Published:Updated:

ஷேர்லக் - புதன், வெள்ளி உஷார் !

ஷேர்லக் - புதன், வெள்ளி உஷார் !

ஷேர்லக் - புதன், வெள்ளி உஷார் !

ஷேர்லக் - புதன், வெள்ளி உஷார் !

Published:Updated:
##~##

''மோடி கில்லாடிதான், ராஜகுருவின் எதிர்ப்பையும் மீறி பிரதமர் வேட்பாளர் ஆகிவிட்டார் பார்த்தீரா?'' என்று கேட்டபடி உள்ளே நுழைந்தார் ஷேர்லக். ''நிதித் துறை பற்றி நிறைய செய்திகளைச் சொல்வீர்கள் என்று பார்த்தால், அரசியல் பேசுகிறீர்களே'' என்றோம். ''அரசியல் செய்திகளுக்கு கழுகார் இருக்க, எனக்கெதற்கு அந்த வேலை?'' என்றவர், செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.

டாலடித்த டாடா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கடந்த வாரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை ஒரேநாளில் 10 சதவிகிதம் அதிகரித்தது. இந்தோனேஷியா சந்தையில் புதிதாக நுழைந்து அதிரடியாக மூன்று வகை வாகனங்களை அறிமுகப்படுத்தியதே இதற்கு காரணம். ஆனால், இந்தியாவில் இன்னுமொரு பொருளாதார நெருக்கடி வருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருப்பதால், ஆட்டோ துறை பங்குகளின் விலை பெரிதாக உயர  வாய்ப்பில்லை. எனவே, பாய்ந்து பாய்ந்து அந்தத் துறை பங்குகளை வாங்க வேண்டாம்!'' என்றவருக்கு, மொறு மொறு முறுக்கு தந்தோம்.

சிறகடித்த சேச கோவா!

ஷேர்லக் - புதன், வெள்ளி உஷார் !

''இணைப்புக்குப் பிறகு சேச கோவா பங்கின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறதே?'' என்றோம்.

''கடந்த மாத காலத்தில் இந்தப் பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் 50 சதவிகித லாபம் தந்திருக்கிறது.  சேச கோவா வுடன் ஸ்டெர்டைட் இண்டஸ்ட்ரீஸ் இணைக்கப் பட்டபிறகு சேச கோவா பங்கு மீதான வர்த்தகம் அதிகரித்துள்ளதோடு, பங்கின் விலை நன்றாகவே உயர்ந்துள்ளது. நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த ஏற்றத்தைக் கவனிக்கலாம்!'' என்றார்.

டி.சி.எஸ். நம்பர்-2

''நம்மூர் டி.சி.எஸ். நிறுவனம் உலக அளவில் பேசப்படும் அளவுக்கு உயர்ந்திருக்கிறதே?'' என்று கேட்டோம்.

''டாலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியால் பல ஐ.டி. துறை பங்குகள் நல்ல ஏற்றத்தைக் கண்டன.  குறிப்பாக, டி.சி.எஸ். பங்குகளின் விலை கணிசமாக உயரவே, அது சர்வதேச அளவில் இயங்கும் ஐ.டி. நிறுவனங்களில் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் அடிப்படையில் ஐ.பி.எம். நிறுவனத்துக்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஐ.பி.எம்.-ம் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் 20,200 கோடி டாலராகவும், டி.சி.எஸ். மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் சுமார் 6,000 கோடி டாலராகவும் உள்ளது. ரூபாய் மதிப்பு உயர்ந்தால் இந்தக் கணக்கு மீண்டும் மாறும்'' என்றார்.  

எகிறிய எஃப்.டி.ஐ.எல்!

''ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் இந்தியா பங்கின் விலை ஒரே நாளில் சுமார் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதே?'' என்று வினவினோம்.

''நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் பிரச்னை யில் ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் இந்தியா நிறுவன (எஃப்.டி.ஐ.எல்.) பங்கின் விலை குறையத் தொடங்கியது. இந்நிலையில் எம்.சி.எஸ். ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சந்தையின் லைசென்ஸை ஓராண்டுக்கு செபி நீடித்து உள்ளதால் எஃப்.டி.ஐ.எல். பங்கின் விலை ஒரேநாளில் அதிரடியாக 28.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எம்.சி.எக்ஸ். பங்கின் விலையும் 5% உயர்ந்துள்ளது. இந்தப் பங்கு களில் முதலீடு செய்வது ரிஸ்க் அதிகம் என முன்பு சொன்னேன். இப்போதும் அதையே சொல்கிறேன். ஆனால், ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்கள் தாராளமாக வாங்கலாம்!

இந்தச் செய்தியோடு தொடர்புடைய இன்னொரு செய்தியையும் சொல்கிறேன். எம்.சி.எக்ஸ். ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் தலைவராக இருக்கும் ஜோசப் மாஸ்சே-ன் பதவி ஊசலாடிக் கொண்டிருப்பதாக தகவல். இந்த எக்ஸ்சேஞ்ச், செபியின் கிளியரிங் விதிமுறைகளை சரிவர பின்பற்றவில்லை என்பதே இதற்கு காரணமாம்!'' என்றார் முறுக்கை தின்றபடி.

வெயிட் கூடிய பங்குகள்!

''எஃப்.டி.எஸ்.இ. குளோபல் இண்டெக்ஸ்-ல் பல இந்திய நிறுவனப் பங்குகளுக்கு வெயிட்டேஜ் கூடியிருக்கிறதே?'' என ஆச்சர்யத்துடன் கேட்டோம். ''இந்த இண்டெக்ஸ்-ல் ஹெச்.டி.எஃப்.சி., அப்போலோ டயர்ஸ், இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் மற்றும் எம் அண்ட் எம் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனப் பங்குகளின் வெயிட்டேஜ் கணிசமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ஹெச்.டி.எஃப். வெயிட்டேஜ் 74 சதவிகிதத் திலிருந்து 100 சதவிகிதமாக அதிகரித்துள்ளது'' என்றார்.  

அல்ட்ராடெக் டேக்ஓவர்!

''அல்ட்ராடெக் நிறுவனம், ஜே.பி. சிமென்டை வாங்கிவிட்டதே?'' என்றோம்.

''ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ராடெக் நிறுவனம், ஜேபி சிமென்ட்-ன் குஜராத் தொழிற்சாலையை 3,800 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது. ஆனாலும், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் பங்கு விலை 12 சதவிகிதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம், இந்தக் கையகப்படுத்தலுக்கு ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் அதிக பிரீமியம் வாங்காமல் விட்டுவிட்டார்களே என முதலீட்டாளர்கள் எண்ணியதே!'' என்று சொன்னார்.

எம்.என்.சி.களுக்கு சலுகை!

''எம்.என்.சி. நிறுவனங்களுக்கு மட்டும் தனிச் சலுகை தந்திருக்கிறதே ஆர்.பி.ஐ., என்ன காரணம்?'' என்று விசாரித்தோம்.

''எம்.என்.சி. நிறுவனங்கள், அவற்றின் பங்குகளை 5 சதவிகிதத்திற்குள் எனில் இனி ஆர்.பி.ஐ.-ன் அனுமதி இல்லாமலே சந்தையில் வாங்கிக்கொள்ள ஆர்.பி.ஐ. அண்மையில் அனுமதித்துள்ளது. அந்த வகையில் இனி எம்.என்.சி. நிறுவனப் பங்குகள் மீதான வர்த்தகம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் 35 எம்.என்.சி நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன'' என்று விளக்கினார். அவருக்கு சுடச்சுட ஏலக்காய் டீ தந்தோம்.

மாறிய பங்குகள்!

''பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ. சந்தைகள் சில மாற்றங்களை செய்திருக்கிறதே?'' என்றோம்.

''முதலீட்டாளர்களின் நலன் கருதி பல பங்குகளை நிபந்தனைக்கு உட்பட்ட பிரிவுக்கு பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ. பங்குச் சந்தை கள் மாற்றி உள்ளன. பிரமல் லைஃப் சயின்ஸ், ஆதித்ய பிர்லா மணி போன்ற பங்குகள் இப்படி மாற்றப்பட்டுள்ளன. மேலும், ஆஸ்ட்ரல் கோக் அண்ட் புராஜெக்ட்ஸ், பி.எஸ்.இ.எல். இன்ஃப்ரா, உத்தம் சுகர் மில்ஸ் உள்ளிட்ட 24 பங்குகள் டி குரூப்பிற்கு மாற்றப் பட்டுள்ளன'' என்றவரிடம் கிளம்புவதற்கு முன், ''இனி சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?'' என்று கேட்டோம்.    

''சென்செக்ஸ் 18000-க்கு கீழே போகுமா? 20000-ஐ தாண்டுமா என்பது இரண்டு கூட்டங்களின் முடிவை பொறுத்து இருக்கிறது. முதல் கூட்டம் செப்டம்பர் 18-ம் தேதி நடக்கும் அமெரிக்காவின் ஃபெடரல் ஓப்பன் மார்க்கெட் கமிட்டி கூட்டம். இதில் அமெரிக்காவில் பொருளாதார நிலை மேம்பட்டு வருவதால் கடன் பத்திரங்களை தொடர்ந்து வாங்குவது, தற்போது வழங்கப்பட்டு வரும் ஊக்கச் சலுகைகளை தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. அடுத்து செப்டம்பர் 20-ம் தேதி அன்று நடக்கும் ஆர்.பி.ஐ. கூட்டத்தில் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுவதைப் பொறுத்து சந்தையின் போக்கு இருக்கும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். எனவே, உஷார். மழை வருவதற்குள் வீடுபோய் சேர்கிறேன்''  என்று சொல்லிவிட்டு, நடையைக் கட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism