Published:Updated:

டே டிரேடிங்கில் பங்குகளைத் தேர்வு செய்வது எப்படி?

டே டிரேடிங்கில் பங்குகளைத் தேர்வு செய்வது எப்படி?

டே டிரேடிங்கில் பங்குகளைத் தேர்வு செய்வது எப்படி?

டே டிரேடிங்கில் பங்குகளைத் தேர்வு செய்வது எப்படி?

Published:Updated:

கேள்வி  - பதில்

##~##

ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் செய்யக்கூடிய லாபகரமான தொழில்கள் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பி.பெருமாள், தலைமை துணைத் தலைவர். இட்காட் கன்சல்டன்சி.

''பெரிய அளவிலான இயந்திரத் தொழில்நுட்பம் தேவைப்படாத பல சிறுதொழில்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டிற்குள் தொடங்க முடியும். இதுதவிர, வீட்டிலேயே சிறிய இடத்தில் சிறிய அளவிலான இயந்திரங்களைப் பயன்படுத்தி செய்கின்ற தொழில்களும் உள்ளன. இயந்திரத் தொழில்நுட்பம் தேவைப்படாத நாட்டுக்கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு போன்ற உணவுப் பொருள் துறை சார்ந்த தொழில்களும், பாக்குமட்டைத் தட்டு, பேப்பர் கப், சணல் பை உற்பத்தி போன்ற சிறிய அளவிலான இயந்திர பயன்பாடு தொழில்களும் நல்ல லாபம் தரும்.

இவற்றுக்கான முதலீடு மற்றும் முதலீட்டுக்குப் பிறகான செலவுகள்கூட ஒரு லட்சம் ரூபாய்க்குள் செய்து விடலாம். இதுபோன்ற தொழில்களில் உங்களது ஈடுபாடு மற்றும் தொழிலில் தனித்து இயங்கும் தன்மையைப் பொறுத்து லாபம் பார்க்க முடியும்.''

டே டிரேடிங்கில் பங்குகளைத் தேர்வு செய்வது எப்படி?

டே டிரேடிங் செய்யும்போது கவனிக்கவேண்டிய நுணுக்கங்கள் என்னென்ன? எந்த வழிமுறைகளில் பங்குகளைத் தேர்வு செய்வது?

என்.எஸ்.கணேசய்யர், மதுரை. மேஷ், இயக்குநர், ரிலையபிள் ஸ்டாக் - ஷேர்ஸ்.

''டே டிரேடிங் செய்வது என்று திட்டமிட்டுவிட்டால் முதலில் ஸ்டாப் லாஸ் விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். தினசரி சந்தை எப்படி இருக்கும் என்கிற கணிப்பு செய்யவேண்டும். இதற்கேற்ப சந்தையைத் தொடர்ந்து கவனிப்பது அவசியம். குறிப்பாக, பொருளாதாரச் செய்திகள், புள்ளிவிவரங்கள், அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் போன்றவற்றை கவனிக்க வேண்டும்.

ஏனென்றால், பொருளாதாரக் கொள்கை முடிவுகள் அனைத்தும் சந்தையில் எதிரொலிக்கவே செய்யும். தவிர, டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்து முடிவுகள் எடுக்க வேண்டும். சந்தையில் அனைத்துப் பங்குகளின் போக்குகளையும் கவனிப்பதைவிட டே டிரேடிக்கிற்கு உகந்த, குறிப்பிட்ட சில பங்குகளை மட்டும் தொடர்ந்து கவனித்து அதற்கேற்ப செயல்பட்டால் லாபம் ஈட்டலாம்.''

டே டிரேடிங்கில் பங்குகளைத் தேர்வு செய்வது எப்படி?

மூன்று வருட முதலீடு என்று யோசித்து மூன்று மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் (ரிலையன்ஸ் குரோத் ஃபண்ட், சுந்தரம் செலக்ட் மிட் கேப் ரெகுலர் ப்ளான், ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200) மாதம் 5,000 ரூபாய் வீதம் கட்டி வருகிறேன். ஆனால், முதலீட்டுக் காலத்தை ஐந்து வருடமாக நீட்டித்தால் இந்த ஃபண்டுகளிலேயே தொடரலாமா? அல்லது ஃபண்டுகளை மாற்றிக்கொள்ளலாமா?

ஒரு வாசகர். ராமலிங்கம், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் ப்ளானர்.

டே டிரேடிங்கில் பங்குகளைத் தேர்வு செய்வது எப்படி?

''மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு களிலிருந்து வருமானத்தை எதிர்பார்க்க குறைந்தபட்சம் ஐந்து வருடங்களாவது காத்திருக்க வேண்டும். அப்போதுகூட இத்தனை சதவிகிதம் வருமானம் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

ரிலையன்ஸ் குரோத், சுந்தரம் செலக்ட் ஃபண்ட் திட்டங்கள் சராசரியான வளர்ச்சி மட்டுமே இருப்பதால் இதைவிடவும் கூடுதலாக வருமானம் தரும் ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி திட்டங்களில் முதலீட்டை மாற்றலாம். ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 முதலீட்டைத் தொடரலாம். ஐந்து வருட இடைவெளியில் இந்த ஃபண்டுகள் நல்ல வருமானத்தைத் தரும் என எதிர்பார்க்கலாம்.''

2010-ல் எனது சித்தப்பாவின் வீட்டை வாங்கத் திட்டமிட்டு பணம் தந்து, அந்த வீட்டிற்கும் குடி வந்துவிட்டோம். பத்திரங்களும் எங்களிடம்தான் உள்ளது. இந்த நிலையில் பத்திரப்பதிவு செய்வதற்கு சில நாட்களுக்கு முன் என் சித்தப்பா இறந்துவிட்டார். ஆனாலும், தொடர்ந்து அந்த வீட்டிலேயே வசித்து வந்தோம். தற்போது அந்த வீட்டின் இன்றைய மதிப்பிற்கு பணம் தந்தால்தான் பத்திரப்பதிவு செய்து தருவோம் என்கிறார்கள் சித்தப்பாவின் வாரிசுகள். என்ன செய்வது?

வீ.பாரதி, பாபநாசம். குணசேகரன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

''2010-ல் உங்கள் சித்தப்பாவின் வீட்டை வாங்கத் திட்டமிட்டு பணம் தந்ததும், கிரய ஒப்பந்த அடிப்படையில் பணம் செலுத்தி பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு சொத்தை சுவாதீனத்தில் எடுத்து, குடியிருந்து வருகிறீர்கள். எனவே, இதை வாய்மொழி கிரய ஒப்பந்தமாக எடுத்துக்கொள்ளலாம்.

இதன் அடிப்படையில் கிரய ஒப்பந்தத் தொகை செலுத்தப்பட்டுள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக நீங்கள் நிரூபிக்கும்பட்சத்தில், கிரயப் பத்திரம் எழுதித் தர சித்தப்பாவின் வாரிசுகளை நிர்ப்பந்தப்படுத்த நீதிமன்றத்தை அணுகலாம்.''

ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி என்றால் என்ன? ஃப்ளோட்டர் பாலிசி எடுப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன?

வே.கீதா, திண்டிவனம். சுந்தரராஜன், வெல்த் அட்வைஸர், ஐ.என்.ஜி.வைஸ்யா.

''ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் ஒரு வகைதான் ஃப்ளோட்டர் பாலிசி. குடும்ப நபர்களுக்கு தனித்தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வதைவிட குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இணைத்து இந்த பாலிசியை எடுக்கலாம்.

டே டிரேடிங்கில் பங்குகளைத் தேர்வு செய்வது எப்படி?

குடும்ப உறுப்பினர்கள் தனித் தனியாகவோ அல்லது யாராவது ஒருவர் மொத்தமாகவோகூட இதன்மூலம் க்ளைம் செய்துகொள்ளலாம். இதற்கு தனித்தனி பாலிசிக்கு ஆகும் பிரீமியத் தொகையைவிட குறைவான பிரீமியம் இருக்கும். கணவன், மனைவி, குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு இத்திட்டம் பொருத்தமானது. மூத்தக் குடிமக்கள்கொண்ட குடும்பமாக இருந்தால் அவர்களுக்கு என்று தனி பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது.''

சென்னையில் 150-க்கும் மேற்பட்ட ஃப்ளாட் கொண்ட  அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு ஃப்ளாட்டை நான் வாங்கினேன். பில்டர் நல்ல நிலத்தடி நீர் இருப்பதாக விளம்பரம் செய்திருந்தார். அதை நம்பி நானும் வீடு வாங்கிவிட்டேன். தற்சமயம் அந்த இடத்தின் நீரை உபயோகப்படுத்த முடியாத நிலையில், குடிநீரை வெளியில் வாங்கும் நிலை உள்ளது. இதற்கு நுகர்வோர் நீதிமன்றத்தின் மூலம் தீர்வுகாண முடியுமா?

குமரகுருபரன், சென்னை. தேசிகன், நிறுவனர் அறங்காவலர், கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, சென்னை.

''பில்டர் கொடுத்த விளம்பரத்தில் நல்ல நிலத்தடி நீர் என குறிப்பிட்டிருந்தால் அது பில்டர் செய்த மோசடிதான். இதுகுறித்து ஒப்பந்தம் போட்டிருந்தாலோ அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிடாமல் இருந்தாலோகூட நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தின் மூலம் வழக்குத் தொடுக்க முடியும்.''  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism