Published:Updated:

பங்குச் சந்தையில் இன்று... டாப் 5 ஹைலைட்ஸ்! 30-08-19 #MarketTrendToday

நாணயம் விகடன் டீம்

சர்வதேச சந்தையில் கடந்த சில நாள்களாக உயர்ந்துவந்த தங்கம் விலை நேற்று சற்று இறங்கியிருக்கிறது. வர்த்தகப் போர் பதற்றம் தணிந்ததே இதற்குக் காரணம்.

share maret
share maret

1. உலகப் பங்குச் சந்தைகள் குறித்த விவரம்....

நேற்று அமெரிக்கப் பங்குச் சந்தையான நாஸ்டாக் 116 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி முடிந்திருக்கிறது. ஐரோப்பியச் சந்தைகளும் கணிசமான முன்னேற்றம் கண்டு முடிந்துள்ளன. வர்த்தகப் போரில் அமெரிக்காவுக்கு எதிராக சீனா பதிலடி தராது என்கிற அறிவிப்பே இந்த உயர்வுக்குக் காரணம். தவிர, அமெரிக்க பாண்ட்களின் வருமானம் சீராக இருந்ததும் சந்தை உயர்வுக்கு இன்னொரு முக்கிய காரணம்.

2. ஆசியச் சந்தை நிலவரங்கள்

அமெரிக்கச் சந்தை நேற்று நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதால், ஆசியச் சந்தைகளும் இன்று ஏற்றப் போக்கில் வர்த்தகம் ஆகிறது. ஜப்பான், ஆஸ்திரேலியா, கொரிய நாடுகளின் சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. சிங்கப்பூர் நிஃப்டி 4 புள்ளிகள் இறங்கி வர்த்தகம் ஆகிறது.

share market
share market

3. தங்கமும் கச்சா எண்ணெய்யும்

சர்வதேச சந்தையில் கடந்த சில நாள்களாக உயர்ந்துவந்த தங்கம் விலை நேற்று சற்று இறங்கியிருக்கிறது. வர்த்தகப் போர் பதற்றம் தணிந்ததே இதற்குக் காரணம். ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1550 டாலரைத் தொட்டபின் நேற்று 25 டாலர் குறைந்து, தற்போது 1525 டாலர் என்கிற அளவில் வர்த்தகமாகிறது.

ஒரு பீப்பாய் பிரெண்ட் குரூட் கச்சா எண்ணெய் விலை 60 டாலராகவும் டபிள்யு.டி

ஐ கச்சா எண்ணெய் 56 டாலராகவும் வர்த்தகம் ஆகிறது.

4. இந்தியப் பங்குச் சந்தை

எஃப் அண்ட் ஒ எக்‌ஸ்பைரி காரணமாக நேற்று இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி, முடிவில் நிஃப்டி 97 புள்ளிகளும் சென்செக்ஸ் 383 புள்ளிகளும் இறங்கி வர்த்தகம் ஆனது. இன்றும் சந்தையானது ஏற்ற இறக்கமாகவே இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பங்குச் சந்தையில் இன்று... டாப் 5 ஹைலைட்ஸ்! #MarketTrendToday

5. முக்கியச் செய்திகள்

சிஜி பவர் நிறுவனத்தின் தலைவர் கெளதம் தாப்பர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

மேக் இன் இந்தியா திட்டத்துக்கு மத்திய அரசாங்கம் மெகா திட்டத்தைத் தயாரித்து வருகிறது.

யெஸ் வங்கியின் பங்கு விலை மேலும் குறைந்தது.

லட்சுமி விலாஸ் பேங்கின் தலைவர் பதவியிலிருந்து பார்த்தசாரதி முகர்ஜி பதவி விலகல்

வெளிநாடு போர்ட்ஃபோலியோவுக்கான சர் சார்ஜ் நீக்கியபின்னும் வெளிநாடு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையை விட்டு தொடர்ந்து வெளியேற்றம்