Published:Updated:

எதிர்காலத்தில் ஏற்றம் தரும்... நம்பிக்கை பங்குகள் !

- வா.கார்த்திகேயன்.

எதிர்காலத்தில் ஏற்றம் தரும்... நம்பிக்கை பங்குகள் !

- வா.கார்த்திகேயன்.

Published:Updated:
##~##

இது காலாண்டு முடிவுகள் வெளியாகும் காலம். எந்த நிறுவனத்தின் முடிவுகள் சிறப்பாக வருகிறதோ, அந்த நிறுவனத்தின் பங்கு விலை உயருகிறது. இந்தச் சமயத்தில், நன்கு விலை உயர்ந்த பங்கை வாங்குவதைவிட, இனிவரும் காலாண்டுகளில் எந்தப் பங்கு சிறப்பாக லாபம் தருமோ, அதில் முதலீடு செய்வதே சரியாக இருக்கும். எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படும் பங்குகளைச் சொல்ல முடியுமா என சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.சொக்கலிங்கத்திடம் கேட்டோம்.  ஒரு முல்லா கதையோடு பேச ஆரம்பித்தார்.

''ஒருமுறை முல்லா, ஓர் உணவகத்துக்குப் போனார். உணவைப் பரிமாறுபவர் முல்லாவை சரியாகவே கவனிக்கவில்லை. என்ன விஷயம் என்று பார்த்தார் முல்லா. டிப்ஸ் தருபவர்களை மட்டுமே அவர் நன்றாக கவனிப்பது தெரிந்தது. அடுத்தமுறை அந்த உணவகத்துக்கு சென்றபோதும் அதே கதைதான். ஆனாலும், இந்தமுறை நிறைய டிப்ஸ் தந்தார் முல்லா. அடுத்தமுறை அந்த உணவகத்துக்கு சென்றபோது, அவரை விழுந்து விழுந்து கவனித்தார் உணவு பரிமாறுபவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், முல்லாவோ எந்த டிப்ஸும் தராமல் எழுந்தார். ''இவ்வளவு நன்றாக கவனித்தேனே! எந்த டிப்ஸும் தராமல் எழுந்திருக்கிறீர்களே?'' என்று உணவை பரிமாறியவர் கேட்க, ''இந்தமுறை நீங்கள் கவனித்ததற்குதான் சென்றமுறையே டிப்ஸ் தந்துவிட்டேனே!'' என்றாராம் முல்லா.

எதிர்காலத்தில் ஏற்றம் தரும்...   நம்பிக்கை பங்குகள் !

எதற்கு இந்தக் கதை தெரியுமா? இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு உயரும் பங்குகளில் இப்போதே

எதிர்காலத்தில் ஏற்றம் தரும்...   நம்பிக்கை பங்குகள் !

முதலீடு செய்தால், நல்ல லாபம் பார்க்கலாம் என்பதைச் சொல்லத்தான். பொருளாதார மந்தநிலை, ஐ.ஐ.பி. எண்கள் குறைந்திருப்பது, வளர்ச்சி குறைந்திருப்பது உள்ளிட்ட சில காரணங்கள் இருந்தாலும், இப்போதைய நிலைமையில் சில பங்குகள் மிகவும் கவர்ச்சிகரமான மதிப்பீட்டில் வர்த்தகமாகிறது.

வட்டி விகிதம் குறைவது, பருவமழை நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளிட்ட காரணங்களால், அந்தப் பங்குகளை இன்றே  வாங்கிப்போட்டால் ஒரு வருட காலத்தில்

20 முதல் 30 சதவிகிதம் வரை லாபம் பார்க்கலாம்'' என்றவர், தற்போது வாங்கவேண்டிய பங்கு களையும் பரிந்துரை செய்தார். அந்தப் பங்குகள் இதோ:

 பி.ஹெச்.இ.எல்.! (BHEL)

பொதுத் துறை மகாரத்னா நிறுவனம். இதில் அரசாங்கத்தின் பங்கு 67 சதவிகிதத்துக்கு மேல். 14 இடங்களில் இதன் தொழிற்சாலை இருக்கிறது. இரண்டு புதிய தொழிற்சாலைகளையும் அமைத்து வருகிறது. சமீபத்தில் கிடைத்த ஆர்டர் உள்பட ரூ.1.15 லட்சம் கோடிக்கு ஆர்டர் வைத்திருக்கிறது. கடன் மூலதன விகிதம் குறைவாக இருக்கிறது. இந்தப் பங்கு இதற்கும் கீழே செல்ல வாய்ப்பில்லை.  கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு கவர்ச்சிகரமான மதிப்பீட்டில் வர்த்தகமாகிறது.

எதிர்காலத்தில் ஏற்றம் தரும்...   நம்பிக்கை பங்குகள் !

கிளாரியன்ட் கெமிக்கல்ஸ்! (CLNINDIA)

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிறுவனம். இந்நிறுவனம் தயாரிக்கும் கெமிக்கல்களை பல்வேறு துறைகளில் பயன் படுத்தப்படுகிறது. இது கடனில்லாத;  கைவசம் ரூ.241 கோடியை வைத்திருக்கிற நிறுவனம். கடந்த வருடம் சில பிஸினஸ்கள் மற்றும் சொத்துகளை விற்றதன் மூலம் ரூ.240 கோடி கிடைத்தது. இதன்காரணமாக ஒரு பங்குக்கு ரூ.60 டிவிடெண்ட் கிடைத்தது.

இப்போது இன்னும் சில பிஸினஸ்களை விற்பதற்கு போர்டு ஒப்புதல் தந்திருக்கிறது. அப்படி விற்கும்போது இன்னும் அதிக டிவிடெண்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. மார்ச் காலாண்டில் அதன் வரி, வட்டி, தேய்மானத்துக்கு முந்தைய லாபம் 15.2 % வளர்ச்சி அடைந்துள்ளது.

எதிர்காலத்தில் ஏற்றம் தரும்...   நம்பிக்கை பங்குகள் !

இன்ஜினீயர்ஸ் இந்தியா! (ENGINERSIN)

80 சதவிகிதத்துக்கு மேல் அரசாங்கத்தின் பங்கு இருக்கும் பொதுத் துறை நிறுவனம் இது. புதிய இன்ஜினீயரிங் திட்டங்களை நிறைவேற்றித் தருவதில் முழுமையாகச் செயல்படும் நிறுவனம்.  கடந்த சில மாதங்களாக இந்தப் பங்கு சரிந்து வந்தது. நிகர லாபம் குறைந்ததோடு மட்டுமல்லாமல், அரசாங்கம் தன்வசம் இருக்கும் பங்குகளை விற்க முடிவெடுத்ததும் ஒரு காரணம். மற்றபடி இந்நிறுவனத்தின் அடிப்படையில் எந்த மாற்றமும் நடக்கவில்லை. இது ஒரு கடனில்லாத நிறுவனம். மேலும், ரூ.2,300 கோடியை கையில் வைத்திருக்கிறது. அதாவது, ஒரு பங்குக்கு ரூ.68 பணமாக இருக்கிறது. நீண்டகாலத்தில் ரூ.300-க்கு மேலே செல்லும்.

எதிர்காலத்தில் ஏற்றம் தரும்...   நம்பிக்கை பங்குகள் !

ஃபோர்ஸ் மோட்டார்ஸ்! (பி.எஸ்.இ. குறியீடு 500033)

எல்.சி.வி., எஸ்.யூ.வி. மற்றும் டிராக்டர்கள் உள்ளிட்ட அனைத்தையும் தயாரிக்கிறது. டிராவலர், டிராக்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் இந்நிறுவனத்தைச் சேர்ந்ததுதான். தன்னுடைய கூட்டு நிறுவனத்தில் அதன் பங்குகளை  விற்று விட்டதால், கைவசம் நிறைய பணம் இருக்கிறது. (ஒரு பங்குக்கு 357 ரூபாய்!) இந்தப் பணத்தை விரிவாக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம் அல்லது பைபேக் மூலமாக பங்குகளைத் திரும்ப வாங்கலாம். ஏற்கெனவே திட்டமிட்ட விரிவாக்கப் பணிகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த வருட இறுதியில் 50 டீலர்களை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. மேலும், பி.இ. விகிதம், விலை/புத்தக மதிப்பு உள்ளிட்டவை கவர்ச்சிகரமாகவே இருக்கிறது.

எதிர்காலத்தில் ஏற்றம் தரும்...   நம்பிக்கை பங்குகள் !

 சீமென்ஸ்! (SIEMENS)

ஜெர்மனி நாட்டு நிறுவனமான சீமென்ஸின் துணை நிறுவனம் இது. இதன் தாய் நிறுவனம் ஒரு கடனில்லாத, ரொக்கத்தைக் கையில் வைத்திருக்கும் நிறுவனம். சீமென்ஸ் நிறுவனம் இந்தியாவுக்காக 60 புதிய புராடக்ட்களைத் தயாரிக்க இருக்கிறது.

இதன்மூலம் 2020-ம் ஆண்டு 1.3 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் திட்டம் வைத்திருக்கிறது. மேலும், 50 மில்லியன் டாலர் முதலீட்டில் புதிய என்.பி.எஃப்.சி.யையும் இந்நிறுவனம் ஆரம்பித்திருக்கிறது. இந்த இரண்டு திட்டங்களும் எதிர்காலத்தில் நல்ல வருமானம் தர வாய்ப்பிருக்கிறது. கடந்த 18 மாதங்களில் குறைந்தபட்ச விலைக்கு அருகே வர்த்தகமாகிறது. வட்டி விகிதம் குறைய ஆரம்பிக்கும்போது, கேப்பிட்டல் கூட்ஸ் நிறுவனங்கள் உயர வாய்ப்பு இருக்கிறது.

எதிர்காலத்தில் ஏற்றம் தரும்...   நம்பிக்கை பங்குகள் !

சுந்தரம் ஃபாஸனர்ஸ்! (SUNDRMFAST)

டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த இந்நிறுவனம்,  ஃபாஸனர்ஸ் துறையில் முன்னணியில் இருக்கிறது.  இந்தியா, ஜெர்மனி, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இதற்கு தொழிற்சாலை இருக்கிறது. அமெரிக்காவில் விற்பனைப் பிரிவு இருக்கிறது. ஐரோப்பாவுக்கும் இதர உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.

நடப்பு நிதி ஆண்டில் ரூ.150 கோடிக்கு விரிவாக்கப் பணிகளைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறது. தனது 52 வார உச்சபட்ச விலையில் இருந்து 30% மேல் சரிந்திருக்கிறது. டிவிடெண்ட் யீல்டு மற்றும் விலை/புத்தக மதிப்பு ஆகிய விகிதங்கள் கவர்ச்சியாக இருக்கிறது.

எதிர்காலத்தில் ஏற்றம் தரும்...   நம்பிக்கை பங்குகள் !

யுனைடெட் பாஸ்பரஸ்! (UNIPHOS)

1969-ல் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இது. பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்கள், கெமிக்கல்கள் போன்றவற்றை இந்நிறுவனம் தயாரிக்கிறது. ஜெனரிக் அக்ரோகெமிக்கல் பிரிவில் உலகின் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்நிறுவனம்.

120 நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களில் ஆண்டுக்கு 20 சதவிகித வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிறுவனத்தின் புரமோட்டர்கள் பங்கு 28.87 என்ற அளவில் குறைவாக இருக்கிறது. பைபேக்கிற்கு ஒதுக்கி வைத்த தொகையில் முழுவதையும் இன்னும் பயன்படுத்தவில்லை. இன்னும் சில வருடங்களுக்கு இதன் வளர்ச்சி நன்றாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் ஏற்றம் தரும்...   நம்பிக்கை பங்குகள் !

 மே-2 நிலவரப்படி..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism