Published:Updated:

செக்டார் அனாலிசிஸ்!

செக்டார் அனாலிசிஸ்!

செக்டார் அனாலிசிஸ்!

செக்டார் அனாலிசிஸ்!

Published:Updated:
##~##

எத்தனால் எந்த விலைக்கு விற்கலாம் என்பதை சந்தைதான் முடிவு செய்யவேண்டும். அப்போதுதான் சர்க்கரை ஆலைகளுக்கு லாபம் கிடைக்கும் என கடந்த இதழில் சொல்லி இருந்தேன்.

எத்தனால்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எத்தனாலின் விலையைத் தீர்மானிப்பதற்காக நியமிக்கப்பட்ட சௌமித்ரா சௌத்ரி கமிட்டி, லிட்டர் ஒன்றுக்கு விற்பனை விலை ரூ.27 எனவும், குறைந்தபட்ச விலையாக ரூ.23-ம், உச்சபட்ச விலையாக ரூ.31-ம் இருக்கலாம் என பரிந்துரைத்தது. அரசின் பல்வேறு துறைகள் இதை உடனடியாக ஒப்புக்கொள்ளாததால் கருத்து வேறுபாடு எழுந்தது.

இன்றைக்கு நம் நாட்டைக் கடுமையாகப் பாதிக்கும் பிரச்னை நடப்புக் கணக்கு பற்றாக்குறையும், வர்த்தகப் பற்றாக்குறையும்தான். இதற்கு முக்கிய காரணம், நாம் அளவுக்கதிகமான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதே. எத்தனாலை

பெட்ரோலுடன் கலந்து விற்பதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாகக் குறைக்கலாம்.

பெட்ரோலுடன் 5% எத்தனால் கலக்க வேண்டுமெனில், ஆண்டுக்கு 100 கோடி லிட்டருக்குமேல் எத்தனால் தேவைப்படும். எனவே, விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை சந்தைக்கே விட்டுவிடுவது நல்லது. அப்படி ஆகி 10% எத்தனாலைக் கலக்க அனுமதி கிடைக்கும்போது சர்க்கரை நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம்தான்.

செக்டார் அனாலிசிஸ்!

அதேபோல், இத்திட்டம் அமலாக இருக்கும் 19 மாநிலங்களில் 13 மாநிலங்களில் மட்டுமே இப்போது நடைமுறையில் இருக்கிறது. ஏனைய மாநிலங்களிலும் இத்திட்டம் முழுமையாக அமலானால், தேவை அதிகரித்து சர்க்கரை ஆலைகள் பலன் அடையும்.

இன்ஸ்டிடியூஷனல் சேல்ஸ்!

விமானப் பயணத்தில் காபி தரும்போது கூடவே சர்க்கரை பாக்கெட்டும் தருவார்கள். இது மாதிரி விமான நிறுவனங்கள், பெரிய பெரிய ஓட்டல்களுக்கு மொத்தமாக சர்க்கரை விற்பதுதான்  இன்ஸ்டிடியூஷனல் சேல்ஸ்! மொத்த வியாபாரம் என்பதால் இன்ஸ்டிடியூஷனல் சேல்ஸ் அதிகம் உள்ள நிறுவனங்களின் விற்பனை ஓரளவு ஸ்திரமாக இருக்கும். ஆனால், லாபத்தின் அளவு குறைவாகவே இருக்கும். ரீடெயில் என்னும் சில்லறை விற்பனையில் லாபம் கொஞ்சம் அதிகம் என்றாலும், பிராண்ட் மதிப்பு முக்கியம். சாக்கு மூட்டையில் விற்றுக்கொண்டிருந்த சர்க்கரையை பாக்கெட்டில் அடைத்து பிராண்டட் புராடக்டாக மாற்றியது பாரி நிறுவனம். இந்த யுக்தியை இன்று பல நிறுவனங்கள் பின்பற்றுகின்றன.

பகாஸ் !

செக்டார் அனாலிசிஸ்!

பகாஸ் என்னும் கரும்புச் சக்கையைப் பயன்படுத்தி காகித உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்; அதுவும், தமிழர்கள். தமிழ்நாடு நியூஸ் பிரின்ட் என்னும் தமிழக அரசு நிறுவனம் இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.  

ஸ்டாக்-கன்சம்ஷன் ரேஷியோ !

சர்வதேச அளவில் சர்க்கரையின் விலையைக் கணிக்க உதவுவது ஸ்டாக் டு கன்சம்ஷன் ரேஷியோ. ஆண்டு துவக்கத்தில் கையிருப்பு எவ்வளவு, நடப்பு ஆண்டில் உற்பத்தி எவ்வளவு, நடப்பு ஆண்டில் கன்சம்ப்ஷன் எவ்வளவு, மீதம் எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் விலையின் போக்கைக் கணிப்பார்கள்.

மின் உற்பத்தி !

மின் உற்பத்தி மூலமாகவும் உபரி வருவாய்/ஆதாயம் கிடைக்கும் சர்க்கரை ஆலைகளுக்கு இந்த வருமானமும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் முக்கியமானது.  

இனியாவது இனிக்குமா?

சர்க்கரை உற்பத்தி என்பது பெரிய ஏற்ற இறக்கங்கள் ஏதும் இல்லாமல், ஸ்திரமாக இருக்க வேண்டிய ஒரு தொழில், அதிகமாக அரசு தலையீட்டினால் தத்தளிக்கிறது. ரங்கராஜன் கமிட்டி பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவாகி வருவதைப் பார்க்க முடிகிறது இப்போது. இதற்கான கேபினட் நோட்டும் அரசின் ஒப்புதலுக்கு/பார்வைக்குத் தயாராக இருக்கிறது. பட்ஜெட்டுக்கு முன்னரே நல்ல செய்தி வரலாம் என மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் கூறியிருக்கிறார்.

செக்டார் அனாலிசிஸ்!

இதன் பரிந்துரைப்படி, பொது விநியோகத்துக் காக குறைந்த விலையில் அரசுக்குத் தரப்படும் 'லெவி கோட்டா’வான 10 சதவிகிதத்தை நீக்கினால் மட்டுமே, சுமார் ரூ.3,000 கோடி வரை சேமிப்பு / வருவாய் சர்க்கரை ஆலைகளுக்குக் கூடுதலாகக் கிடைக்கும்.

அடுத்ததாக, விற்பனையைத் தீர்மானிக்கும் 'ரிலீஸ் மெக்கானிஸம்’ என்னும் கட்டுப்பாடை அரசு தளர்த்தினால், எப்போது விலை

சாதகமாக இருக்கிறதோ, அப்போது சந்தையில் விற்பனை செய்யும் வசதியும், சாதகமான சூழல் இல்லாதபோது சேமித்து வைப்பதும், முறையான நிதி நிர்வாகமும் நிறுவனங்களுக்குச் சாத்தியமாகும்.

சமீபத்திய பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளைப் பார்த்தால், விரைவில் சர்க்கரைப் பங்குகள் இனிக்கத் துவங்கலாம். மார்ஜின் ஆஃப் சேஃப்டி சாதகமாக இருக்கும் இப்போதையச் சூழலில், குறைந்த விலையில் பங்குகளை வாங்க ஆரம்பிக்க ஏற்ற தருணம். ஆனால், அந்தப் பங்குகளை எப்படித் தேர்வு செய்வது?

எப்படித் தேர்வு செய்வது?

* அதிக நாட்கள் அரவை (க்ரஷிங்) செய்யும் நிறுவனமா என்று பார்க்கவேண்டும்.  

* அதிக அளவில் கரும்பு கிடைக்கும் இடத்துக்கு அருகாமையில் தொழிற்சாலை இருப்பது நல்லது.

* ஏற்றுமதிக்கு ஏதுவாகத் துறைமுகத்துக்கு அருகே தொழிற்சாலை இருப்பது நல்லது.

* ஒரே வகையான வாடிக்கையாளரை நம்பி இருக்காமல், ரீடெயில், பல்க், இன்ஸ்டிடியூஷன், ஏற்றுமதி என பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களா என்று பார்ப்பது முக்கியம்.

