Published:Updated:

ஈஸியா புகார் செய்யலாம்...

பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள்... சி.சரவணன்.

##~##

ங்குச் சந்தை புரோக்கர் ஒருவர், நீங்கள் சொல்லாதப் பங்கை வாங்கி உங்கள் டீமேட் கணக்கில் சேர்த்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். இதனால் உங்களுக்கு 25,000 ரூபாய் நஷ்டம். புரோக்கர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் பலனில்லை. இந்நிலையில் எங்கே புகார் செய்தால் கண்டிப்பாகத் தீர்வு கிடைக்கும் என்கிற கேள்வி முதலீட்டாளர்களின் மனதில் நீண்ட நாட்களாக இருக்கிறது.

இதற்கான தீர்வாகத்தான் செபி அமைப்பு, ஸ்கோர்ஸ் (SCORES) என்கிற வசதியை அறிமுகப்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

படுத்தி இருக்கிறது. SEBI Complaints Redress System என்பதன் சுருக்கம்தான் இந்த ஸ்கோர்ஸ்.

புகார் செய்யும் முன்..!

இதுகுறித்து செபியின் மூத்த அதிகாரி ஒருவருடன் பேசினோம். ''நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்த புகார்களை செபி-யில் நாங்கள் புதிதாகத் தொடங்கி இருக்கும் ஸ்கோர்ஸ்-ல் தெரிவிக்கலாம். இணையதளம் மூலமாக புகார்களை எளிதாகத் தெரிவிக்கவே இந்தத் தீர்வு.

ஈஸியா புகார் செய்யலாம்...

ஆனால், எடுத்த எடுப்பிலேயே எந்த முதலீட்டாளரும் இந்த ஸ்கோர்ஸ்-ல் வந்து புகார் சொல்லிவிடக் கூடாது. முதலில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கவனத்துக்கு உங்கள் புகாரை எடுத்துச் செல்லவேண்டும். அங்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை அல்லது தீர்வில் எந்தத் திருப்தியும் இல்லை என்கிறபோதுதான் ஸ்கோர்ஸ் மூலமாகப் புகார் செய்யவேண்டும். ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை செயற்கையாக ஏற்றப்படுகிறது அல்லது குறைக்கப்படுகிறது, இன்சைடர் டிரேடிங் செய்யப்படுகிறது என்கிற மாதிரியான தகவல்கள் கிடைத்தாலும் நீங்கள் அதுபற்றி புகார் செய்யலாம்'' என்றார்.

எப்படி புகார் செய்வது?  

ஈஸியா புகார் செய்யலாம்...

www.scores.gov.in என்கிற இணையதள முகவரிக்குச் சென்று உங்களின் இ-மெயில் முகவரியைக் கொடுத்து பதிவு செய்துகொள்ளவேண்டும். அதிலுள்ள 'புகார் பதிவுப் படிவத்தில் (Complaint Registration Form) உங்கள் பெயர், முகவரி, பான் நம்பர், செல் நம்பர், இ-மெயில் முகவரி, புகார் விவரம் போன்றவற்றைத் தரவேண்டும்.

நீங்கள் செய்யும் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் வசதியும் இதே இணையதளத்தில் இருக்கிறது. மேலும், உங்கள் புகார் குறித்து ஸ்கோர்ஸ்-க்கு நினைவுபடுத்தும் வசதியும் இருக்கிறது.

யார் மீது புகார் செய்யலாம்?

* பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள்.

* செபி அமைப்பில் பதிவு செய்துள்ள பங்குத் தரகு நிறுவனங்கள், புரோக்கர்கள், சப்-புரோக்கர்கள்.  

* பங்குச் சந்தைகள்.

* டெபாசிட்டரி பார்டிசிபன்ட்கள்.

* மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்.

* மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்கள்.

இனி என்ன, ஸ்கோர்ஸ் மூலம் முதலீட்டாளர்கள் தங்களுடைய புகார்களை சுலபமாகப் பதிவு செய்யலாமே!