Published:Updated:

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்: விரைவில் ஆன்லைன் டிரேடிங்!

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்: விரைவில் ஆன்லைன் டிரேடிங்!

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்: விரைவில் ஆன்லைன் டிரேடிங்!
##~##
தெ

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ன்னிந்தியாவின் முதல் பங்குச் சந்தை, இந்தியாவின் நான்காவது பங்குச் சந்தை என பல பெருமைகளைக்கொண்ட மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் அதன் பவள விழாவை சமீபத்தில் கொண்டாடியது. 1937, செப்டம்பர் 4-ம் தேதி பாரி அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சர் வில்லியம் ரைட்தான் இந்த எக்ஸ்சேஞ்சை தொடங்கி வைத்தார்.

இதுவரை மொத்தம் 1,200 கம்பெனிகள் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதில் 600 கம்பெனிகள் பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ. சந்தைகளில் பட்டியலிடப்படாத கம்பெனிகள். இந்த எக்ஸ்சேஞ்ச் நாட்டில் உள்ள மற்ற பிராந்திய பங்குச் சந்தைகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. முதலீட்டாளர்களுக்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுக்க தொடர்ந்து நடத்தி வருவதோடு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பங்குச் சந்தை குறித்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.  

இந்த பங்குச் சந்தையின் பவள விழா நிகழ்ச்சிக் கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினர் தமிழக கவர்னர் டாக்டர் கே.ரோசையா ''தென் இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சி காண மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் செய்த உதவி அலாதியானது'' என்று பாராட்டினார். கூடிய விரைவில் இந்த எக்ஸ்சேஞ்ச் ஆன்லைனில் வரப் போகிறதாம்!  

பிராந்திய பங்குச் சந்தைகளில் பழைமையான மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மேன்மேலும் வளர நாணயம் விகடனின் வாழ்த்துக்கள்.

- பானுமதி அருணாசலம்,
படம்: ச.இரா.ஸ்ரீதர்.