ஷேர் மார்க்கெட் முதல் ரியல் எஸ்டேட் வரை...

ஆசியாவின் முதல் பங்குச் சந்தையான பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், சுமார் 138 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு இந்தியாவில் 120 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையினரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பவர்கள் ஒற்றை இலக்கத்தைத் தாண்டிச் செல்லவில்லை.

காரணம், நம்மை யாராவது ஏமாற்றி, பணத்தை பறித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்கிற பயம்தான். இந்தப் பயத்தைப் போக்கி, ஏமாறாமல் பாதுகாப்பாக முதலீடு செய்ய என்ன செய்யவேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

பங்குச் சந்தை முதலீட்டுக்கு ஆதாரமாக டீமேட் கணக்கு இருக்கிறது. வங்கி சேமிப்புக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவது போல் இந்த டீமேட் கணக்கில், முதலீடு செய்யப்படும் பங்குகள் வரவு வைக்கப்படும். சிலர், டீமேட் கணக்கு பராமரிப்புக்கு என ஆண்டுக்கு சுமார் 500 ரூபாய் செலவிட வேண்டியிருக்கிறதே என்று நண்பர்கள் அல்லது உறவினர்களின் பெயரில் இருக்கும் டீமேட் கணக்கில் பங்குகளை வாங்குகிறார்கள். டீமேட் கணக்கு யார் பெயரில் இருக்கிறதோ, அவர் தன் பெயரில் இருக்கும் பங்குகளை யாரிடமும் சொல்லாமல்கொள்ளாமல் விற்க முடியும். உங்களுக்கு நெருங்கிய சொந்தக்காரர் என்றாலும் இந்தத் தகவலை உங்களிடம் சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதில்லை. எனவே, சில நூறு ரூபாய் மிச்சப்படுத்த நினைத்து, பல லட்சங்களை இழக்காதீர்கள். உங்களுக்கே உங்களுக்கு என ஒரு டீமேட் கணக்கை கட்டாயம் தொடங்கிக்கொள்ளுங்கள்.

உங்கள் டீமேட் கணக்கில் நான் வர்த்தகம் செய்கிறேன் என்று புரோக்கர்கள், நண்பர்கள் யாரேனும் சொன்னால் அதற்கு அனுமதிக்கவே அனுமதிக்காதீர்கள். அப்படி செய்தால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஏமாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது.

மிக முக்கியமாக கவனிக்கவேண்டியது, பங்கு புரோக்கரின் நம்பகத்தன்மை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் புரோக்கர், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் பதிவு செய்திருக்கிறாரா என்பதைக் கவனியுங்கள். அவரது பதிவு எண்ணை பெற்று அருகிலுள்ள

செபி அலுவலகத்துக்கு நேரில் சென்றோ அல்லது தொலைபேசி, கடிதம் மூலம் விசாரித்தறிந்தபின்போ புரோக்கரை பற்றி உறுதி செய்யுங்கள்.

கூடுமானவரை உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் என்கிற கே.ஒய்.சி. படிவத்தை நீங்களே பூர்த்தி செய்யுங்கள். புரோக்கர் அலுவலகத்தில் பூர்த்தி செய்திருந்தால், அதில் தரப்பட்டிருக்கும் விவரங்கள் எல்லாம் சரியா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் செல்போன் நம்பர், இ-மெயில் முகவரி எல்லாம் உங்களுடையதுதானா? என்பதை சரிபாருங்கள். இதில் தவறு இருந்தால், நீங்கள் செய்யும் முதலீடு மற்றும் வர்த்தகம் பற்றிய விவரங்கள் தவறான செல்நம்பர் மற்றும் இ-மெயிலுக்கு செல்லும். அப்போது உங்கள் கணக்கில் மேற்கொள்ளப்படும் விவரம் உங்களுக்கு வராமலே போக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கணக்கில் இருக்கும் பங்குகள் விற்கப்பட்டால், அந்த விவரம் தெரியாமலே போய்விடும் அபாயம் இருக்கிறது.

பங்கு புரோக்கரிடம் டிரேடிங் கணக்கு ஆரம்பிக்கும்போது பங்குகளை வாங்கி விற்பது சுலபமாக இருக்கும் என பவர் ஆஃப் அட்டர்னி கேட்பார். அதை தரவேண்டிய அவசியமில்லை என செபி அமைப்பே சொல்லி இருக்கிறது. பவர் ஆஃப் அட்டர்னி தரும்பட்சத்தில், உங்களை கேட்காமலே அல்லது உங்களுக்குத் தெரியாமலே உங்கள் கணக்கில் இருக்கும் பங்குகள் விற்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படியே பவர் ஆஃப் அட்டர்னி தந்திருந்தால், உங்கள் டீமேட் கணக்கில் நடக்கும் பரிவர்த்தனை விவரங்கள் எஸ்.எம்.எஸ். அல்லது மெயில் மூலம் வந்து சேரும் வசதிக்கு ஏற்பாடு செய்துகொள்வது அவசியம்.

பங்குகளில் முதலீடு செய்யும்போது அதற்கான கான்ட்ராக்ட் நோட்டை கேட்டு பெறுங்கள். இது முதலீடு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் முதலீட்டாளரின் கைக்கு சென்று சேரவேண்டும் என்பது செபி விதிமுறை. இந்த கான்ட்ராக்ட் நோட் தபால் மூலம் அல்லது இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதில் உள்ள விவரங்கள் சரியா என்பதைப் பார்த்து வாங்குவது அவசியம். நீங்கள் புரோக்கருக்கு பவர் ஆஃப் அட்டர்னி தந்துள்ள நிலையில், 100 பங்குகளை விற்கச் சொல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் கணக்கில் உள்ள 150 பங்குகளையும் புரோக்கர் அலுவலகம் விற்றுவிட்டு, உங்கள் கணக்கில் வெறும் 100 பங்குகளுக்கு உரிய பணத்தை மட்டும் வரவு வைக்க வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர்க்க கான்ட்ராக்ட் நோட்டை கூர்ந்து படிப்பது அவசியம்.

