Published:Updated:

ரிவர்ஸ் எடுக்கும் சந்தை!

ரிவர்ஸ் எடுக்கும் சந்தை!

பிரீமியம் ஸ்டோரி

''இந்த வாரமும் மும்பையில்தான் இருக்கிறேன். எனவே, மெயிலிலேயே மேட்டர் அனுப்பிவிடுகிறேன்'' என்று சொன்னார் ஷேர்லக். அவர் அனுப்பிய மேட்டர்:

ரிவர்ஸ் எடுக்கும் சந்தை!

''சந்தையின் வேகம் எதிர்பார்த்த மாதிரி இல்லை. இந்த ஆண்டு இறுதியில் சென்செக்ஸ் 20000-த்தை தொடும் என்று பார்த்தால், மீண்டும் ரிவர்ஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டது. இது இப்படியே கீழே செல்லுமா அல்லது ஓரளவுக்குத் தட்டுப்பட்டு மீண்டும் மேலே செல்லுமா என்பது அடுத்தடுத்து வரும் நாட்களில் ஊர்ஜிதமாகும். குஜராத் தேர்தல் முடிவு ஒரு முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கும்.

தவிர, வருகிற டிசம்பர் 18-ம் தேதி ரிசர்வ் வங்கியின் மீட்டிங் நடக்க இருக்கிறது. பணவீக்கம், ஐ.ஐ.பி. டேட்டாக்களைப் பார்க்கும்போது வட்டி விகிதம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. இருந்தாலும் இன்னொரு முறை சி.ஆர்.ஆர். குறைய வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை என்கிறார்கள்.  

சி.ஆர்.ஆர். குறைப்பதினால் வங்கித் துறை பங்குகள் உயரும் என்று நினைக்கத் தேவை இல்லை. வங்கி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறும்போதுதான் வங்கிப் பங்குகளின் விலை உயர வாய்ப்பு இருக்கிறது.  

பல தனியார் வங்கிகள் நல்ல நிலைமையில் இருந்தாலும், கரூர் வைஸ்யா வங்கி கொஞ்சம் நல்ல நிலைமையில் இருப்பதாகவே தெரிகிறது. அந்த பங்கின் மதிப்பீடுகளும் நன்றாக இருப்பதால் அந்த பங்கின் மீது ஒரு கண் வைக்கலாம்.  

ரிவர்ஸ் எடுக்கும் சந்தை!

வெற்றி கண்ட ஐ.பி.ஓ.!

ஐ.பி.ஓ. என்றாலே காததூரம் ஓடிய மக்கள், இப்போது கொஞ்சம் தைரியமாக அதில் முதலீடு செய்யத் தொடங்கி இருக்கின்றனர் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் சமீபத்தில் ஐ.பி.ஓ. வந்த நிறுவனங்கள். இந்த வாரம் ஐ.பி.ஓ. முடிந்த பி.சி. ஜுவல்லர், பார்தி இன்ஃப்ராடெல், கேர், என்.எம்.டி.சி போன்ற பங்குகளுக்கு அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. இந்த வெற்றியை அடுத்து இந்திய பங்குச் சந்தைக்கு இனி ஏறுகாலம்தான் என்கிற பேச்சு தலால் ஸ்ட்ரீட் வட்டாரத்தில் பலமாக கிளம்ப ஆரம்பித்திருக்கிறது. மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதும் ஐ.பி.ஓ. களைகட்டுவதற்கு முக்கிய காரணம்.  

ரிவர்ஸ் எடுக்கும் சந்தை!

உயரப் பறக்கும் கிங்ஃபிஷர்!

மொத்த ஏர்லைன்ஸ் துறையுமே பிரச்னையில் இருக்கிறது. கிங்ஃபிஷரில் விமானங்களே செயல்படவில்லை. இருந்தாலும் கிங்ஃபிஷர் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை உயர்ந்துகொண்டுதான் இருக்கிறது. காரணம், எதியெட் ஏர்வேஸ் என்ற அபுதாபி விமான நிறுவனம் இந்த இரண்டு நிறுவனங்களையும் வாங்கப்போவதாகச் செய்தி வெளியானதே. இந்நிறுவனம், கிங்ஃபிஷரில் 48 சதவிகித பங்குகளை வாங்கிவிட்டதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றுகூட செய்திகள் வெளியாகி  பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ஆனால், கிங்ஃபிஷரை விடவும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கவே வாய்ப்பு அதிகம் என்றும் சிலர் சொல்கிறார்கள். அதனால் ஜெட் ஏர்வேஸ் பங்கு சுமார் 800 ரூபாய் வரைக்குகூட செல்ல வாய்ப்பு இருப்பதுபோல தெரிகிறது. இந்த செய்திகளை எல்லாம் நம்பி, இந்த பங்கை வாங்கவேண்டாம் என்பதே என் அட்வைஸ்.

ரிவர்ஸ் எடுக்கும் சந்தை!

சர்ச்சையில் மார்க் இன்ஃப்ரா!

சென்னையைச் சேர்ந்த மார்க் இன்ஃப்ரா நிறுவனம் ஓப்பன் ஆஃபர் மூலம் பங்குகளை விற்க திட்டமிட்டு பங்கு ஒன்றின் விலை 91 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இந்த பங்கின் விலை ரொக்கச் சந்தையில் தற்போது சுமார் 50 ரூபாயாக உள்ளது. இந்நிலையில், மார்க் இன்ஃப்ரா செபிக்கு தந்துள்ள ஆவணங்களின்படி அந்நிறுவனம், டேக் ஓவர் கோட் விதிகளை மீறியுள்ளதால், ஆஃபர் பங்கின் விலையை சுமார் 340 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என செபி சொல்லி இருக்கிறது. விலை தொடர்பாக எழுந்துள்ள இந்த சர்ச்சையில் என்ன முடிவு ஏற்படுமோ!

ரிவர்ஸ் எடுக்கும் சந்தை!

சரியத் தொடங்கிய ஐ.டி.சி.!

கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஐ.டி.சி. நிறுவனம் கடந்த வாரத்தில் திடீரென சரியத் தொடங்கியது. எஃப்.டி.எஸ்.இ. இந்த பங்குக்கு தந்துவந்த வெயிட்டேஜ்-யை குறைத்ததே இதற்கு காரணம். இந்த செய்தி வெளியானவுடன், தினமும் வர்த்தகமாகும் 4 லட்சம் பங்குகளைப்போல இரு மடங்குகள் வர்த்தகமானது. இந்த விலை இறக்கம் ஆரோக்கியமானதுதான். மீண்டும் விலை உயரும் என்பதால் முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை.

ரிவர்ஸ் எடுக்கும் சந்தை!

செபியிடம் மாட்டிய பி.எஸ்.இ.!

என்.எம்.டி.சி பங்கு விற்பனையில் பி.எஸ்.இ. மீது செபியின் சந்தேகக் கண் திரும்பி இருக்கிறது. அதாவது, வர்த்தக நேரம் (மாலை 3.30 மணி) முடிந்தபிறகும் 4 கோடி பங்குகளுக்கான ஏலத்தை பி.எஸ்.இ. ஏற்றுக் கொண்டதை செபி கண்டுபிடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்கான விசாரணையை கூடிய விரைவில் செபி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிவர்ஸ் எடுக்கும் சந்தை!

சரிவைத் தடுக்கும் சிஸ்டம்!

கடந்த அக்டோபர் 5-ம் தேதி ஒரு சில நிமிடங்களில் 15 சதவிகிதத்துக்கு மேல் சரிந்தது நிஃப்டி. இதனால் எம் கே குளோபல் நிறுவனம் பெரும்பாதிப்புக்கு உள்ளானது. இந்நிலையில் அதுபோன்ற சிக்கல் மீண்டும் ஏற்படக் கூடாது என்பதற்காக டெரிவேட்டிவ் பிரிவில் இடம்பெற்ற பங்குகளின் விலை, முந்தைய தினத்தைவிட அடுத்த நாள் 10 சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்காத வகையில் சிஸ்டம் கொண்டுவர செபி நடவடிக்கை எடுத்துள்ளது.

ரிவர்ஸ் எடுக்கும் சந்தை!

வீழ்ச்சி கண்டால் ஃபைன்!

ஐ.பி.ஓ. வந்த சில மாதங்களில் ஒரு நிறுவனம் வெளியிட்ட பங்கின் விலை கணிசமாக குறைந்தால், சிறு முதலீட்டாளர்களுக்கு பங்கு வெளியிட்ட நிறுவனங்கள் கட்டாயம் இழப்பீடு வழங்க வேண்டும் என விரைவில் செபி அமைப்பு விதிமுறை கொண்டு வர இருக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் சந்திக்க வேண்டிய பாதிப்பு குறையும். நிறுவனங்களும் அநியாயத்துக்கு பங்கு விலை வைக்காமல் இருக்கும்.

ரிவர்ஸ் எடுக்கும் சந்தை!

இனியாவது வேகமெடுக்கட்டும்!  

1,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டுச் செலவை கொண்ட திட்டங்களுக்கு வேகமாக ஒப்புதல் அளிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான முதலீட்டு கேபினட் கமிட்டிக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. இதனால் ஆங்காங்கே தூங்கிக்கொண்டிருக்கும் பெரிய திட்டங்கள் மீண்டும் வேகமெடுக்கும் என்று எதிர்பார்ப்போம்.

ரிவர்ஸ் எடுக்கும் சந்தை!

வேண்டாம் அறிமுகம்!

தற்போது வங்கிகளில் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்க, முகவரி மற்றும் அடையாளத்துக்கான புகைப்பட ஆதாரம் தரவேண்டும். கூடவே அந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் அறிமுக கையெழுத்து போடவேண்டும். இனி அறிமுக கையெழுத்து கட்டாயமில்லை. அதைக் கேட்டு புதிதாக கணக்கு தொடங்குபவரை தொந்தரவு செய்யக்கூடாது என ஆர்.பி.ஐ. வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. இனியாவது நாட்டில் அனைவருக்கும் சுலபமாக வங்கிச் சேவை கிடைக்கிறதா பார்ப்போம்.

ரிவர்ஸ் எடுக்கும் சந்தை!
ரிவர்ஸ் எடுக்கும் சந்தை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு