மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

கரன்சி டிரேடிங்!

கரன்சி டிரேடிங்!

கரன்சி டிரேடிங்!

குன்னூரிலிருந்து சாமியின் நண்பரை பிக்-அப் செய்துகொண்டு காரில் வரும்போது சாமியின் நண்பர், ''டாலர் என்னவாகும்?' என்று கேட்டார். செல் அவசர அவசரமாக சாமி சொன்ன ஃபேன்டா கதையை அவரிடம் அவிழ்த்துவிட்டான். 'திஸ் இஸ் பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி மேன். ஐ வான்ட் டு நோ த ஃபியூச்சர் பிரைஸ் பிரிடிக்ஷன்’ என்றார் அவர்.

##~##
தைக் கேட்டு செல் திருதிருவென முழிக்க ஆரம்பிக்க, ஒருமுறை அவனை நோட்டம் விட்டார் சாமி. 'அடேய், இதுக்குத்தான் ஒரு விஷயத்தைப் பத்தி முழுசாச் சொல்லி முடிச்சு நீ கேட்டு புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடியே ஜங்கு ஜங்குன்னு குதிக்கப்படாது’ என்பதே அந்த பார்வைக்கு அர்த்தம்.

சற்று நேரத்தில் பங்களா விற்கு கார் வந்து சேர சாமியின் நண்பர் 'ஐ வான்ட் டு டேக் ரெஸ்ட்’ என்று ஸ்டைலாகச் சொல்லிவிட்டு போய்விட்டார்.

'டேய்! பசங்களா வாங்க ஃப்ளவர் ஷோவுக்குப் போவோம்’ என்று சாமி மீண்டும் கிளம்பி கார் ஏறினார். 'சாமி ஏதோ பர்ச்சேஸிங் பவர் பேரிட்டி (பிபிபி) என்றாரே உங்க ஃப்ரண்டு. அது என்ன?’ என்று மெள்ள ஆரம்பித்தான் செல்.

'போன வாரம் நான் சொன்னேன்ல! இந்தியாவி லேயும், அமெரிக்காவிலேயும் விக்கற ஒரு பொருளோட விலையில் உள்ள வித்தியா சத்தைப் பத்தி, அதைத்தான் அப்படிச் சொன்னார் அவர்’ என்றார் அவர்.

''ஃபுல் கன்வர்டபிலிட்டி இருக்கிற இரண்டு நாட்டுக்குள்ள இப்படி விலை வித்தியாசம் இருந்தா, அந்த நாட்டின் கரன்சிகளோட விலை மாறி வித்தியாசத்தை நேர் பண்ணிடும் என்பது தியரி. அதைத்தான் பிபிபி என்று சொல்வாங்க'' என்றார்.

''நீ கேட்ட எதிர்காலம் குறித்த கணிப்பில் தியரிட்டிக்கலா இது கொஞ்சம் உதவும். சொல்ல வந்ததை முடித்தேனா இல்லையான்னே தெரியாம அந்த ஆளுக்கிட்ட உளறிக் கொட்டி, உனக்கு  மூக்கு உடைஞ்சதுதான் மிச்சம்'' என்று சொல்லி வெடிச்சிரிப்பு சிரித்தார் சாமி.

''பர்கர்ன்னு ஏதோ சொன்னீங்களே!'' என்றான் செல் கொஞ்சம்கூட தளராமல். ''நாம ஃபேன்டாவை உதாரணமா வச்சுப் பேசி னோம். வேணுமின்னா, ஒரு செல்போனைக்கூட உதாரணமா வச்சுப் பேசலாம். இந்த மாதிரி பொருளிலே எல்லாம் ஒரு சிக்கல் இருக்கு. உதாரணத்துக்கு ஃபேன்டாவோட எசன்ஸ் அமெரிக்காவில இருந்து இந்தியாவுக்கு வருது.

செல்போனோட டிசைன், டெக்னாலஜி, ஸ்பேர்களுன்னு பல விஷயங்கள் பல நாடுகளி லேயிருந்து வருது. இந்த பொருட்களோட விலை மூவ்களும், கரன்சியோட விலை மூவ்களையும் கம்ப்பேர் செஞ்சு பார்த்து கண்டுபிடிக்கிறது சிரமம்.

அதனாலே இந்த மாதிரி கம்ப்பேர் பண்ண முழுக்க முழுக்க உள்ளூர் சாமான்களை வச்சுகிட்டு உள்ளூர் டெக்னாலஜியை யூஸ் பண்ணி லோக்கலியே தயாராகிற ஒரு பொருளையோ அல்லது சர்வீஸையோ எடுத்துக்கிடலாம். அப்படி ஒரு பொருளையோ சர்வீஸையோ சொல்லு பார்ப்போம்'' என்று கேள்வியைப் போட்டார்.

