கல்வி-வேலை


ஐ.டி., வங்கி, கல்வித் துறைக்கு அடுத்து வேலைவாய்ப்புகள் அதிகளவில் வழங்கும் துறைகளில் பார்மா துறை இருக்கிறது. உலகளவில் இந்தியாவின் பார்மா துறை மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மேலும், இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் உலகின் பல நாடுகளுக்குச் செல்கின்றன. பார்மா ஏற்றுமதி ஆண்டுக்கு சுமார் 22% வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்தியாவில் சுமார் இருபதாயிரத்திற்கும் அதிகமான மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் இந்தியத் தயாரிப்பு நிறுவனங்கள் குறைவு. வெளிநாட்டு பார்மா நிறுவனங்கள்தான் இந்தியாவில் மருந்து தயாரிப்பில் ஈடுபடு கின்றன. இதற்குக் காரணம், வெளிநாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் குறைந்தச் செலவில் மருந்துகள் தயாரிக்க முடிவதே. பார்மா துறை வேலைவாய்ப்புகள் குறித்து நவ்கரி டாட் காம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் சுமித் சிங் தெரிவிக்கிறார்.
''இந்தியாவில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரும் துறைகளில் பார்மா துறை மிக முக்கியமானது. 2011 ஏப்ரல் மாதத்தைவிட 2012 ஏப்ரல் மாதத்தில் 22% வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதுவே 2012-ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கு மட்டும் பார்க்கும்போது ஜனவரி மாதத்தைவிட ஆறு சதவிகிதமும், மார்ச் மாதத்தை விட மூன்று சதவிகிதமும் வேலை வாய்ப்புகள் அதிகரித் துள்ளன.
வேலைவாய்ப்புகள்!

பார்மா துறையில் அனை வரும் அறிந்த வேலை விற்பனை பிரதிநிதி. ஆனால், இந்த வேலையையும் தாண்டி இன்னும் ஏராளமான வேலை கள் இருக்கின்றன. சில்லறை மற்றும் மொத்த விற்பனை, புராடக்ட் மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், டேட்டா மேனேஜ்மென்ட் மற்றும் மக்கள் தொடர்பு என பலவிதங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
இதில் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் என்பது புராடக்ட் மேனேஜ்மென்ட், பிராண்ட் மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங், சந்தை ஆய்வு மற்றும் பிஸினஸ் டெவலப்மென்ட் போன்ற பணிகளை உள்ளடக்கியது ஆகும். இது மட்டுமல்லாமல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகள் மார்க்கெட்டிங் செய்வது, ஆயுர்வேதிக், ஹோமியோபதி, கால்நடை மருந்துகள் விற்பனை செய்வது என ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.

படிப்புகள்!
##~## |
மேலும் பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகள் பார்மா துறைக்கு மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட தேவைப்படுகிறது. பி.பார்ம். படித்தவர்கள் சொந்தமாக மருந்துக் கடை வைக்க முடியும் என்பதால் சொந்தமாக பிஸினஸ் செய்ய நினைப்பவர்கள் இந்த படிப்பை தேர்வு செய்யலாம்.

சம்பளம்!
பார்மா துறையில் அதிக ளவில் பணிபுரியும் மருத்துவப் பிரதிநிதிக்கு ஆரம்ப கட்ட சம்பளமாக மாதத்திற்கு 8,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. சில கம்பெனிகள் டார்கெட்டை அடைந்தால் இன்சென்டிவ் வழங்கவும் செய்கிறது. வேலை நன்றாகச் செய்யும்பட்சத்தில் மருத்துவப் பிரதிநிதிகள் ஏரியா மேனேஜர், ரீஜினல் மேனேஜர், ஜோனல் மேனேஜர், விற்பனை மேலாளர், மார்க்கெட்டிங் மேனேஜர், ஜெனரல் மேனேஜர், துணைத் தலைவர், தலைவர், சி.இ.ஓ. போன்ற உயர் பதவிகளை எட்ட முடியும். மேலும், பி.எஸ்.சி. படிப்புடன் எம்.பி.ஏ. படித்தாலோ அல்லது பி.பார்ம் படிப்புடன் எம்.பி.ஏ. படித்திருந்தாலோ நல்ல சம்பளம் கிடைக்கிறது. புராடக்ட் மேனேஜர்களுக்கு ஆரம்ப கட்ட சம்பளமாக 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை கிடைக்கும்.

சம்பள உயர்வு!
நவ்கரி டாட் காம் நடத்திய கருத்துக் கணிப்பில் பார்மா துறையில் 10 முதல் 15 சதவிகித சம்பள உயர்வு இருக்கும் என கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். படித்து முடித்தவர்களுக்கு உடனே வேலை கிடைக்கும் துறை.
அதிகரித்து வரும் புதிய மருத்துவமனைகள், நோய்கள் காரணமாக அதிகளவில் பார்மா நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதித்து வருகின்றன. இனிவரும் ஆண்டுகளிலும் பார்மா துறைக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால் இந்த துறைச் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்யலாம் மாணவர்கள்.
-பானுமதி அருணாசலம்