கல்வி-வேலை

சென்ற வாரம் ஐ.டி. துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள், சம்பளம், படிப்புகள் குறித்து விரிவாகப் பார்த்தோம். அதுபோல இந்த வாரம் கல்வித் துறை குறித்து விரிவாகச் சொல்கிறார் நவ்கரி டாட் காம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் அண்ட் ஸ்ட்ராடெஜிக் அலையன்ஸ் துணைத் தலைவர் சுமித் சிங்.
##~## |
பிரைமரி பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை கல்வி சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகள் பல கொட்டிக் கிடக்கின்றன. கடந்த வருடம் மட்டும் 30-40 சதவிகிதம் வரை கல்வித் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இது அடுத்து வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த இருபது வருடங்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதில் கல்வித் துறை நன்றாக இருக்கும் என சமீபத்திய சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. கல்வித் துறை என்பது பெண்களுக்கு மிக ஏற்ற துறை. இரண்டு வருட அனுபவங்கள் இருந்தால்கூட நல்ல சம்பளம் கொடுக்கப்படுகிறது. பல கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை மற்றும் டாக்டரேட் என பல படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.
கல்வித் துறை என்றதும் ஆசிரியர் பணி என்பது மட்டு மல்லாமல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, புராடக்ட் மேனேஜர்கள், கன்டன்ட் டெவலப்பர்ஸ் என பல பணிகள் இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகள், டியூசன் சென்டர்கள் என பலதரப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருகிறது கல்வித் துறை.

கல்வி முறை!
இந்திய கல்வி முறை இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில், பள்ளிகள் மற்றும் உயர்கல்வி பள்ளிகளை முறை சார்ந்த (ஃபார்மல்) கல்வித் துறை எனவும், ப்ரீ ஸ்கூல், மல்டிமீடியா, பயிற்சிப் பள்ளிகள், கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் போன்றவைகள் முறைசாராத (இன்ஃபார்மல்) கல்வி முறைகளாகவும் கூறப் படுகிறது.
தற்போது சின்ன கிராமங் களில்கூட பிரைமரி பள்ளிகள் வந்துவிட்டன. குறைந்த பட்சமாக 5,000 ரூபாய் முதல் சம்பளம் வழங்கத் தயாராக உள்ளன. மேலும், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் என எங்கும் முளைக்கும் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.


படிப்புகள்!
ஆசிரியர் பயிற்சிப் படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகள், பி.ஹெச்.டி., கணினி சம்பந்தப்பட்ட படிப்புகள் போன்றவற்றுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது.


தமிழில் நல்ல வாய்ப்பு!
ஆசிரியர் பணியைப் பொறுத்துவரை தமிழுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் தமிழ் முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. எனவே பி.ஏ., எம்.ஏ. (தமிழ்) எடுத்து படிப்பவர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

சம்பளம்!
பொருளாதார நெருக்கடி வந்தாலும், கல்வி சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் வராது.
பிரைமரி பள்ளி ஆசிரியர் களுக்குப் பத்தாயிரம் ரூபாய் வரையும், நடுநிலை பள்ளிகளுக்கு இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் ரூபாய் வரையிலும், மேல்நிலைப் பள்ளிகளில் நாற்பதாயிரம் ரூபாய் வரையிலும் சம்பளம் பெற முடியும்.
அரசுக் கல்லூரி பேராசிரியர் கள் எனில் அதிகபட்சமாக ஐம்பதாயிரம் ரூபாயும், தனியார் கல்லூரி எனில் இருபத்தைந்து ஆயிரம் வரையிலும் சம்பளம் கிடைக்கும். ஆசிரியர் பணி அல்லாத கல்வித் துறை வேலை வாய்ப்புகளுக்கு இருபதாயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது. சம்பள உயர்வை பொறுத்தவரை 15-28 சதவிகிதம் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
கல்வித் துறை: சில தகவல்கள்!
• மார்ச் 2012 காலாண்டில் ஐம்பது சதவிகித காலியிடங்கள் கல்வித் துறையில் நிரப்பப் படாமல் இருக்கிறது.
• உலகளவில் கல்வித் துறையில் இந்தியா மூன்றாம் இடத்தை வகிக்கிறது.
• ஒரு மில்லியன் பள்ளிகள் மற்றும் இருபதாயிரத்துக்கும் அதிகமான உயர் கல்வி நிலையங்கள் இருக்கின்றன. (அடுத்த வாரம் இன்னொரு துறையைப் பற்றி பார்ப்போம்.)
-பானுமதி அருணாசலம்.

|

கம்பெனி நடத்துகிறீர்களா? நேரடியாக உங்களின் கீழ் எத்தனை பேர் வேலை பார்த்தால், அது அசாத்திய திறமை கொண்ட அணியாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? 8 பேர்?, 10 பேர்? இல்லை, ஒன்பது பேர் என்கிறார்கள், அண்மையில் இது தொடர்பாக ஆராய்ச்சி நடத்திய அமெரிக்க நிர்வாக அறிஞர்கள். என்ன காரணத்தாலோ 8 பேர் அல்லது 10 பேர் தலைமை மேனேஜ்மென்டில் இருந்த கம்பெனி களைவிட 9 பேர் வழி நடத்திய நிறுவனங்கள் அமோக வெற்றி கண்டிருக்கிறதாம்! - அத்வைத் |