Published:Updated:

பங்குச் சந்தையில் இன்று... டாப் 5 ஹைலைட்ஸ்! #MarketTrendToday

நாணயம் விகடன் டீம்

முன்பேர வர்த்தகத்தில் பங்குகளை வாங்கியவர்கள் விற்கவும் ஏற்கெனவே விற்றவர்கள் வாங்கவும் செய்ய வேண்டிய நாள் இன்று

share market
share market

1. உலகப் பங்குச் சந்தைகளின் ஏற்றம்!

உலக அளவிலான பங்குச் சந்தைகள் நேற்று ஏற்ற இறக்கத்தில் முடிந்துள்ளன. ஐரோப்பிய சந்தைகளில் இங்கிலாந்து, ஜெர்மனி பங்குச் சந்தைகள் நேற்று இறக்கத்தில் வர்த்தகமாகி முடிந்தன. ஆனால் அமெரிக்கப் பங்குச் சந்தையான நாஸ்டாக்29புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தன. அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்கிற அச்சம் ஒருபக்கம் இருந்தபோதிலும் அந்த நாட்டுப் பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது ஆச்சரியமே!

2. இறக்கத்தில் ஆசியச் சந்தைகள்!

இன்று காலை 7 மணி நிலவரப்படி இறக்கத்தில் வர்த்தகம் ஆகின. நிக்கி, ஸ்ட்ரைட் டைம்ஸ், ஹாங்செங், சிங்கப்பூர் நிஃப்டி என பெரும்பான்மை சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின. அமெரிக்க - சீன வர்த்தகப் போர் மீண்டும் உலகப் பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தலாம் என்கிற அச்சம் சந்தையில் நிலவியதே இதற்குக் காரணம்.

share market
share market

3. எஃப் அண்ட் ஒ எக்ஸ்பைரி....!

ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வியாழக்கிழமையான இன்று எஃப் அண்ட் ஒ எக்ஸ்பைரி வந்திருக்கிறது. முன்பேர வர்த்தகத்தில் பங்குகளை வாங்கியவர்கள் விற்கவும் ஏற்கெனவே விற்றவர்கள் வாங்கவும் செய்ய வேண்டிய நாள் இன்று. தொடர்ச்சியான இறக்கம், சிறிது ஏற்றம் என பங்குச் சந்தை இருந்ததன் காரணமாக இன்றும் பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் இருக்க வாய்ப்புள்ளது.

4. ரேட்டிங் நிறுவனங்களிம் எச்சரிக்கை...!

அமெரிக்க - சீன வர்த்தகப் போர் மீண்டும் உலகப் பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தலாம்

இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி குறித்து பல ரேட்டிங் நிறுவனங்கள் பாசிட்டிவ்வான கருத்துகளைத் தந்தன. ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை க் குறைத்து வருகின்றன. ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனமும் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி யைக் குறைத்து இருக்கிறது.

5. சிதம்பரம் வழக்கு!

ஐ.என்.எக்‌ஷ் வழக்கில் அமலாக்கத் துறை அவரைக் கைது செய்யலாமா என்கிற தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் தரவிருக்கிர்து. இந்தத் தீர்ப்பின் விளைவுகள் சந்தை யில் எதிரொலிக்கும்.