மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப்: புரமோஷன் கிடைக்க சூப்பர் டிப்ஸ்!

நாணயம் ஜாப்: புரமோஷன் கிடைக்க சூப்பர் டிப்ஸ்!

நாணயம் ஜாப்: புரமோஷன் கிடைக்க சூப்பர் டிப்ஸ்!
நாணயம் ஜாப்: புரமோஷன் கிடைக்க சூப்பர் டிப்ஸ்!

லுவலகங்களில் வேலை பார்க்கும் பலர் பெரிய அளவில் பதவி உயர்வு எதுவும் கிடைக்காமல் ஒரே பதவியில் பல ஆண்டுகள் தங்கிவிடுவதற்குக் காரணம், செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்யாமல் போவதும், செய்யக்கூடாத விஷயங்களைச் செய்வதுமே.

அலுவலக வாழ்க்கையில் நமது நிலையை உயர்த்திக்கொள்ள என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சொல்கிறார் கோவை ஜான்சன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் சூரியபிரகாஷ்.

செய்ய வேண்டியவை!

• அலுவலகம் என்றாலே முதலில் செய்ய வேண்டியது சரியான நேரத்தில் அலுவலகம் வருவது. இந்த பழக்கம் இருந்தாலே உங்களது பாஸுக்கு உங்கள் மீது தனிப்பட்ட மதிப்பு பிறக்கும். இது உங்களின் முன்னேற்றத்திற்கு முக்கியமான வழியும்கூட.

• குழுவாக பணிசெய்யும் இடத்தில் தனது முன்னேற்றம்தான் முக்கியம் என்று இருக்காமல் அனைவரது முன்னேற்றத்திலும் முக்கியத்துவம் காட்டுவது நல்லது. இதனால் நாம் முன்னேறுவதுடன் பணிகளும் விரைவில் முடியும்.

• ஒருவரைப் பார்த்தவுடன் எடை போடும் விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அதில் உடை நேர்த்தி என்பது மிக முக்கியமான விஷயம்.  இன்டர்வியூவில் மட்டும் அல்லாது, அலுவலகத்துக்கு தினமும் உடை நேர்த்தியில் முக்கியத்துவம் காட்ட வேண்டும்.

##~##
பேசும் திறன் முழுமையாக இல்லாவிட்டாலும் முறையானதாக இருக்க வேண்டும். சரியான தகவல் பரிமாறும் திறன், இங்கீதமாக பேசும் பக்குவம் அவசியம்.

• மிக முக்கியமாக சக ஊழியர்களுடனான நல்லுறவு, சக ஊழியர்களுக்கு உதவும் குணம், அவர்களிடம் வைத்திருக்கும் நட்பு போன்றவை நல்ல மதிப்பை உண்டாக்கும்.

• வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருந்தாலும், வேலைக்குத் தொடர்பில்லாத விஷயமாக இருந்தாலும் புதிது புதிதாக விஷயங்களை கற்றுக்கொண்டே இருத்தல் அவசியம். இந்த பண்பு பிற ஊழியர்களிடமிருந்து நம்மை தனித்துக்காட்ட உதவும்.

• வேலைகளில் அடுத்தவர்கள் சொல்லிவரும் உந்துதலைவிட, அவரவர்களிடம் இருந்து ஏற்படும் உந்துதல் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்கும்.

• நம் பணி வாழ்க்கையில் 'கேரியர் பிளானிங்’ முக்கியம்.  என்னென்ன திறன்கள் நம்மிடம் இருக்கிறது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் எப்படி இருப்போம் என்று திட்டவட்டமாக முடிவெடுப்பது அவசியம்.

செய்யக் கூடாதவை!

• பொதுவாக இன்றைய தலைமுறையினரில் சிலர் கடினமாக உழைக்க தயாரில்லை. காலையில் தாமதமாக அலுவலகம் வந்து மாலையில் சீக்கிரமாக வீடு திரும்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது நிச்சயமாக முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது.

• அலுவலக நேரத்தில் வங்கிக்கு சென்று பணம் செலுத்துவது, ஷாப்பிங் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.  இது மாதிரியான செயல்கள் பணியாளர்களின் மீதுள்ள மதிப்பை குறைத்துவிடும்.

• அலுவலக போன்களை சொந்த தேவைகளுக்காக பயன்படுத்துவது, கணினி, இ-மெயில், இன்டர்நெட் உட்பட அலுவலக உபகரணங்களை தனிபட்ட விஷயங்களுக்காக பயன்படுத்துவது கூடாது.  

• உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை போன்றவற்றுக்கு அலுவலகம் அளிக்கும் நேரத்திற்கும் அதிகமா எடுத்துக்கொள்ளக்கூடாது.  

•  ''லீவு கேட்டா தரமாட்டாங்க. அதனால லீவு போட்டுட்டு நாளைக்கு போயி சொல்லிக்கலாம்'' என்கிற அணுகுமுறை சரியல்ல. சின்னச் சின்ன காரணங்களுக்காக அடிக்கடி விடுமுறை போடுவதும் வளர்ச்சிக்கு வழி வகுக்காது.  

அலுவலகத்தில் உண்மையாகவும் நம்பகத்தன்மையுடனும் உழைத்தால் முன்னேற்றம் நிச்சயமே!

- செ.கார்த்திகேயன்,
படம்: வி.ராஜேஷ்