Published:Updated:

நகை அடமானம்... குறைவான வட்டி சாத்தியமா..?

நகை அடமானம்... குறைவான வட்டி சாத்தியமா..?

நகை அடமானம்... குறைவான வட்டி சாத்தியமா..?

நகை அடமானம்... குறைவான வட்டி சாத்தியமா..?

Published:Updated:

 கேள்வி-பதில்

##~##

?நான் தங்க நகைகளை அடகு வைப்பதற்காக எங்கள் பகுதியில் புதிதாக ஆரம்பித்த வங்கியின் கிளைக்குச் சென்றேன். அந்த வங்கியில் மற்ற வங்கிகளைவிட குறைவான வட்டி விகிதத்தை வசூலிக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகும்.?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 _ ராஜேஷ், விழுப்புரம்.    ஆர்.கணேசன், உதவிப் பொது மேலாளர், பஞ்சாப் நேஷனல் பேங்க்.

''வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தைப் பொறுத்து அமையும். வங்கி நிர்ணயித்து இருக்கும் அடிப்படை வட்டி (பேஸ் ரேட்) விகிதத்தைவிட அதிகமான சதவிகிதத்தில்தான் வட்டி விகிதம் இருக்கும். வங்கி எதிர்பார்க்கும் லாபம், நிர்வாகச் செலவு போன்ற பல விஷயங்களை அடிப்படையாக வைத்து கணக்கிடும்போது வட்டி விகிதம் ஒரு சில சதவிகிதங்கள் கூடவோ, குறையவோ செய்யலாம்.''

?கமாடிட்டி சந்தையில் வியாபாரம் செய்து வருகிறேன். பே-அவுட் கேட்டு ஒரு மாதம் ஆகியும் எனக்கு வரவில்லை. அதை எப்படி பெற வேண்டும்?  

@ - ராஜாராமன், கும்பகோணம். முருகேஷ் குமார், மேனேஜர், ஜே.ஆர்.ஜி. வெல்த் மேனேஜ்மென்ட்.

நகை அடமானம்... குறைவான வட்டி சாத்தியமா..?

''கமாடிட்டி சந்தையில் டிரேடிங் செய்வதற்குத் தந்த மார்ஜின் தொகையிலிருந்து பயன்படுத்தியது போக மீதமுள்ள தொகையைத் திரும்ப பெறுவதுதான் பே -அவுட் என்பார்கள். இந்தப் பணத்தை டிரேடர் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம். பே-அவுட் கேட்ட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பணத்தைத் தந்துவிடவேண்டும். இந்தப் பணத்தை காசோலையாக தரலாம் அல்லது முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் போடலாம். புரோக்கர் இப்படி செய்யவில்லை எனில் சம்பந்தப்பட்ட எக்ஸ்சேஞ்சிடம் புகார் செய்யலாம். ரெகுலேட்டரிடம் நேரடியாகப் புகார் செய்ய முடியாது. ஆர்ப்பிட்ரேஷன் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யலாம். அதன்பிறகு ரெகுலேட்டர் விசாரிக்கும்.''

?என் தகப்பனார் அவர் பெயரில் இருந்த வீட்டை எனக்கும், என் தம்பிக்கும் பாகம் பிரித்து உயில் எழுதி வைத்தார். ஒரிஜினல் உயிலை அடிப்படையாக வைத்து என் தம்பி வீட்டுக் கடன் வாங்கி அவருக்கு சொந்தமான பகுதியின் வீட்டை புதுப்பித்துக்கொண்டார். இப்போது வங்கிகள் உயிலின் நகலை வைத்துக்கொண்டு எனக்கு கடன் தர மறுக்கின்றன. வேறு வகையில் என்னால் வீட்டுக் கடன் பெறமுடியுமா?

 - கோ.முத்துராமன், மேடவாக்கம். பி.ரவிந்தீரநாத், உதவி பொதுப் மேலாளர், வீட்டுக் கடன் பிரிவு, எஸ்.பி.ஐ. வங்கி.

''எந்த வங்கியிலும் பத்திரத்தின் நகலை வைத்துக்கொண்டு கடன் தரமாட்டார்கள். ஒரிஜினல் பத்திரம் உங்கள் பெயரில் இருந்தால்தான் வீட்டுக் கடன் கிடைக்கும். அதோடு உயில் என்பது யாருக்கு எவ்வளவு சொத்து என்ற விவரத்திற்காக எழுதி வைக்கப்பட்டது. அதை அடமானமாக வைத்து கடன் வாங்க முடியாது. மேலும், வீடு உங்களின் பெயரில் இருந்தால் மட்டும்தான் கடன் கிடைக்கும்.''

நகை அடமானம்... குறைவான வட்டி சாத்தியமா..?

