Published:Updated:

தங்கத்துக்கு `லைக்', ரியல் எஸ்டேட்டுக்கு `அன்லைக்'... 2020-ல் முதலீட்டுக்கு உகந்தது எது?

முதலீட்டு
முதலீட்டு

பெரும்பாலான நகரங்களில் ரியல் எஸ்டேட் விலை கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 15 - 20% வரை குறைந்திருக்கிறது.

தங்கம்: 2012-13 காலகட்டத்தில் உச்சத்தை அடைந்த தங்கம், பின்னர் சர்வதேச அளவில் 20% வரை வீழ்ச்சிகண்டது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவிழந்ததால் தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்தது. ஆனால், அண்மையில் சற்று ஏற்றம் கண்டிருக்கிறது.

தற்போது சர்வதேச நிதிச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், குறிப்பாக அமெரிக்கா போன்ற முக்கியப் பொருளாதார நாடுகளில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறையும், முதலீட்டாளர் களிடையே நிதிசார் சொத்துகள் மீதான பயமும் அதிகரித்துள்ளது. நிதிச் சந்தைகள் நிலையற்ற தன்மையைக் கொண்டிருக்கும் போது அந்த இடத்தைத் தங்கம் நிரப்புகிறது.

எனவே, சர்வதேசச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் தங்கத்துக்கான தேவை முதலீட்டாளர்களிடையே அதிகரிக்கும். இதனால் 10 - 15% முதலீட்டைத் தங்கத்தில் வைத்திருக்கலாம். இதில் கிடைக்கும் வருமானம் குறைவாக இருந்தாலும், தங்கத்திலிருக்கும் முதலீடு போர்ட்ஃபோலியோவை நிலையாக வைத்திருக்க உதவும்.

ரியல் எஸ்டேட்: பெரும்பாலான நகரங்களில் ரியல் எஸ்டேட் விலை கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 15 - 20% வரை குறைந்திருக்கிறது. தற்போது ஏற்பட்டிருக்கும் சரிவு அதீத சப்ளையாலும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குக் கடன் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாலும், ரெரா உள்ளிட்ட சட்டங்கள் கடுமையானதாலும் ஏற்பட்டிருக்கிறது. விரிவான அலசலுக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2SLwLnw

தங்கத்துக்கு `லைக்', ரியல் எஸ்டேட்டுக்கு `அன்லைக்'... 2020-ல் முதலீட்டுக்கு உகந்தது எது?

எனவே, இந்தத் துறையிலுள்ள நெருக்கடி நீண்டகாலத்துக்குத் தொடரும் வாய்ப்பு அதிகம். எனவே, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய சிறிது காலம் பொறுத்திருந்து முடிவு செய்யுங்கள்.

- 'சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் வரலாறு காணாத உச்சத்தில் இருந்தாலும், போர்ட்ஃபோலியோ ஏன் இறக்கத்தில் இருக்கிறது... சந்தை ஒரு சில பங்குகளின் ஏற்றத்தால் உச்சம்கண்டிருக்கிறதே தவிர, பெரும்பாலான பங்குகள் இறக்கத்தில் உள்ளன. இந்தப் போக்கு தொடருமா?'

'தற்போது இந்தியாவில் அனைத்துத் துறைகளுமே மந்தநிலையைச் சந்தித்திருப்பதை ஜி.டி.பி வளர்ச்சி குறைவதன் மூலம் அறிய முடிகிறது. இந்த மந்தநிலை எவ்வளவு காலம் நீடிக்கும்... நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதைக் குறைத்துக்கொள்ளலாமா... பெரும்பாலான சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை வெகுவாகக் குறைத்துள்ளன; பல நாடுகளில் வட்டி விகிதம் எதிர்மறையாக உள்ளது; ஆனால், இந்தியாவில் வட்டி விகிதம் எதிர்பார்த்த அளவுக்குக் குறையவில்லை. இதனால் கடன் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா?'

- இப்படிப் பல கேள்விகள். அவற்றுக்கான பதில்களை இனி விரிவாகச் சொல்கிறார், யுனிஃபை கேப்பிட்டல் செயல் இயக்குநர் ஜி.மாறன். நாணயம் விகடன் இதழின் இந்தக் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > வெல்கம் 2020 : புத்தாண்டில் உங்கள் முதலீடுகள்! - அஸெட் அலொகேஷன் 2020 https://www.vikatan.com/news/investment/where-to-invest-on-this-new-year-asset-allocation-2020

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு