Published:Updated:

சஸ்பெண்ட் ஆன பங்குகள்... பாதிப்பில் முதலீட்டாளர்கள்!

சஸ்பெண்ட் ஆன பங்குகள்... பாதிப்பில் முதலீட்டாளர்கள்!

சஸ்பெண்ட் ஆன பங்குகள்... பாதிப்பில் முதலீட்டாளர்கள்!

சஸ்பெண்ட் ஆன பங்குகள்... பாதிப்பில் முதலீட்டாளர்கள்!

Published:Updated:
##~##

பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ. ஆகிய இரண்டு பங்குச் சந்தைகளிலும் வர்த்தகமாகும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட பங்குகளில் கிட்டத்தட்ட 1,200 பங்குகள், பங்குச் சந்தை பட்டியலில் இருந்து சஸ்பெண்ட் ஆகியிருக்கின்றன. இவற்றில் முதலீட்டாளர்களின் பணம் சுமார் 2,500 கோடி ரூபாய் முடங்கிக் கிடக்கிறது.

ஒரு காலத்தில் முதலீட்டாளர்களின் மனம் கவர்ந்த பங்குகளாக இருந்த சில்வர்லைன் டெக்னாலஜீஸ், எஸ்.கே.எம். எக் புராடக்ட்ஸ் எக்ஸ்போர்ட் (இந்தியா) லிமிடெட் (பி.எஸ்.இ.-ல்) போன்ற பங்குகள்கூட இப்போது சஸ்பெண்ட் ஆகியிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலாண்டு முடிவுகளை சரிவர சமர்ப்பிக்கவில்லை, குறிப்பிட்ட சதவிகித பங்குகளை டீமேட் கணக்குக்கு மாற்றவில்லை என்கிற மாதிரி பல காரணங்களைக் காட்டி சஸ்பெண்ட் செய்துவிடுகிறது செபி. ஆனால், நல்ல லாபம் தரும் என்கிற ஆசையில் இதில் பணத்தைப் போட்ட முதலீட்டாளர்கள் அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

இதுதொடர்பாக தன்னை வெளிப்படையாக காட்டிக்கொள்ள விரும்பாத இத்துறை சார்ந்த ஒருவர் இப்படி சொன்னார்.

சஸ்பெண்ட் ஆன பங்குகள்... பாதிப்பில் முதலீட்டாளர்கள்!

''நிறுவனங்கள் தாங்கள் செய்துவரும் தொழிலில் ஏற்கெனவே வாங்கிய நல்ல பெயரை வைத்து, பங்குச் சந்தையில் நிதி திரட்டுகின்றன. முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தின் செயல்பாட்டையும் எதிர்கால வளர்ச்சியையும் பார்த்து பணத்தை முதலீடு செய்கிறார்கள். பணம் வாங்கும் நிறுவனங்கள் சில ஆண்டு காலம் பிசினஸைக் கவனித்துவிட்டு, அந்தப் பங்கின் விலையை நன்கு உயர்த்துகிறது. அந்தச் சமயத்தில் புரமோட்டர்களிடம் இருக்கும் பங்குகளை நல்ல விலை வைத்து விற்று விடுகிறார்கள். அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்துக்காக பிசினஸில் முன்பு காட்டிய கவனத்தைக் காட்டத் தயங்குகிறார்கள். இதனால் பங்கின் விலை குறைய, பங்குச் சந்தை பட்டியலில் இருந்து வெளியேற நினைக்கிறார்கள்.

ஒருமுறை ஐ.பி.ஓ. வந்துவிட்டால் பிற்பாடு லேஸில் வெளியேற முடியாது என்பதால், காலாண்டு அறிக்கைகளை சரிவர தாக்கல் செய்யாமல் விடுவதன் மூலம் செபியே தங்களை சஸ்பெண்ட் செய்யும் நிலையை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் செபியின் கண்காணிப்பிலிருந்து அந்த நிறுவனம் வெளியே வந்துவிட முடியும். ஆனால், இந்தப் பங்கில் பணம் போட்ட முதலீட்டாளர்களின் நிலை பரிதாபம்தானே!'' என்றார் அக்கறையோடு.

சஸ்பெண்ட் ஆன பங்குகள்... பாதிப்பில் முதலீட்டாளர்கள்!

சஸ்பெண்ட் ஆன பங்குகளில் கிட்டத்தட்ட 6 லட்சம் ரூபாயை இழந்தவர் ராசிபுரத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன். அவருடன் பேசினோம். ''பல நிறுவனங்கள், பங்கு முதலீடு என்று சொல்லி முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைத் திரட்டிவிட்டு, பிற்பாடு தனது சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்துகின்றன. சரியான நிர்வாகத் திறமை இல்லாதவர்களால் ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களின் பங்குகளே இவ்வாறு சஸ்பெண்ட் ஆகின்றன. சில நிறுவனம் தாங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்லி சஸ்பெண்ட் ஆகிவிடுகின்றன. ஆனால், அதே  குழுமத்தைச் சேர்ந்த வேறு நிறுவனங்கள் நன்கு வளர்ந்துகொண்டிருப்பதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. நான் வாங்கிய 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பங்குகள் இப்படி 15 வருடங்களாக முடங்கிக் கிடக்கிறது. இந்தப் பணம் எனக்கு திரும்பக் கிடைக்குமா என்று தெரியவில்லை'' என்றார்.