? நான் அரசு ஊழியர். என் மகன், மகளின் எதிர்காலத்திற்காக 1.5 லட்சம் ரூபாயை தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் ஐந்து மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய உள்ளேன். ஹெச்.டி.எஃப்.சி. டாப் - 200, டி.எஸ்.பி.பி.ஆர். டாப் 200 ஈக்விட்டி ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி, ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஸ் டிஸ்கவரி ஆகியவைதான் நான் தேர்வு செய்த ஃபண்டுகள். இவை நீண்ட காலநோக்கில் பயன் அளிக்குமா?

 - பி.முத்து அழகேசன், நிலக்கோட்டை. அபுபக்கர், நிதி ஆலோகர்.

''குழந்தையின் எதிர்காலத் தேவைகளுக்காக சேமிக்க மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்தது சரியே. ஆனால், நீங்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு காலமாவது முதலீடு செய்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஃபண்டுகள் அத்தனையும் ஈக்விட்டி சார்ந்தவை. எனவே, இதில் சில ஃபண்டுகளை மட்டும் மாற்றினால் போதும். ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி ஃபண்டில் மொத்தமாக முதலீடு செய்ய முடியாது. எஸ்.ஐ.பி. முறையில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஸ் டிஸ்கவரி, ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்டுகளை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. ஈக்விட்டி ஃபண்ட், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா டைனமிக் பி/இ. ரேஷியோ ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.''

?மூன்று வருடங்களுக்கு முன் பேப்பர் கப் தயாரிப்பு தொழில் செய்வதற்கான இயந்திரம் வாங்க தனியார் நிறுவனம் ஒன்றில் 80,000 ரூபாயை அட்வான்ஸாக செலுத்தினேன். இந்த இயந்திரத்திற்கான மானியமும் அவர்களே பெற்றுத் தருவதாக சொன்னார்கள். ஆனால், இன்னும்கூட இயந்திரம் கிடைக்கவில்லை. காலதாமதம் ஆனதால் தொழில் செய்யும் முடிவையே கைவிட்டுவிட்டேன். இப்போது அந்நிறுவனம் நான் தந்த அட்வான்ஸ் தொகையை திருப்பித் தர மறுக்கிறது. இந்நிறுவனத்தின் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா?

 - காயத்ரி தேவி, கோவை. கே.எம். ரமேஷ். வழக்கறிஞர்.

''அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். உங்களை ஏமாற்றிய குற்றத்திற்காக சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடுக்க முடியும். இதற்கு முதலில் அந்த நிறுவனத்திற்கு உங்களின் புகாரை கடிதமாக எழுதி அனுப்புங்கள். இதற்கு எந்தவிதமான பதிலும் வரவில்லை எனில் வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்புங்கள்.''

நகை அடமானம்... குறைவான வட்டி சாத்தியமா..?

?நகராட்சி பணியாளரான எனக்கு ஜூலை 2015-ல் பணி ஓய்வு கிடைத்துவிடும். ஓய்வுக்காலத் தேவைகளுக்காக எதில் முதலீடு செய்யவேண்டும். ரிஸ்க் இல்லாத முதலீடுகள் எவை?

@ - ஞானதேசிகன், விழுப்புரம். ராதாகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

''உங்கள் முதலீட்டுக் காலம் மிகவும் குறைவாக உள்ளதால் ரிஸ்க் எடுக்க முடியாது. எனவே, ரிஸ்க் குறைந்த அத்துடன் ஃபிக்ஸட் வருமானம் தரக்கூடிய முதலீடுகளைத் தேர்வு செய்வது நல்லது. கடன் சார்ந்த ஃபண்டுகள், ஃபிக்ஸட் டெபாசிட், பி.பி.எஃப். ஆகியவற்றில் உங்களின் முதலீட்டை மேற்கொள்ளலாம்.''

?மருத்துவ முன்பதிவு பரிசோதனை செய்துகொண்டால் 5 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்கு கிடைக்கும் என்கிறார்கள். இதன் நடைமுறை என்ன?  

 - மனோகரன், கள்ளகுறிச்சி. இளங்குமரன், ஆடிட்டர்.

''கடந்த நிதி ஆண்டு (2012 -13) முதல்  வருமான வரியில் மருத்துவ முன்பரிசோதனைக்காக 5 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்குப் பெறலாம். கணவன் / மனைவி, குழந்தைகள், கணவனைச் சார்ந்திருக்கும் பெற்றோர் என அனைவருக்கும் இதில் வரிவிலக்குப் பெற முடியும். பணம், காசோலை, கிரெடிட் கார்டு என எந்த முறையிலும் பரிசோதனைக் கட்டணத்தைச் செலுத்தலாம். இது வருமான வரிச் சலுகை பிரிவு 80டி-ன் கீழ் வரும்.''

படம்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism