கே: ஒரு நிறுவனம் எப்போது போனஸ் பங்குகளை வழங்கும்?

- முனீஸ், திருச்சி.

. -லெட்சுமண ராமன்,.பங்குச் சந்தை ஆலோசகர். .
போனஸ் பங்குகள் வழங்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது, ஆனால் போனஸ் வழங்கும் கம்பெனி அடிப்படையில் வலுவாக உள்ளது எனலாம். புத்தக மதிப்பு அதிகமாக இருக்கும்போது சில நிறுவனங்கள் போனஸ் பங்குகளை வழங்கும். ஒரு நிறுவனம் லாபத்தில் டிவிடெண்ட் கொடுத்தது போக தன்னிடம் உள்ள ரிஸர்விலிருந்துதான் போனஸ் பங்குகளை வழங்குகிறது. மேலும் முதலீட்டாளர்களை தங்கள் வசம் தக்கவைத்துக் கொள்ளவும், ஈர்க்கவும், நிறுவனங்கள் போனஸ் பங்குகளை வழங்கும்.

கே: எனது பெயரில் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளேன். அதில் நாமினியாக எனது மனைவியைச் சேர்த்திருந்தேன். தற்போது எனது மகனையும் நாமினியாகச் சேர்க்க விரும்புகிறேன். அதற்கு வழி இருக்கிறதா?

- சுகுமார், தஞ்சாவூர்.

- ஏ.ஜி.பழனி, தலைமை ஆயுள் காப்பீடு ஆலோசகர், எல்.ஐ.சி.

நிச்சயமாக உங்கள் மகனையும் நாமினியாகச் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கான படிவத்தை உங்களது ஏஜென்டிடமோ, அல்லது நீங்கள் பாலிசி எடுத்திருக்கும் நிறுவனத்தின் அலுவலகத்திலோ பெற்று பூர்த்தி செய்து கொடுக்கவும். உங்கள் மகன் மைனராக இருந்தால் கூட நாமினியாகச் சேர்த்து கொள்ளலாம்.

கே: மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை பிரபல வங்கி ஒன்றின் மூலம் வாங்கினேன். அந்த வங்கியின் சேவையில் எனக்குத் திருப்தியில்லை. தற்போது வேறு விநியோகஸ்தரிடம் மாற்ற நினைக்கிறேன். அவ்வாறு செய்யமுடியுமா?

- சுனில்குமார், கோயம்புத்தூர்.

சுவாமிநாதன், ஓம்ஸ்பெக்ட்ரம் ஃபைனான்ஷியல் கன்சல்டன்ட்ஸ்.

கண்டிப்பாக முடியும்! நீங்கள் எந்த நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கிறீர்களோ அந்த நிறுவனத்துக்கு கடிதம் எழுதவேண்டும். உங்களுடைய ஃபோலியோ நம்பரையும் நீங்கள் மாறப் போகும் விநியோகஸ்தரையும் குறிப்பிட்டு, 'இனி எனது பரிமாற்றங்கள் அனைத்தையும் புதிய விநியோகஸ்தர் மூலம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ எனத் தெரிவித்துவிட்டால் போதுமானது.

கே: மியூச்சுவல் ஃபண்ட் மூலம் மாதம் 3,000 ரூபாய் சேமிக்க நினைக்கிறேன். 22 வயதாகும் நான், நீண்டகால முதலீட்டில் நல்ல வருமானம் தரும் வகையில் எப்படி முதலீடு செய்வது?

- ஆனந்த், கும்பகோணம்.

முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

டைவர்சிஃபைட் ஈக்விட்டி ஃபண்டில் 1,500 ரூபாய், மிட் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளில் 1,500 ரூபாய் எனப் பிரித்து, மாதா மாதம் முதலீடு செய்து வந்தால், 45 வயதில் சுமார் 1.22 கோடி ரூபாய் வரை கிடைக்கும். இது ரிஸ்க்கான முதலீடு என்றாலும், அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். நீண்ட கால முதலீட்டுக்கு இந்த வகையில் முதலீடு செய்யலாம்.

கே: நான் சமீபத்தில் பழைய இரண்டு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினேன். ஆர்.சி. புக்கை எனது பெயருக்கு மாற்றிவிட்டேன். ஆனால் இன்ஷூரன்ஸை எனது பெயருக்கு மாற்றவில்லை. காரணம் சமீபத்தில்தான் அதற்கான பிரீமியம் கட்டப்பட்டிருந்தது. திடீரென நடந்த விபத்தில் வாகனம் சேதமடைந்துவிட்டது. ஆனால் கிளைம் கொடுக்க இன்ஷூரன்ஸ் நிறுவனம் மறுக்கிறது. எனக்கு கிளைம் கிடைக்க வழியிருக்கிறதா?

-ராமு, சேலம்.

ரவி, ஜெனரல் இன்ஷூரன்ஸ், கன்சல்டன்ட்.

நீங்கள் ஆர்.சி. புக்கை உங்கள் பெயருக்கு மாற்றியபோதே இன்ஷூரன்ஸ் பாலிசியையும் உங்கள் பெயருக்கு மாற்றியிருக்க வேண்டும். ஆர்.சி. புக் மற்றும் இன்ஷூரன்ஸ் பாலிசி இரண்டும் ஒரே பெயரில் இருந்தால் மட்டுமே கிளைம் கிடைக்கும். அப்படி யில்லாத பட்சத்தில் கிளைம் கிடைக்காது.