##~## |
கடந்த 27-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள நாரத கான சபா கலையரங்கம் நாணயம் விகடன் வாசகர்களால் நிரம்பி வழிந்தது. நாணயம் விகடனும், குட்வில் கமாடிட்டீஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய 'கமாடிட்டி... கரன்சி... கற்கலாம்!’ என்கிற விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவே வாசகர்கள் ஆரவாரத்துடன் வந்திருந்தார்கள். இதில், சந்தை நிபுணர் டாக்டர். எஸ்.கார்த்திகேயன் மற்றும் எம்.சி.எக்ஸ்-எஸ்.எக்ஸ்-ன் ரீஜினல் ஹெட் டாக்டர் ஏ.செபாஸ்டின் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். குட்வில் கமாடிட்டீஸ் நிறுவனத்தின் தலைவர் பாஸ்கரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
டாக்டர் கார்த்திகேயன், கமாடிட்டி மற்றும் கரன்சியில் எப்படி டிரேடிங் செய்வது என்பதி லிருந்து கமாடிட்டி, கரன்சி சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உதாரணத்துடன், தெள்ளத்தெளிவாக வாசகர்களுக்கு எடுத்துச் சொன்னார். இடையிடையே வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமாகப் பதில் அளித்ததில் வாசகர்கள் திருப்தி அடைந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரன்சி டிரேடிங் பற்றிய பொதுவான விஷயங் களை வாசகர்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னார் செபாஸ்டின். அவர் பேசியதை வாசகர்கள் உன்னிப்பாகக் கேட்டதிலிருந்தே கரன்சி வர்த்தகம் பற்றி வாசகர்கள் தெரிந்துகொள்ளத் தயாராகிவிட்டார்கள் என்பது புரிந்தது.
இந்த நிகழ்ச்சியில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்களும், பெண்களும் கலந்துகொண்டது சிறப்பான விஷயம். அவர்களில் சிலரிடம் பேசியபோது ''இதுபோன்ற விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் முதலீடு சம்பந்தப்பட்ட விஷயங்களை அதிகம் கற்றுத்தருவதாகவும், அதனால் எங்களுக்குக் கிடைக்கும் பயன் அதிகம்'' எனவும் தெரிவித்தார்கள். நிகழ்ச்சி முடிந்து அரங்கத்திலிருந்து வெளியேறும்போது அனைவரின் முகத்திலும் புதிதாக பல விஷயங்களை கற்றோம் என்கிற திருப்தியைக் காண முடிந்தது.