Published:Updated:

ஜஸ்ட் ரிலாக்ஸ்: குடும்பமே எனக்கு சொர்க்கம்!

ஜஸ்ட் ரிலாக்ஸ்: குடும்பமே எனக்கு சொர்க்கம்!

ஜஸ்ட் ரிலாக்ஸ்: குடும்பமே எனக்கு சொர்க்கம்!
##~##

''எப்போதுமே பிசினஸ் பின்னால் ஓடிக்கொண்டிருக்க முடியாது. பிற்காலத்தில் நம் வாழ்க்கையை நாமே திரும்பிப் பார்க்கும்போது, ஏதோ ஒன்றை இழந்ததுபோல நாம் நினைக்கக் கூடாது. எனவே, பணம் சம்பாதிக்கிற அதேநேரத்தில், இந்த வாழ்க்கையை நன்றாக வாழ்ந்துவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொழிலை மேலும் சிறப்பாகச் செய்யவேண்டும், நிறுவனம் வளரவேண்டும் என்று யோசிக்கிற  மனநிலைதான் எனக்கு எப்போதுமே இருக்கும். குறும்புத்தனங்களும் கொண்டாட்டமும் நிறைந்த சூழலில் வளர்ந்த எனக்கு, பிசினஸ் என்பது மிகப் பெரிய பக்குவத்தைக் கொடுத்திருக்கிறது. பக்குவம் வந்துவிட்டது என்பதற்காக நமது சந்தோஷங்களை விட்டுவிட முடியாது அல்லவா?

அந்தந்த வயதில் வாழ்க்கையில் கிடைக்கும் சந்தோஷங்களை அனுபவிக்க வேண்டும். அதன்மூலமே முழுமையான வாழ்க்கையை நான் வாழ முடியும்.  

என் ரிலாக்சேஷன் என்றால் என் வீடுதான். எப்படிப்பட்ட டென்ஷனாக இருந்தாலும் என்னை ரிலாக்ஸ் செய்துவிடும் என் வீடு. மனைவி, குழந்தைகளுடன் இருக்கும் நேரங்களில் பிசினஸ் குறித்து நான் யோசிப்பதே கிடையாது. மனைவியுடன் ஷாப்பிங் செல்வது, கோயில்களுக்குச் செல்வது, சின்ன பிக்னிக் என எனது குடும்பத்துடன் நேரம் செலவழித்தால் எளிதாக ரிலாக்ஸ் ஆகி, அடுத்த பிசினஸ் சவாலுக்குத் தயாராகிவிடுவேன்.  

தினசரி காலையில் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் அன்றைய தினத்துக்கான புத்துணர்ச்சி எனக்குக் கிடைத்துவிடுகிறது.

எப்போதும் பிசினஸ், பிசினஸ் என்று கண்கொத்திப் பாம்பாக இருந்தால், டென்ஷன்தான் மிஞ்சும். பிசினஸ் செய்கிற அதேநேரத்தில், வாழவேண்டிய வாழ்க்கையும் இருக்கிறது என்று புரிந்து கொண்டால், பிசினஸ் டென்ஷன்கள் பனிபோல மறைந்துவிடும். நான் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தருவதால், எனக்கு நோ டென்ஷன்!''

- நீரை.மகேந்திரன்.