செல் அவசரமாக, ''சாமி சர்வீஸில ஹேர்கட்டிங்கை ஒரு உதாரணமா எடுத்துக்கலாமா?'' என்றான். சாமி கடுப்பாவார் என்று நினைத்தால் ''கரெக்ட்'' என்று ரியாக்ஷன் தந்தார்.  அதைவிட சூப்பராக கணக்கிட உதவுவது மெக்டொனோல் ஸோட பர்கர். பல நாடுகளில வியாபாரமாகுது இது. இதுக் கான மூலப்பொருள் முழுக்க முழுக்க லோக்கலிலேயே கிடைக்குது. அதனாலே பர்கர் விலை ஒவ்வொரு நாட்டிலும் என்ன நிலைமையில இருக்குன்னு பார்த்து அதன்படி கரன்சியோட மதிப்புகளையும் கணக்கிட்டு, ஆக்சுவலா இருக்கிற விலைக்கும் கணக்கிட்ட மதிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை எகனாமிஸ்ட் பத்திரிகை வெளியிடுது. முதல்ல அதைப் பாரு!'' என்றார்.

கரன்சி டிரேடிங்!

''சாமி, இதனால எதிர்கால கரன்சி விலையை கண்டுபிடிக் கிறதுல என்ன உதவி?'' என்றேன் நான். ''முழு கன்வர்டபிலிட்டி இருக்கிற நாடுகளில பர்கர் விலை வித்தியாசம் இருந்தா கரன்சிகள் விலை மாறி அந்த வித்தியாசத்தைக் குறைச்சுடும் என்பதுதான் தியரி'' என்றார் சாமி.

''சாமி தியரி, தியரி அப்படீங் கிறீங்களே! ப்ராக்டிகலான விஷயங்களை எப்போது சொல்வீங்க?'' என்றான் செல்.

''அடேய், பேரிட்டிங்கிறது தியரியே ஆனாலும் இருந்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயம். பேரிட்டிங்கிற வார்த்தையே இன்னைக்கு கரன்சி சந்தையில இருக்கிற ஸ்பெக்குலேஷனிலே மறந்து போயிடுச்சுன்னாலும் அடிப்படைத் தத்துவம் இதுதான்.

இன்ப்ளேஷன் மற்றும் வட்டி விகிதம் கரன்சியோட மூவ்மென்டை பெரிதா பாதிக்கும். வட்டி விகிதம் குறைவா இருந்து நல்லதொரு பொருளாதாரச் சூழ்நிலையும் வளர்ச்சியும் இருந்தா, நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும். வேலை கிடைச்சு சம்பளமும் கிடைச்சா, ஜனங்க அதிகமா பொருட்களை வாங்குவாங்க. பொருட்களை அதிகமா வாங்கினா என்னவாகும்?

லாபங்கள் அதிகமாகும். உற்பத்தி பெருகும். எந்தெந்த நாடுகள் வட்டியை அப்படியே வைச்சுருக்கப் போகுது, எந்தெந்த நாடுகள் குறைக்கப் போகுது, எந்தெந்த நாடுகள் கூட்டப் போகுதுன்னும் ஒரு கண் வச்சுக்கணும்.

அப்பத்தான் பல கரன்சிகளோட விலை மூவ்கள் எப்படியிருக்குமுன்னு உடனுக்குடன் கம்ப்பேர் செஞ்சு வியாபாரம் செய்ய வசதியா இருக்கும். ஜி.டி.பி. வளரும். கச்சா எண்ணெய், தங்கம், காப்பர் போன்றவற்றின் விலை மூவ்மென்டுகளும் கரன்சியோட விலையை பாதிக்கும்'' என்று அடுக்கிக் கொண்டே போனார் சாமி.

''என்ன சாமி, இப்படி அடுக்கிகிட்டே போறீங்க?'' என்றேன் நான்.

''பின்னே, ஃபாரெக்ஸ்ன்னா சும்மாவா!'' என்றார் சாமி. ''வேற என்னென்ன விஷயத்தை நாம் முக்கியமா பார்க்கணும்?'' என்றான் செல்.

''கரன்சி டிரேடிங்கிற்கான முக்கியமான ஃபண்டமென்டல் விஷயங்களை \ பணப்புழக்கம்,  பொருளாதாரம், அரசியல், வானிலை, சீசன்கள் மற்றும் பொருளாதார சுழற்சிகாலங் கள்தான் நிர்ணயிக்குது. இவற்றில் பெரும்பாலா னவற்றை, தற்சமயத்தில் இருப்பதை அளவிடவும் எதிர்காலத்தில் வரவிருப்பதைக் கணிக்கவும் முடியும்'' என்றார் சாமி.

''சாமி, இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயமாச்சே! விவரங் கள் விலாவாரியா வெளிய வரவே வெகு நாளாகுமே!'' என்றான் செல்.

''பெரிய விஷயம்தான். கூட்டிக் கழிச்சு பார்க்குறதும் கஷ்டம்தான். என்ன பண்றது நாலு காசு பாக்கணுமின்னா கொஞ்சம் கஷ்டப்படத்தானே வேணும்'' என்றார் சாமி.

''இதை மட்டும் பார்த்தா போதாது! வேற சில விஷயங் களும் கரன்சியோட மதிப்பை பாதிப்படையச் செய்யுது'' என்று தொடர்ந்தார் சாமி.

''வேற சில விஷயமா? இப்பவே கண்ணைக் கட்டுதே சாமி!'' என்றான் செல்.

''இது ஒண்ணும் சிரமமானது இல்லை. ரிசர்வ் வங்கிகள் அந்த நாட்டோட கரன்சி மதிப்பை சீரா மெயின்டெயின் பண்றதுக்கு சந்தையில அப்பப்ப கரன்சியை விக்கவும் வாங்கவும் செய்வாங்க. அதனால கூட மதிப்புகள் மாறிட வாய்ப் பிருக்கு. யாராவது ஒருத்தன் புத்திகெட்டத்தனமா டிரேட் செஞ்சு கரன்சியோட மதிப்பை தாறுமாறா கொஞ்ச நாளைக்கு மாத்தக்கூட சான்ஸ் இருக்கு'' என்று பயமுறுத்தினார் சாமி.

''ஓ! இதைத்தான் ரோக் டிரேடருன்னு சொல்றாங் களா?'' என்றான் செல்.

''ஆமா, ஏற்கெனவே பலமுறை பேப்பரில படிச்சி ருப்பியே. வங்கியில இருக்குற டிரேடர்கள் டிரேட் பண்ணி வங்கியையே முழுகவச்ச கதையையெல்லாம்! இந்த மாதிரி ரோக் டிரேடர்கள் வியாபாரம் பண்றப்ப கொஞ்ச நாளைக்கோ அல்லது கொஞ்ச நேரத்திற்கோ கரன்சியோட மதிப்பு ஆர்ட்டிபிஷியலா இருக்கும்'' என்றார் சாமி.

''சரி சாமி. நம் நாட்டுல இருந்துட்டு நாம கரன்சியில டிரேட் பண்ணலாமா?'' என்றேன் நான். ''அதை அப்புறமாச் சொல்றேன். இப்ப பூக்களை கொஞ்ச நேரம் ரசிப்போம்'' என்று பார்க்கில் விறுவிறுவென நடக்க ஆரம்பிக்கிறார் சாமி.

(சம்பாதிப்போம்)

கரன்சி டிரேடிங்!


10% முடிவுகளே சரி..!  

ங்கள் கம்பெனியில் தவறான முடிவு எடுத்துவிட்டீர்களா? கவலையோடு சோகக் கடலில் மூழ்கியிருக்கிறீர்களா?

ஒரு நிமிடம், ஒரேஒரு நிமிடம் பிரபல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றும் மேனேஜ்மென்ட் மேதை ஸ்டீவ் ப்ளாங்க் (ஷிtமீஸ்மீ ஙிறீணீஸீளீ)  சொல்வதைக் கேளுங்கள். உங்கள் கவலைகள் பறக்கும், மனதில் உற்சாக ஊற்று திறக்கும்.

'தொழில் முனைவர் கள் ரிஸ்க் எடுப்பவர்கள். துணிச்சலாக முடிவெடுப்பார்கள். அந்த முடிவுகளில் 90 சதவிகித முடிவுகள் தவறாக இருக்குமென்று என் அனுபவம் சொல்கிறது. மீதமுள்ள பத்து சதவிகித சரியான முடிவுகள்தாம் அவர்களுக்கு வெற்றியைத் தருகின்றன.''     தவறோ, சரியோ, துணிந்து  முடிவெடுங்கள். உங்கள் பாதை நிச்சயமாக வெற்றிப்பாதைதான்.

- அத்வைத்