Published:Updated:

தங்க நகைக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

தங்க நகைக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

கேள்வி - பதில்

##~##

தங்க நகைகளை இன்ஷூரன்ஸ் செய்ய முடியுமா? இன்ஷூரன்ஸ் எடுத்தால் அந்த நகைகளை எங்கு வைக்க வேண்டும்?

- சீதாலட்சுமி, பொள்ளாச்சி.  சந்தானகிருஷ்ணன், டெபுடி மேனேஜர், ஓரியன்டல் இன்ஷூரன்ஸ்.

''தங்க நகை விற்பனையாளர் என்றால் மட்டுமே நகைகளுக்கு என்று தனியாக இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும். வீடுகளில் சொந்த பயன்பாட்டிற்கு இருக்கும் தங்க நகைகளுக்கு தனியாக இன்ஷூரன்ஸ் எடுக்க முடியாது. ஆனால், ஹவுஸ் ஹோல்டர்ஸ் பாலிசியுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். தங்க நகைகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொண்டாலும், அதை அணிந்துகொள்வதற்கு கட்டுப்பாடு கிடையாது. இன்ஷூரன்ஸ் செய்ய விரும்பும் தங்க நகையின் மதிப்பைப் பொறுத்து, பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும். குறிப்பாக, இன்ஷூரன்ஸ் செய்யும் மதிப்பு ரூ.1000 என்றால், பிரீமியம் ரூ.5 என்கிற அளவில் இருக்கும். இது நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும். இன்ஷூரன்ஸ் க்ளைம் செய்கிற சூழ்நிலை இருக்கும்பட்சத்தில் பாதிப்பை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே க்ளைம் செய்ய முடியும்.''

நான் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறேன். ஒரு பொதுத் துறை வங்கியில் சேமிப்புக் கணக்கு, இ.ஆர்.எஸ். கணக்கு, (ஜாயின்ட் அக்கவுன்டில் யாராவது ஒருவர் அல்லது உயிருடன் இருப்பவர்)என்.ஆர்.ஐ. கணக்கு என மூன்றும் வைத்துள்ளேன். இவற்றிற்கு என தனித்தனியாக மூன்று ஆன்லைன் ஐ.டி. வைத்துள்ளேன். அவற்றிற்கு ஒரே ஐ.டி. பயன்படுத்த முடியுமா? இதற்கு என்ன செய்யவேண்டும்?

முகம்மது ரஸ்வி, துபாய். கணேசன், உதவி பொது மேலாளர், பஞ்சாப் நேஷனல் வங்கி.

தங்க நகைக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

''ஆன்லைன் பேங்கிங் வசதியில் இந்த மூன்று கணக்குகளையும் ஒரே ஐ.டி.யில் பயன்படுத்த முடியாது. ஆனால், சேமிப்புக் கணக்கு மற்றும் இ.ஆர்.எஸ். கணக்கு இரண்டிற்கும் ஒரு ஆன்லைன் ஐ.டி.யும், என்.ஆர்.ஐ. கணக்கிற்கு தனி ஐ.டி.யும் பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே, இரண்டு ஐ.டி.களாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால், பழைய வாடிக்கையாளர் என்கிறபோது வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு அவர்களின் வழிகாட்டுதல்படிதான் மேற்கொள்ள முடியும்.''

நான் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் கிரெடிட் கார்டும் வைத்திருக்கிறேன். கிரெடிட் கார்டில் பிரச்னை காரணமாக பணம் கட்டாமல் தாமதித்து வந்தேன். இந்நிலையில் எனது சேமிப்புக் கணக்கிலிருந்து கிரெடிட் கார்டுக்குரிய பணத்தை எனது அனுமதி இல்லாமல் எடுத்துக்கொண்டனர். இது சரியா? இதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

பொன்.குமரகுரு, திருச்செங்கோடு. எஸ்.கோபாலகிருஷ்ணன், நிதி ஆலோசகர், திஷா நிதி சார்ந்த ஆலோசனை மையம்.

தங்க நகைக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

''பொதுவாக, வங்கிகள் கடன் அட்டை பற்றி தந்த விவரங்களிலும், கடன் அட்டை ஒப்பந்தத்திலும் பணம் கட்டவில்லை என்றால் நம் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தைப் பற்றி குறிப்பிட்டு இருக்கும். மேலும், கடன் அட்டையுடன் அனுப்பும் டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் விவரங்களிலும் இந்த அதிகாரத்தைத் தெரிவித்திருப்பார்கள். இதை ஒப்புக்கொண்டு விண்ணப்பத்திலும், ஒப்பந்தத்திலும் கையப்பமிட்டு இருப்பீர்கள் எனில்,  அதன் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் வேறு கணக்கிலிருந்து கடன் அட்டைக்குரிய பணத்தை எடுத்துக்கொள்வார்கள். இதுதவிர, வங்கி பொது உரிமைச் சட்டத்தின்படி, அவர்கள் பணத்தை வசூல் செய்ய வேறு கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ள அதிகாரம் உள்ளது. எனவே, வங்கியின் இந்த நடவடிக்கைகளில் தவறு கிடையாது. இதற்கு எதிராக நீங்கள் நடவடிக்கை கோரவும் முடியாது.'

தங்க நகைக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

எனது ஆண்டு வருமானம் 3,50,000 ரூபாய். நான் அடுத்த வருடம் வீடு கட்டத் திட்டமிட்டுள்ளேன். நான் வருமான வரிச் சலுகை பெற முடியுமா?

ஒரு வாசகர், ஆன்லைன் மூலம். சத்தியநாராயணன், ஆடிட்டர்.

''சொந்தப் பணத்தைக்கொண்டு வீடு கட்டும்போது வருமான வரிச் சலுகை கிடைக்காது. ஆனால், வீட்டுக் கடன் மூலம் வீடு கட்டினால் வரிச் சலுகை பெறமுடியும். குறிப்பாக, வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுகிறீர்கள் என்றால் திருப்பிச் செலுத்தும் அசலில் ஒரு லட்சமும், திருப்பிச் செலுத்தும் வட்டிக்கு 1.5 லட்சமும் வரிச் சலுகை பயன் பெறலாம். அதேநேரத்தில், கடன் தொகை 25 லட்சத்துக்குள், வீட்டின் மதிப்பு 40 லட்சத்திற்குள் இருந்தால் பட்ஜெட் அறிவிப்புபடி, திரும்பச் செலுத்தும் வட்டியில் கூடுதலாக 1 லட்சம் ரூபாய்க்கு வரிச் சலுகை பெற முடியும். இந்தக் கடனை 2014 மார்ச் 31-க்குள் வாங்கினால் மட்டுமே கூடுதல் வட்டிச் சலுகை கிடைக்கும்.''

 நான் கமாடிட்டியில் டே டிரேடிங் செய்து வருகிறேன். அதிலிருந்து கிடைக்கிற தொகையில் பரிவர்த்தனைக் கட்டணம், சேவை வரி, புரோக்கரேஜ் கட்டணம் போன்றவற்றை புரோக்கர் பிடித்தம் செய்துகொண்டுதான் என் கணக்கில் மீதிப் பணத்தை வரவு வைக்கிறார். இதுதவிர, லாபத்துக்கு நான் வருமான வரி தனியாக கட்டவேண்டுமா?

  பாஸ்கர், கோயம்புத்தூர்.   இ.எம்.சி. பழனியப்பன். சோனா ஃபைனான்ஷியல் சர்வீஸஸ்.

'' கமாடிட்டி வர்த்தகத்தின் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் இதுபோன்ற கட்டணங்களை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் கட்டவேண்டியது அவசியம். இப்படி பிடித்தம் செய்யப்படும் தொகைக்கும், நீங்கள் கட்டவேண்டிய வருமான வரிக்கும் சம்பந்தம் கிடையாது. இந்தப் பிடித்தங்கள் என்பது கமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக கட்டவேண்டிய பொதுவான கட்டணங்கள். இந்தக் கட்டணங்கள் போக உங்களுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு ஏற்ப வருமான வரி கணக்கிடப்படும். இதை நீங்கள் தனியாகத்தான் கட்ட வேண்டும்.''

தங்க நகைக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு