
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எந்த அளவுக்கு இது சாத்தியம்?
அடிக்கடி தங்க நகைகள் வாங்கும் ஒருவரிடம் இதுபற்றி கேட்டபோது, ''வழக்கமா நகை வாங்கும்போது கடைக்காரங்க அதுக்கு பில் கொடுக்கிறது கிடையாது. மக்களும் வேணும்னு கேக்கிறது கிடையாது. பில் போட்டா கண்டிப்பா வரி போட்டாகனும். எதுக்கு கூடுதல் செலவுன்னு பில்லை யாரும் விரும்பறதில்லை.

இப்போ அஞ்சு லட்ச ரூபாய்க்கு மேல ரொக்கமா பணம் கொடுத்து நகை வாங்கறதா இருந்தா பான் நம்பர் கொடுக்கணும்னு சொல்லியிருக்காங்க. இதனால பெருசா என்ன நடந்துடப் போறது? ஒரே தடவையா அஞ்சு லட்சத்துக்கு வாங்காம ரெண்டு தடவையா வாங்கினா போச்சு! இல்லை ரெண்டு மூணு பேர்ல வாங்கினாப் போச்சு! இதனால எல்லாம் கறுப்புப் பணத்தை ஒழிச்சிட முடியாது!'' என்றார் மிக அசால்ட்டாக!
சரி கடைக்காரர்கள் இதுகுறித்து என்ன நினைக்கிறார்கள் என சில நகைக்கடை உரிமையாளர்களிடம் கேட்டபோது, ''இந்த விதிமுறை இன்னும் அமலுக்கு வரவில்லை. இது கட்டாயம் ஆக்கப்பட்டால் கண்டிப்பாக நாங்கள் அதனை பின்பற்றுவோம்'' என்பதே அனைவரது பதிலாக இருந்தது.
ஆனால் நடைமுறையில் சில நகை கடைகள் மட்டுமே முறையாக பில் போட்டு நகை விற்பனை செய்யும் நிலையில் இந்த புதிய விதிமுறை எந்தளவுக்கு கறுப்புப் பணத்தை தடுக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.
-பானுமதி அருணாசலம்