ஒரு பங்கானது பங்குச் சந்தை பட்டியலில் இருந்து சஸ்பெண்ட் ஆகி வெளியேறுவதற்கு 21 நாட்கள் கால அவகாசம் தரப்படுகிறது. இதற்குள் முதலீட்டாளர்கள் இந்தப் பங்கை விற்று,  வெளியேறிவிட வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்கிறது செபி. ஆனால், இந்தக் குறைந்த கால அவகாசத்தில் ஒரு பங்கை விற்று  வெளியேற முடிவதில்லை என்கிறார்கள் முதலீட்டாளர்கள்.

''21 நாட்களுக்குள் ஒரு பங்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என்கிற தகவல் எல்லா முதலீட்டாளர்களுக்கும் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் சஸ்பெண்ட் ஆகப் போகிற

சஸ்பெண்ட் ஆன பங்குகள்... பாதிப்பில் முதலீட்டாளர்கள்!

பங்கின் விலை தினமும் கடுமையாக இறங்கினால், எப்படி விற்க முடியும்? எனவே, முதலீட்டாளர்கள் விற்க நினைக்கிற விலையில் அந்தப் பங்கை விற்க முடிவதில்லை. இதனால்தான் பல முதலீட்டாளர்களின் பணம் முடங்கிப் போய்விடுகிறது!'' என நொந்துபோன குரலில் சொல்கிறார்கள் சில முதலீட்டாளர்கள்.

''பங்கு முதலீட்டாளர்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு என்பதை அதிகப்படுத்த வேண்டும். சஸ்பெண்ட் ஆவதற்கு முன்பு சிறு முதலீட்டாளர்கள் அவர்களின் பணத்தைத் திரும்ப எடுப்பதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் கட்டாயம் செய்ய வேண்டும்'' என்கிற கோரிக்கைகளை வைத்தார் சிறு முதலீட்டாளரான ஜெகதீஸ்வரன்.

சஸ்பெண்ட் ஆன சில நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, இதுபற்றி கருத்து கேட்டோம்.

''எங்கள் பங்கு பி.எஸ்.இ.-ல் மட்டுமே வர்த்தகம் ஆவதில்லை. என்.எஸ்.இ.-ல் வர்த்தகம் ஆவதால் முதலீட்டாளர்கள் அங்கு விற்கலாமே!'' என்றார்கள். ''பங்கு விலை மிகவும் குறைந்துவிட்டதே?'' என்று கேட்டால், ''நிறுவனம் வளர்ச்சியடையும்போதுதான் பங்கு விலை உயரும். அப்போது விற்றுக்கொள்ளலாம்'' என்றார்கள் அசால்ட்டாக.

முதலீட்டாளர்களுக்கு மிகுந்த நஷ்டம் தரும் இதுமாதிரியான நிறுவனங்களை செபி எப்படி கட்டுப்படுத்தப் போகிறது?

- சே.புகழரசி,
படங்கள்: ப.சரவணக்குமார்,
எம்.லலித் கிஷோர்.

சஸ்பெண்ட் ஆகும் காரணங்கள்!

 ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை சஸ்பெண்ட் செய்ய செபி சில அடிப்படை விதிமுறைகளை வைத்துள்ளது. அதன் விதிமுறைகள் இதோ...

25 அல்லது அதற்கு மேற்பட்ட முதலீட்டாளர்களின் புகார்களுக்கு தீர்வு காணாமல் இருத்தல். அதிகப்படியாக 45 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். அப்படி செய்யவில்லை என்றால் பங்குகள் சஸ்பெண்ட் செய்யப்படும்.

தொடர்ந்து இரு காலாண்டுகளாக பங்கு மூலதன விவரத்தை (ஷேர் ஹோல்டிங் பேட்டர்ன்) சமர்ப்பிக்காதபோது, பங்குகளை வர்த்தகத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யலாம்.

தொடர்ந்து இரு காலாண்டுகளாக நிதிநிலை முடிவுகளை சமர்ப்பிக்காமல் இருந்தால், சஸ்பெண்ட் செய்யலாம்.

இரண்டு தொடர்ச்சியான காலாண்டு களில் கார்ப்பரேட் கவர்ன்ஸ் அறிக்கை சமர்ப்பிக்காமல் இருக்கும்போது, சஸ்பெண்ட் ஆகும்.

அஜாக்கிரதை முதலீட்டாளர்கள்!

21 நாட்களுக்குள் சஸ்பெண்ட் ஆகும் என்பதைத் தெரிந்த பின்னரும் சில முதலீட்டாளர்கள் வேண்டுமென்றே பங்கை விற்காமல் விட்டுவிடுகிறார்களாம். பிற்பாடு அந்த நிறுவனத்தை வேறு ஏதாவது ஒரு நிறுவனம் வாங்கினால், பங்கு விலை உயர்ந்துவிடுமே என்கிற நப்பாசையில்தான் அப்படி செய்கிறார்களாம். இதுமாதிரி சில உதாரணங்கள் கடந்த காலத்தில் உண்டு என்றாலும், சஸ்பெண்ட் ஆன எல்லா நிறுவனங்களிலும் இது நடந்துவிடாது. எனவே, வாய்ப்பு கிடைக்கும்போது  பங்கை விற்காமல் அஜாக்கிரதையாக இருந்துவிட்டு, பிற்பாடு புலம்ப வேண்டாமே!