* தனது தேவைக்கு, அதிக மின் உற்பத்தி செய்தல் சாதகம்.

* எத்தனால் ப்ளெண்டிங்கினால் பலன் உண்டா எனப் பார்க்கலாம்.

* சந்தையின் ஏற்ற இறக்கங்கள் எனும் சீஸனல் சுழற்சியை நிர்வாகம் ஸ்டெடியாக கையாள்கிறதா என்று பார்க்கவேண்டும்.  

மேற்சொன்ன விதிமுறைகள்படி அணுகினால், சில பங்குகள் சிக்கும். அவற்றுள் முக்கியமானது இ.ஐ.டி. பாரி நிறுவனம்.    

இனிக்கும் இ.ஐ.டி. பாரி:

பாரி வள்ளலைப்போல வாரி வழங்கும் பங்கு இது! முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து நல்ல டிவிடெண்ட், விலையேற்றம் என பலன் தரும் பங்கு இது. 1842-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தென்னிந்தியாவின் நம்பர் ஒன் உற்பத்தியாளர்; அகில இந்திய அளவில் முதல் ஐந்து உற்பத்தியாளர்களுள் ஒன்று! இந்தியாவின் இரண்டாவது பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளர். இந்தியாவின் முதல் சர்க்கரை ஆலை என்ற பெருமையும், பிராண்டட் சர்க்கரையை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் என்ற பெயரும் உண்டு. முருகப்பா குழுமத்தைச் சேர்ந்தது.

செக்டார் அனாலிசிஸ்!

சர்க்கரை உற்பத்தியில் இருந்து பிற்பாடு டிஸ்டிலெரி, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், பயோ பெஸ்டிசைட், நியூட்ராசூட்டிகல்ஸ், மின்னுற்பத்தி என பல புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் விற்பனை நான்கு மடங்கு அதிகரித்தது; லாபம் சுமார் இரண்டு மடங்கு அதிகரித்தது.  

ஒன்பது சர்க்கரை ஆலைகள்; நாள் ஒன்றுக்கு சுமார் 35,000 டன் கரும்பு அரவை செய்யும் வசதி, நாள் ஒன்றுக்கு 230 கிலோ லிட்டர் உற்பத்தித் திறனுடன் நாலு டிஸ்டிலெரிகள், 146 மெகாவாட் மின் உற்பத்தி திறன் என்பதெல்லாம் இந்நிறுவனத் திற்கு வலுசேர்க்கின்றன. இதன் துணை நிறுவனமான கொரமண்டல் ஃபெர்டிலைஸர் லிமிடெட், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. நானூறுக்கும் மேற்பட்ட ரீடெயில் அவுட்லெட்கள் இதற்கு உள்ளது.

நல்ல பிராண்ட் என்னும் நற்பெயரும், குறைந்த உற்பத்திச் செலவுகளும், குறை வான கடனும், திறமையான நிர்வாகமும் பலம். கடினமான தொழில் போட்டிகளை சாதுர்யமாக எதிர்கொள்ளும் நிர்வாகத்தின் பாசிட்டிவ் அணுகுமுறை, இந்நிறுவனம் தனித்து நிற்பதற்குக் காரணம்.

இந்நிறுவனத்தின் பங்கு களில் 45% புரமோட்டர்கள் வசமும், சுமார் 14% அந்நிய முதலீட்டாளர்களிடமும் இருக்கிறது. ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் கணிச மான பங்குகளில் முதலீடு செய்துள்ளது. தொடர்ந்து நல்ல டிவிடெண்ட் கொடுத் துள்ளது:

ஆக, நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஏற்ற முதலீடு இந்தப் பங்கு! இத் துறையில் கவனிக்க வேண்டிய இதர பங்குகளையும் சொல்கிறேன்.

1. பஜாஜ் ஹிந்துஸ்தான்
2. பல்ராம்பூர் சினி
3. பன்னாரி அம்மன் சுகர்ஸ்
4. ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ்
 

(அலசுவோம்)