உங்களது டிரேடிங் கணக்கு விவரங்கள், அதன் யூஸர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்ட விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மேலும், புரோக்கர் அலுவலகம் சென்று முதலீடு அல்லது வர்த்தகம் செய்யும்போது அங்குள்ள பணியாளர்களிடம்கூட உங்களது ஆன்லைன் யூஸர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டை சொல்லாதீர்கள். தேவைப்பட்டால் நீங்களே கம்ப்யூட்டரில் டைப் செய்யுங்கள். இந்த பாஸ்வேர்டை முடிந்தால் அடிக்கடி மாற்றுவது பாதுகாப்பானது.

எஸ்.எம்.எஸ் அல்லது மெயில் மூலம் வரும் வரும் டிப்ஸ்களை நம்பி கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யாதீர்கள். அந்த நிறுவனத்தின் அடிப்படை மற்றும் பாரம்பரியம் பற்றி அறிந்துகொண்டு அதன்பிறகு முதலீடு செய்யுங்கள்.

உங்களது டீமேட் கணக்கில் உங்கள் அனுமதி இல்லாமல் பங்குகளை விற்றிருந்தால் உடனடியாக புரோக்கிங் நிறுவனத்திடம் புகார் செய்யுங்கள். இந்த புகார் வாய்வழியாக மட்டும் இருக்கக்கூடாது. கடிதம் அல்லது இ-மெயில் மூலம் புகாரை பதிவு செய்யவேண்டும். புரோக்கரிடமிருந்து பதில் வரவில்லை அல்லது வந்த பதில் திருப்திகரமாக இல்லை எனில் பங்குச் சந்தைக்கும், செபிக்கும் புகார் அனுப்பவேண்டும். புரோக்கிங் நிறுவனத்திடம் புகார் செய்யாமல், நேரடியாக பங்குச் சந்தை அல்லது செபியிடம் புகார் செய்தால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பொறுத்தவரை, அனைத்துப் பரிவர்த்தனை களையும் காசோலை மூலம் மட்டுமே மேற்கொள்ளுங்கள். யாரிடமும் பணமாக கொடுக்காதீர்கள்.

ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் என்கிறபட்சத்தில், முதலீடு செய்த ஐந்து தினங்களுக்குள் அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் வந்துவிடவேண்டும். புதிய ஃபண்ட் என்கிறபோது என்.எஃப்.ஓ. முடிந்த 45 நாட்களில் அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் வந்துவிடும். இதற்குமேல் காலதாமதமானால் உங்கள் ஏஜென்ட் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு காரணம் கேளுங்கள்.

யூனிட்களை விற்று பணமாக்கும்போது, பத்து தினங்களுக்குள் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும். இல்லையெனில், ஏன் காலதாமதம் என்று விசாரியுங்கள். சில நேரங்களில் உங்களின் பான் கார்டு எண் அல்லது கே.ஒய்.சி. குறித்த விவரங்களில் ஏதாவது தவறு இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதை சரிசெய்தால் மட்டுமே உங்களுக்கு பணம் கிடைக்கும்.

மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் முதலீடு செய்திருக்கும் ஃபண்டின் போர்ட்ஃபோலியோவை குறிப்பிட்ட இடைவெளியில் கட்டாயம் கவனியுங்கள். அதில் ஏற்படும் மாற்றம் ஃபண்டின் ரிஸ்கை அதிகரிப்பதுபோல் இருந்தால், வேறு பாதுகாப்பான முதலீட்டுக்கு மாற்றிக்கொள்வது நல்லது.

ஃபண்ட் மேனேஜர் மாறினாலும் உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை மறுபரிசீலனை செய்வது அவசியம்.

முகவரி மற்றும் வங்கிக் கணக்கு மாறும்போது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு தகவல் அனுப்ப மறந்துவிடாதீர்கள். இந்த இரண்டும் மாறும்போது டிவிடெண்ட் தரப்பட்டால், அது உங்களுக்கு கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. மேலும், ஃபண்டில் டிவிடெண்ட் கொடுத்த விவரமே உங்களுக்கு வந்துசேராமலே போக வாய்ப்புள்ளது.

எஃப்.டி.யைப் பொறுத்தவரை பொதுத் துறை வங்கிகள், தபால் அலுவலகங்களில் செய்தால் பணம் பறிபோகும் என்கிற பிரச்னையே வராது. தனியார் நிறுவனங்களின் எஃப்.டி.களில் சிக்கல் வர வாய்ப்புள்ளது. அதிக வட்டி தரும் வங்கிச் சாரா நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் எஃப்.டி.யில் பணம் போடும்முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். புகார்களில் சிக்கித் தவிக்கும் நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

வங்கி எஃப்.டி.யில் அதிக தொகையை டெபாசிட் செய்வதாக இருந்தால், ஒவ்வொரு வங்கியிலும் 1 லட்சம் என பல வங்கிகளில் பிரித்து முதலிடுங்கள். ஒரு வங்கி திவாலானால்கூட அதில் செய்யப்பட்டிருக்கும் டெபாசிட்டில் ஒருவருக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும்தான் டெபாசிட் இன்ஷூரன்ஸ் உள்ளது.

(அடுத்த இதழில் இன்ஷூரன்ஸ், தங்கம், ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளைப் பற்றி பார்ப்போம்.)