஒளிரும் வேலைகள்!

ப்ளஸ் டூ ரிசல்ட் வெளியாகி, மாணவ, மாணவிகளின் கைகளில் இப்போது மார்க் ஷீட் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இப்போதைக்கு அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி, கல்லூரியில் சேர்ந்து என்ன படிப்பு படிக்கலாம் என்பதே!  பொறியியல் தொடங்கி, மருத்துவம், கலைத் துறை என பல்வேறு படிப்புகள் இருந்தாலும், நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கல்லூரிப் படிப்பை தேர்வு செய்யும்முன், அந்த படிப்புக்கான வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது? பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டபின் அதில் படிக்க முடிவு செய்வது நல்லது.

பொருளாதார மந்தநிலை காரணமாக இன்றைய சூழ்நிலையில் எந்தெந்தத் துறை படிப்புகளில்  வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கிறது? என்பது குறித்து நவ்கரி டாட் காம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் அண்ட் ஸ்ட்ராடெஜிக் அலையன்ஸ் துணைத் தலைவர் சுமித் சிங் கூறுகிறார்.

ஐ.டி. துறை!

##~##
''2012-ம் ஆண்டில் ஐ.டி., கல்வி, பார்மா மற்றும் வங்கித் துறை நல்ல வளர்ச்சி காணும் துறைகளாக இருக்கின்றன. இந்த துறைகளில் வேலைவாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்பு அரை பில்லியன் டாலராக இருந்த ஐ.டி. துறையின் வருவாய் இப்போது நூறு பில்லியன் டாலராக வளர்ந்துள்ளது. இது இந்திய தனியார் துறைக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம்.

ஐ.டி.துறை இன்றும் இளைஞர்களின் முதல் சாய்ஸாக இருக்கக் காரணம் படித்து முடித்ததும் வேலை, கை நிறைய சம்பளம், வார இறுதி நாட்களில் விடுமுறை என அனைத்து விஷயங்களும் சாதகமாக இருப்பதால்தான்.

நாணயம் ஜாப்: வளரும் துறைகள்... ஒளிரும் வேலைகள்!
நாணயம் ஜாப்: வளரும் துறைகள்... ஒளிரும் வேலைகள்!

வெளிநாட்டு நிறுவனங் களுக்கு பல நெருக்கடியான சூழ்நிலைகள் வந்தாலும் இந்திய ஐ.டி. நிறுவனங்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் இருப்பதால் ஐ.டி. நிறுவனங்கள் இன்றும் கோலோச்சி வருகின்றன. தினம் தினம் ஏதாவது ஒரு ஐ.டி. நிறுவனம் ஆட்களை வேலைக்கு எடுத்த வண்ணம் இருக்கின்றது. சென்ற வருடத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2012-ல் அதிகளவில் ஐ.டி. துறைக்கு ஆட்களை எடுத் துள்ளனர். அதாவது, சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தைவிட இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 18% அதிகமான நபர்களை வேலைக்கு எடுத்திருக்கின்றன ஐ.டி. நிறுவனங்கள்.

2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடி நேரத்தில் பலரும் வேலையி லிருந்து வீட்டுக்கு அனுப்பப் பட்ட பரிதாபத்தை யாரும் மறந்துவிட முடியாது. அதே போன்ற நெருக்கடி நிலையில் தான் இப்போதும் இருக்கிறோம். ஆனால், 2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி நேரத்தைவிட இந்த வருடம் 35-40% வேலைவாய்ப்புகள் ஐ.டி. துறையில் மட்டும்தான் உருவாக்கப்பட்டுள்ளன.

நாணயம் ஜாப்: வளரும் துறைகள்... ஒளிரும் வேலைகள்!

அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ஆங்கிலம் பேசும் புரஃபஷனல்ஸ் இந்தியாவில் தான் அதிகம் இருக்கிறார்கள். இதனால்தான் ஐ.டி. துறைச் சார்ந்த வேலைகள் இங்கு அதிகளவில் கிடைத்து வருகிறது.

சமீபத்தில் நாங்கள் நடத்திய சர்வேயில், 2012-ம் ஆண்டில் சம்பள உயர்வு 10 -  15% அதிகம் இருக்குமென கருத்து தெரிவித் திருக்கிறார்கள். இதில் ஐ.டி. துறையில் மட்டும் 36% நபர்கள் 10-15 சதவிகித சம்பள உயர்வு இருக்குமெனவும், 24% நபர்கள் 15-20 சதவிகித சம்பள உயர்வு இருக்குமெனவும் தெரிவித் துள்ளனர். இதனை வைத்து பார்க்கும் போது ஐ.டி. துறையில் அடுத்து வரும் ஆண்டுகளில் நல்ல சம்பளம் எதிர்பார்க்கலாம்.

நாணயம் ஜாப்: வளரும் துறைகள்... ஒளிரும் வேலைகள்!


ஐ.டி. துறை சார்ந்த படிப்புகள்...

பி.இ. (ஐ.டி.), பி.எஸ்.சி. / எம்.எஸ்.சி. (ஐ.டி.), பி.டெக். (ஐ.டி.), எம்.சி.ஏ. போன்ற படிப்புகள் ஐ.டி. துறைச் சார்ந்த படிப்பு களாக உள்ளன. இதில் பி.இ. மற்றும் பி.டெக் (ஐ.டி.) படித்து வருபவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. பி.எஸ்.சி. மற்றும் எம்.சி.ஏ. முடித்தவர் களுக்கு இதற்கு அடுத்தபடியாக சம்பளம் கிடைக்கிறது.

இன்றையச் சூழ்நிலையில் அதிகபட்சமாக டீம் மேனேஜருக்கு வருட சம்பளம் 10 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது. படிப்பு முடிந்ததும் புதிதாகப் பணிக்கு வருபவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் மூன்று லட்சம் வரை சம்பளம் கிடைக்கிறது.

(அடுத்த வாரம் இன்னொரு துறையைப் பற்றி பார்ப்போம்.)  

-பானுமதி அருணாசலம்