Published:Updated:

ரயில்வேயில் அதிக முதலீடு: நாட்டின் பொருளாதாரம் உயரும் என்கிறார் சுரேஷ் பிரபு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரயில்வேயில் அதிக முதலீடு: நாட்டின் பொருளாதாரம் உயரும் என்கிறார் சுரேஷ் பிரபு!

புனே: ரயில்வேத்துறையில் அதிக முதலீடு செய்வதால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறி உள்ளார்.

மகாராஷ்டிர மாநில புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டு பேசும்போது, ''நாட்டில் 400 ரயில் நிலையங்களை மேம்படுத்த சமீபத்தில் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.

சீனாவை பொறுத்தவரை ரயில்வேயில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து உள்ளனர். இதனால், ரயில்வே இணைப்புகள் மூலம் அந்த நாடு அபரித வளர்ச்சியை கண்டு உள்ளது. நமது நாட்டில் ரயில்வேயில் அதிக முதலீடு செய்தால் மட்டுமே இருவழிப்பாதை மற்றும் மூன்று வழிப்பாதைகளை அமைக்க முடியும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ரயில்வே துறையின் பங்களிப்பு முக்கியமானது. ரயில்வே துறையில் அதிக முதலீடு செய்வது, ரயில்வே போக்குவரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதன்மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2 முதல் 3 சதவீதம் அதிகரிக்கும்.

எங்களது தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் ரயில்வேயில் டெண்டர் விடுவது, வர்த்தக முடிவுகள் போன்றவை ரயில்வே அமைச்சர் கையாள்வது இல்லை. இதில், அதிகாரம் பரவலாக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் மேற்கொண்டு வருகின்றன. ரயில்வே அமைச்சர் கொள்கை முடிவுகளை அமல்படுத்தும் பணியை மட்டுமே செய்கிறார்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு