Published:Updated:

2013-ல் வேலை வாய்ப்பு... இனி ஏறுமுகம்தான்!

நாணயம் ஜாப்

2013-ல் வேலை வாய்ப்பு... இனி ஏறுமுகம்தான்!

நாணயம் ஜாப்

Published:Updated:
2013-ல் வேலை வாய்ப்பு... இனி ஏறுமுகம்தான்!

ஒரு நாட்டில் உருவாகியுள்ள வேலை வாய்ப்புகளை வைத்துதான் அந்த நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்க முடியும். வேலை வாய்ப்பு இல்லை எனில் மக்களிடம் பணப்புழக்கம் இருக்காது. பணப்புழக்கம் இல்லை எனில் பொருளாதாரம் சோபிக்காது. பொருளாதாரச் சுழற்சிக்கு முக்கிய அடிப்படையான வேலை வாய்ப்பு 2012-ம் ஆண்டு எப்படி இருந்தது என முதலில் பார்ப்போம்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2012
-ல் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. காரணம், இந்தியாவின் சில முக்கியத் துறைகளின் வேலை வாய்ப்பு ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்துள்ளது. மேலும், அதிக வட்டி விகிதத்தால் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் புதிய முதலீடுகள் வரவில்லை. இவை  அத்தனையும் சேர்ந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து, பணவீக்கத்தை அதிகரித்தது. பணவீக்கம் அதிகமாக அதிகமாக கம்பெனிகள் தங்களின் செலவைக் குறைக்க ஆரம்பித்தன. ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்தன. இதனால் வேலையை இழந்த பலர் புதிய வேலை கிடைக்காமல் திண்டாடினர். இந்தியாவில் 2012-ல் மட்டும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு 21 சதவிகிதம் குறைந்துள்ளது என்று அசோசெம் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்நிலையில் 2013-ல் வேலை வாய்ப்பு எப்படி இருக்கும் என ரான்ஸ்டாட் நிறுவனத்தின் சி.இ.ஓ. பாலாஜியிடம் கேட் டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

2013-ல் வேலை வாய்ப்பு... இனி ஏறுமுகம்தான்!

''2012-ல் அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகள் இந்தியா வின் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ரீடெய்ல், விமானப் போக்குவரத்து போன்ற துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதோடு தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்குவதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இது போன்ற சில நடவடிக்கைகளால் பார்மா, தொலைதொடர்பு, சுற்றுலா, ரீடெய்ல், வங்கி, கட்டுமானம், விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் ஆகிய துறைகளில் அதிக அளவு புதிதாக வேலை வாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனால் வேலை வாய்ப்புகளுக்கு இனி ஏறுமுகம்தான்.

இத்துறைகளில் சம்பள உயர்வு என்பது பண வீக்கத்தைவிட 2 அல்லது 3 சதவிகிதம் அதிகமாக இருக்கும். ஏற்கெனவே உள்ள துறைகளில் புதிய நிறுவனங்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளன. ஒட்டுமொத்தமாக எல்லாத் துறைகளிலும் வேலைவாய்ப்பு 15% வளர்ச்சி இருக்கும்'' என்றார்.

2013-ல் வேலை வாய்ப்பு... இனி ஏறுமுகம்தான்!

தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்குவதன் மூலமாக மட்டும் 2013-ல் 50,000 முதல் 70,000 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்ஜினீயரிங் துறையில் ஆரம்ப சம்பளமாக  18,500 முதல் 25,000 ரூபாய் வரை கிடைக்கலாம். அதோடு திறமையாக வேலை பார்ப்பவர்களுக்குச் சம்பள உயர்வு என்பது 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதம் வரை இருக்கும் எனவும், அதேநேரத்தில், திறமையற்றவர்களைப் பணியிலிருந்து விலக்கவும் நிர்வாகங்கள் தயங்காது என்பதே வேலை வாய்ப்புத் துறை சார்ந்த நிபுணர்களின் கருத்து.   கிடைத்த வேலையில் திறமையைப் பயன்படுத்தி ஜெயிப்பது நம் கைகளில்தான் உள்ளது.

இரா.ரூபாவதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism