மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

இன்ட்ரா டே டிரேடிங்: என்னென்ன கவனிக்கணும்?

கேள்வி-பதில்

இன்ட்ரா டே டிரேடிங்:
என்னென்ன கவனிக்கணும்?

இன்ட்ரா டே டிரேடிங்: என்னென்ன கவனிக்கணும்?

நான் பணியாற்றும் நிறுவனம், எனக்கு மூன்று லட்ச ரூபாய்க்கு குரூப் மெடிக்ளைம் ஃப்ளோட்டர் பாலிசி, 15 லட்ச ரூபாய்க்கு டேர்ம் பாலிசி எடுத்து கொடுத்துள்ளது. இது போதுமா? நான் தனியாக வேறு இன்ஷூரன்ஸ் பாலிசி எதுவும் எடுக்க வேண்டுமா?

கணேஷ்குமார், மதுரை.

##~##
ஜெய்சங்கர்,
வெல்த் அட்வைஸர், இந்தியா நிவேஸ் செக்யூரிட்டிஸ்.

''இன்ஷூரன்ஸ் திட்டங் களை பொறுத்தவரை தனிப் பட்ட முறையில் நீங்களும் கவனம் செலுத்துவதே பாதுகாப்பானது. காரணம், பணி மாறுதல் போன்ற சந்தர்ப்பங்களில் அலுவலகம் மூலம் எடுக்கப்பட்ட பாலிசி பலன் தராது. குடும்பத்துக்கான மெடிக்ளைம் பாலிசியைக் குறைந்தபட்சம் ஐந்து லட்ச ரூபாயாக உயர்த்திக் கொள்ள லாம். பதினைந்து லட்ச ரூபாய்க்கு நீங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பது குறைவான கவரேஜ் தொகை என்பதால் அதையும் அதிகரித்துக்கொள்வது நல்லது.

வருடத்திற்கு ரூ.8,000 பிரீமியத்தில் ஒரு கோடி ரூபாய் வரை கவரேஜ் அளிக் கும் டேர்ம் பிளான்கள் இருக் கின்றன. எனவே, அலுவலகம் கொடுக்கும் இன்ஷூரன்ஸ் திட்டங்களை மட்டுமே நம்ப வேண்டாம். ஆனால், பிரீமியம் செலுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பதை மட்டும் பாருங்கள்''.  

இன்ட்ரா டே டிரேடிங்: என்னென்ன கவனிக்கணும்?

நான் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறேன். நான் இங்கிருந்தபடியே இந்தியாவின் பங்குச் சந்தையில் ஈடுபட நடைமுறைகள் என்ன?

டி.கோபிகிருஷ்ணன், சவுதி அரேபியா.

பழனியப்பன் மெய்யப்பன், இயக்குநர், விராமத் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ்.

''வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.க்கள்) இந்திய பங்குச் சந்தைகளில் ஈடுபட என்.ஆர்.இ. / என்.ஆர்.ஓ. சேமிப்பு கணக்கு அவசியம். மேலும், போர்ட்ஃபோலியோ இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம் (றிமிஷி) கணக்கு ஒன்றை யும் தொடங்கிக்கொள்ள வேண்டும். நீங்கள் அங்கிருந்த படியே இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளை வாங்கவோ விற்கவோ செய்ய லாம்.

ஆனால், உங்களது பி.ஐ.எஸ். கணக்கு மூலமாக மட்டுமே பணப் பரிவர்த்தனை நடக்கும். வெளிநாட்டில் இருந்துகொண்டு இங்குள்ள பங்குச் சந்தைகளில் தினசரி வர்த்தகத்தில் (டே டிரேடிங்) ஈடுபட முடியாது.''

இன்ட்ரா டே டிரேடிங்: என்னென்ன கவனிக்கணும்?

நான் இரண்டு வருடமாக பவர் டூல்ஸ் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறேன். என் பங்குதாரர் ஆறு  மாதத்துக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இத்தொழிலில் ஒரு  வருடத்துக்கு அவர் ஈடுபடக்கூடாது என்கிற ஒப்பந்தத்தை ஏற்கெனவே செய்துகொண்டுள்ளோம். அவ்வாறு ஈடுபடாமல் இருக்க தனியாக இழப்பீடும் பெற்றுக்கொண்டார். ஆனால், ஆறு மாதத்துக்குள்ளாகவே ஒப்பந்தத்தை மீறி அதே தொழிலை செய்து எனது தொடர்பிலுள்ள நிறுவனங்களுக்கே பொருட்களையும் சப்ளை செய்கிறார். இதை தடுக்க முடியுமா? இதற்கு நான் என்ன செய்வது?

சார்லஸ், சென்னை.

என்.ரமேஷ், வழக்கறிஞர்.

''தன் நிறுவனத்தையும், அதன் பிராண்டையும் விற்கும் ஒருவர் அந்த தொழிலைப் போலவே, தனியாக தொழில் செய்யாமலிருக்க ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தன்னை கட்டுப்படுத்தி ஒப்பந்தம் செய்துகொள்வது சட்டப்படி செல்லும். அதன் அடிப்படையில் தங்கள் பங்குதாரர் அதே தொழிலை ஒரு வருடத்திற்கு செய்யாமலிருக்க தங்களிடம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் செல்லும்.

ஒப்பந்தத்தை மீறி அவர் செயல்பட்டுள்ளதால், மீதமுள்ள காலத்திற்கு அவ்வாறு செயல்படக்கூடாது என்றும், ஒப்பந்தத்தை மீறியதால் அதற்கான இழப்பீடும், தொழில் செய்யாமலிருக்க தங்களிடம் பெற்ற தனியான இழப்பீட்டை திரும்ப தரக் கோரியும், இதுவரை அவர் தொழில் செய்து கிடைத்த லாபத்தைத் தரக்கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.''

இன்ட்ரா டே டிரேடிங்: என்னென்ன கவனிக்கணும்?

பங்குச் சந்தை தினசரி வர்த்தகத்தில் (இன்ட்ரா டே டிரேட்) கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?

கதிரேசன், உடுமலை.

எஸ்.லெட்சுமணராமன், பங்குச் சந்தை ஆலோசகர்.

''தினசரி வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் மனக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கோடு நடந்துகொள்ள வேண்டும். பொருளாதார, அரசியல் நிகழ்வுகள், ரிசர்வ் வங்கியின் முடிவுகள் அடிப்படையில் அன்றைய தினத்தின் சந்தை போக்கை கணிக்க கற்றுக் கொள்வது முக்கியம். மேலும், உலக அளவிலான சந்தையின் பாதிப்புகளை கவனிப்பது, வர்த்தகம் செய்யக்கூடிய பங்கின் தகவல்களை அறிந்து கொள்வது, டெக்னிக்கல் அனாலிசிஸ் அறிக்கைகள் மற்றும் சந்தையின் போக்கு களை உடனடியாக அறிந்து கொள்வது அவசியம். இதன் அடிப்படையில் அதிக அளவில் வர்த்தகமாகும் (வால்யூம்) பங்குகளை தேர்ந்தெடுப்பதும், வர்த்தகத்தில் ஈடுபடும் முன்னர் இழப்பு தடுப்பு நிலையை (ஸ்டாப் லாஸ் லெவல்) தீர்மானித்துக் கொள்ளவும் வேண்டும். எதிர்பார்த்த லாபம்/நஷ்டத்துக்கு ஏற்ப உடனே விற்றுவிடுவதும், கிடைத்த நியாயமான லாபத்தை 'புக்’ செய்துவிடும் மனக் கட்டுப்பாடும் வேண்டும்.

சந்தை தொடங்கிய உடனே வர்த்தகத்தில் இறங்காமல், சந்தையின் போக்கை அறிந்து இறங்குவதும், அதேபோல சந்தை முடியும் வரை காத்திருக் காமல் முன்கூட்டியே வெளி யேறுவதும் அவசியம். தினசரி வர்த்தகத்தில் ஈடுபட யோசிப்பவர்கள் முதலில் காகித வர்த்தகம் (பேப்பர் டிரேடிங்) செய்து பழகி, அதில் நிபுணத்துவம் கிடைத்த பின்னரே டிரேடிங் செய்ய இறங்குவது நல்லது.''  

எனது நெருங்கிய உறவினர் வீடு கட்ட வங்கிக் கடன் வாங்கியபோது என் பெயரையும் (Co -  Borrower) சேர்த்துக்கொண்டு வங்கிக் கடன் வாங்கினார். தற்போது வங்கிக் கடனை அவர் கட்டாத நிலையில் தவணையையும் நான் செலுத்தி வருகிறேன். அந்த கடனுக்குக் கட்டும் வட்டிக்கும் அசலுக்கும் நான் வரிச் சலுகை பெற முடியுமா?

ஆர்.லெஷ்மிநாராயணன், சென்னை.

கே.ஆர்.சத்தியநாராயணன், ஆடிட்டர்.

''வீட்டுக் கடனுக்கான கடனை இணை கடன்தாரர் திருப்பிச் செலுத்தும்போது வரிச் சலுகை பெற முடியாது. சொத்தின் உரிமையாளர் பெயரில் வீட்டுக் கடன் வாங்கப்பட்டிருந்தால் அவர் மட்டுமே வரிச் சலுகை பெற லாம். ஜாயின்ட் ஓனர்ஷிப் அடிப்படையில் கடன் வாங்கியிருந்தால் விகிதாச்சார அடிப்படையில் வரிச் சலுகை பலன்களை பெறலாம். இணை கடன்தாரர் மொத்த கடனையும் கட்டினாலும் வரிச் சலுகை பெற முடியாது.''

இன்ட்ரா டே டிரேடிங்: என்னென்ன கவனிக்கணும்?