Published:Updated:

ஜஸ்ட் ரிலாக்ஸ் : ''பேரக்குழந்தைகளுடன் விளையாடுவேன்!''

ஜஸ்ட் ரிலாக்ஸ் : ''பேரக்குழந்தைகளுடன் விளையாடுவேன்!''

##~##

''என்னை உற்சாகப்படுத்திக்கொள்ள என் பேரக்குழந்தைகளுடன் நான் நேரம் செலவழிக்கிறேன்! ''

''எப்போதுமே பிசினஸ், பிசினஸ் என்று ஓடிக்கொண்டிருந்த நாட்களில் ஓய்வெடுப்பது குறித்தோ ரிலாக்ஸ் ஆவது குறித்தோ யோசித்ததில்லை. தினமும் பல டென்ஷன்களோடுதான் வேலைகள் ஓடிக்கொண்டிருக்கும். இப்படி போய்க்கொண்டிருந்த பரபரப்பான வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவந்தது என் பேரக்குழந்தைகள்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆரம்பத்தில் எனக்கு கார்களின் மீது அதிக பிரியம் இருந்தது. அதற்காகவே அடிக்கடி கார்களை மாற்றிக்கொண்டிருப்பேன். ட்ரைவிங் செய்வதில் பெரிய சந்தோஷம் கிடைத்தது. என்றாலும், அதனால் நான் ரிலாக்ஸ் ஆனதாக உணர்ந்ததில்லை.  

அடுத்து கிரிக்கெட் போட்டிகளை ரசிப்பது எனக்குப் பிடித்துப்போயிற்று.  ஒருநாள் போட்டியெனில், விரும்பிப் பார்ப்பேன். குடும்பத்தினருடன் பார்த்தால்,  என் குதூகலம் இன்னும் அதிகரிக்கும்.  

இப்போதெல்லாம் நான் என்னை உற்சாகப்படுத்திக்கொள்ள என் பேரக்குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கிறேன். தினசரி வீட்டுக்கு வந்து அவர்களுடன் விளையாடுவதன் மூலம் நான் நன்கு ரிலாக்ஸ் ஆவதாக உணர்கிறேன். அவர்களுடன் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது, கதைகள் சொல்வது என தினசரி நான் ஊரில் இருக்கிற சமயம் என் நேரத்தைச் செலவிடுகிறேன்.  

ஜஸ்ட் ரிலாக்ஸ் : ''பேரக்குழந்தைகளுடன் விளையாடுவேன்!''

இத்தனை வருட சம்பாத்தியம், உழைப்பு, நமக்கான அடையாளம் எல்லாம் பேரக்குழந்தைகளோடு இருக்கும்போது மறந்துவிடுகிறது. அந்த நேரத்தை பொன்னான நேரமாக நினைக்கிறேன்!

- நீரை.மகேந்திரன்,

படம்: ரமேஷ் கந்தசாமி.