Election bannerElection banner
Published:Updated:

பங்குச் சந்தை: மிட்கேப் பங்குள் விழ யார் காரணம்?

பங்குச் சந்தை: மிட்கேப் பங்குள் விழ யார் காரணம்?

பங்குச் சந்தை: மிட்கேப் பங்குள் விழ யார் காரணம்?

டந்த ஒரு வாரத்தில் மட்டும் மிட்கேப் பங்குகளின் மதிப்பு 31,792 கோடி ரூபாய் குறைந்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் சென்செக்ஸ் புள்ளிகள் இரண்டு சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளநிலையில் மிட்கேப் பங்குகளின் மதிப்பு மட்டும் 31,792 கோடி ரூபாய் குறைந்திருப்பது செபி அமைப்புக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

##~##
செபி சந்தேகப்படுவது சிறு புரோக்கர்கள் மீதுதான். காரணம் அதிகமாக இயங்கிவரும் சிறு புரோக்கர்கள் ஏதேனும் உள்நோக்கத்துடன் செயல்பட்டதால்தான் மிட்கேப் பங்குகளின் மதிப்பு குறைந்திருக்கிறதோ? அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்க நிதி உதவி செய்யும் பணக்கார வர்கத்தினர் மற்றும் புரமோட்டர்கள் சொல்லியதன் அடிப்படையில் சிறு புரோக்கர்கள் கூட்டாக செயல்பட்டு மிட் கேப் பங்குகளை விழ வைத்திருப்பார்களோ என்று செபி, சிறு புரோக்கர்களின் மீது சந்தேகம் கொண்டுள்ளது.

மேலும், நிறுவனர்கள் பங்குகளை அடமானம் வைக்க பணம் கொடுத்து உதவிய பெரும் பணக்காரர்களின் மீதும் செபி சந்தேகப்படுகிறது செபி. ஆரம்பக் கட்ட விசாரணை ஆரம்பித்திருக்கிறது.

- செ.கார்த்திகேயன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு