Published:Updated:

உங்க முதலீடு லாபகரமாக அமைய வேண்டுமா? அப்போ இந்த 5 தவறுகளைச் செய்யாதீங்க!

Investment Mistakes
News
Investment Mistakes

எந்த ஒரு முதலீட்டையும் மேற்கொள்ளும் முன் அந்த முதலீட்டில் சிக்கல் வந்தால் யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அப்படி எந்த அமைப்பும் இல்லை என்றால் அந்த முதலீட்டை தவிர்க்கவும்.

நாம் அனைவரும் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால், அந்த முதலீட்டை சரியாகச் செய்வது மிக முக்கியம். முதலீட்டில் ஒரு போதும் இந்த 5 விஷயங்களைச் செய்யக் கூடாது.

1. முதலீட்டில் மற்றவர்களைப் பின்பற்றாதீர்கள்...

நம்மில் பெரும்பாலானோர் சக ஊழியர்கள், அக்கம்பத்தில் உள்ளவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எதில் என்ன முதலீடு செய்கிறார்களோ... அதைப் பின்பற்றுகிறோம்.

அது நம்மை பல சிக்கலில் மாட்ட வைத்துவிடும். பணம் இழப்புக்கும் வழி வகுத்துவிடும். உதாரணத்துக்கு, அண்மையில் ஒருவர் அவரின் நண்பரைப் பார்த்து கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருக்கிறார். இந்தியாவில் கிரிப்போ கரன்சியை தடை செய்வது மற்றும் நெறிமுறைப்படுத்துவது குறித்த மத்திய அரசின் அறிவிப்பு வெளியானதும் நண்பர் கிரிப்டோ கரன்சியில் கிடைத்த லாபம் போதும் என வெளியேறிவிட்டார். அவரைப் பார்த்து முதலீடு செய்தவர் சில தினங்கள் கழித்து நஷ்டத்துடன் வெளியேறி இருக்கிறார்.

Investment (Representational Image)
Investment (Representational Image)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மத்திய, மாநில அரசுகளும் அதிக ரிஸ்க்கான முதலீட்டுத் திட்டங்கள் ஏதாவது வந்தால், அவை தேவையில்லை என்றால் விரைந்து அவற்றைத் தடை செய்ய வேண்டும் அல்லது நெறிமுறைகளைக் கொண்டு வந்து ஒழுங்குப்படுத்த வேண்டும். கிரிப்டோ கரன்சி விஷயத்தில் மத்திய அரசு இவ்வளவு நிதானமாகச் செயல்படுவது பலருக்கு பண இழப்பை, உயிர் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2. புரியாத திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம்

உங்களுக்கு பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற ரிஸ்க் ஆன முதலீடுகள் புரியவில்லை என்றால் அவற்றில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்.

அல்லது சிறிய தொகையை மாதம் ரூ.100, ரூ.500 என்பது போல் முதலீடு செய்து அனுபவம் பெற்று அதன் பிறகு, முதலீட்டை அதிகரிக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அல்லது நிதி ஆலோசகர்களின் உதவியுடன் இந்த முதலீட்டை மேற்கொண்டு வரலாம்.

நம்மில் பலர், பங்குச் சந்தை, கிரிப்டோ கரன்சி போன்றவை எப்படி செயல்படுகிறது எனத் தெரியாமல் பணத்தைப் போட்டு விட்டு பணத்தை இழந்திருக்கிறார்கள்.

3. அவசரத் தேவை பணத்தை அதிக ரிஸ்க்கான முதலீட்டில் போட வேண்டாம்

இன்னும் 6 மாதம், 8 மாதம், 10 மாதத்தில் பிள்ளைகளின் கல்வி, கல்யாணத்துக்கு தேவைப்படும் தொகை அதிக ரிஸ்க் ஆன பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம்.

Investment (Representational Image)
Investment (Representational Image)

மகள் திருமணத்துக்காக சேர்த்து வைத்த ரூ.10 லட்சத்தை கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் மும்பை வியாபாரி ஒருவர் இழந்துள்ளார். இந்த வியாபாரியின் மகளுக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக அவர் ரூ.10 லட்சம் சேர்த்து வைத்துள்ளார். இந்த நிலையில் அதிக லாபம் கிடைக்கும் என நினைத்து அவர் அந்தப் பணத்தை கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் போட்டிருக்கிறார். ஆனால், வர்த்தகத்தில் ரூ.10 லட்சத்தையும் இழந்துள்ளார்.

பொதுவாக, நம்மிடம் இருக்கும் பணம் குறுகிய காலத்தில் தேவைப்படும் என்கிறபோது அதை ரிஸ்க் உள்ள முதலீடு போடக் கூடாது. உதாரணமாக, பங்குச் சந்தை, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறுகிய காலத்தில் அதிக ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது என்பதால் அதில் முதலீடு செய்யக் கூடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறுகிய கால தேவை என்கிறபோது வங்கிச் சேமிப்பு கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் போட்டு வைக்கலாம்.

பொதுவாக, குறுகிய காலத் தேவைக்கு (ஒரு மாதம் முதல் ஓராண்டு வரைக்கும்) என வைத்திருக்கும் பணத்தை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது மியூச்சுவல் ஃபண்டில் லிக்விட் ஃபண்ட் போன்ற ரிஸ்க் இல்லாத மற்றும் உடனடியாகப் பணமாக்கக்கூடிய முதலீடுகளில் போட்டு வைப்பதுதான் சரி..!

சேமிப்பு கணக்கு என்கிறபோது வங்கிகளில் ஆண்டுக்கு 2.5% - 3% வட்டி கிடைக்கும். இதுவே ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் என்றால் சேமிப்பு கணக்குக்குக்கூட 6 - 7%, வருமானம் கிடைக்கும். ஃபிக்ஸட் டெபாசிட்களில் 5% முதல் 6% கிடைக்கும். கடன் சார்ந்த ஃபண்ட்கள் என்கிறபோது அதுவும் 5% முதல் 6% கிடைக்கக்கூடும்.

Savings (Representational Image)
Savings (Representational Image)
Photo by Micheile Henderson on Unsplash

4. நெறிமுறைப்படுத்தாத திட்டங்களில் பணம் போட வேண்டாம்..!

எந்த ஒரு முதலீட்டையும் மேற்கொள்ளும் முன் அந்த முதலீட்டில் சிக்கல் வந்தால் யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அப்படி எந்த அமைப்பும் இல்லை என்றால் அந்த முதலீட்டை தவிர்க்கவும்.

தேக்கு மரத்திட்டம், ஈமு கோழித் திட்டம், மண்ணுளி பாம்பு திட்டம் இப்போது கிரிப்டோ கரன்சி எனப் பல வகையான கவர்ச்சிகரமான திட்டங்கள் இந்த வகையில் கீழ் வருகின்றன.

அண்மைக் காலங்களில் வேறு வேறு பெயர்களில் நாடு முழுக்க ரூ.1 லட்சம் போட்டால் மாதம் ரூ.10,000 தருகிறோம்... இரண்டு வருஷம் கழித்து அசல் தொகையைத் திரும்பத் தருகிறோம் என மக்களிடம் பணத்தைத் திரட்டிக்கொண்டிருக்கிறாரகள். இது போன்ற நெறிமுறைப்படுத்தப்படாத திட்டங்கள் எவ்வளவு லாபம் கொடுப்பதாகச் சொன்னாலும் தவிர்ப்பது நல்லது.

5. பேராசை பெரு நஷ்டம்

பொதுவாக, முதலீடு மூலம் கிடைக்கும் வருமானம் என்பது நியாயமானதாக இருக்க வேண்டும். விலைவாசி உயர்வை (பணவீக்க விகிதம்) விட ஓரிரு சதவிகிதம் அதிக வருமானத்தை எதிர்பார்ப்பது நியாயமாக இருக்கும். உதாரணத்துக்கு பணவீக்க விகிதம் 5 சதவிகிதம் என்றால் குறுகிய காலத்தில் 6 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதம், நீண்ட காலத்தில் 9 முதல் 12% வருமானம் எதிர்பார்க்கலாம். 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மிக நீண்ட காலம் என்றால் 15% வரைக்கும் வருமானம் எதிர்பார்க்கலாம். அது இல்லாமல் ஆண்டுக்கு 30%, 50% என எதிர்பார்த்தால் அது பேராசை, பெரு நஷ்டத்தில் கொண்டு வந்துவிட்டுவிடும்.

Investment (Representational Image)
Investment (Representational Image)

நடிகை சினேகாகூட ரூ. 25 லட்சத்தை ஆண்டுக்கு 85% வட்டி கிடைக்கும் எனப் பேராசைப்பட்டு இப்போது ஏமாந்து நிற்கிறார். எந்த ஒரு முதலீட்டிலும் உத்தரவாதமாக ஆண்டுக்கு 12 சதவிகிதத்துக்கு மேல் வட்டி தருகிறோம் என்று சொன்னால் மிகவும் உஷாராக இருங்கள். இது போன்ற திட்டங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு முதலீட்டாளர்களிடமிருந்து வாங்கும் பணத்தை அவர்களுக்கே குறிப்பிட்ட காலத்துக்கு திருப்பி கொடுக்கும் திட்டங்களாக இருக்கும். சிலர் அவர்களிடம் ரூ.10 கோடி புழங்க ஆரம்பித்ததும் தலைமறைவாகிவிடுவார்கள். சிலர் 100 கோடி ரூபாய் வரைக்கும் சிலர் 1,000 கோடி ரூபாய் வரைக்கும் வளர விட்டு காத்திருந்து ஏமாற்றுவார்கள்.

மும்பை வியாபாரியின் ரூ. 10 லட்சம் இழப்பு, நடிகை சினேகா வட்டி ஏமாற்றம், ஆந்திர பேராசிரியர் ரூ. 70 லட்சம் இழப்பு நமக்கு எல்லாம் ஒரு பாடமாக இருக்கட்டும். இனி யாரும் இது போன்ற தவறுகளைச் செய்ய வேண்டாம்.

இந்தக் கட்டுரையை வீடியோவாகப் பார்க்க: