Published:Updated:

ஃபண்ட் பரிந்துரை : ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் முதலீடு செய்க!

சொக்கலிங்கம் பழனியப்பன்,டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

ஃபண்ட் பரிந்துரை : ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் முதலீடு செய்க!

சொக்கலிங்கம் பழனியப்பன்,டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

Published:Updated:

இந்த ஃபண்ட் பெயரில் குறிப்பிட்டுள்ளதுபோல, மிட் - ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் பங்கு சார்ந்த திட்டமாகும். இதன் ஃபண்ட் மேனேஜர் சிராக் சேத்தல்வத் ஆவார். இந்த ஃபண்ட் ஏறக்குறைய 62 சதவிகிதத்தை மிட் கேப் பங்குகளிலும், 23 சதவிகிதத்தை ஸ்மால் கேப் பங்குகளிலும், எஞ்சியதை லார்ஜ் கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது.

இந்த ஃபண்ட் மேனேஜர் இந்த ஃபண்டையும் இன்னும் ஓரிரு ஃபண்டுகளையும் தொடர்ந்து நல்ல முறையில் நிர்வகித்து வருகிறார். இந்த ஃபண்ட் ஆரம்பித்ததிலிருந்து இதன் ஃபண்ட் மேனேஜராக இவரே உள்ளார். இவர் நல்ல, தரமான நிறுவனங்களையே இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளார்.

பொதுவாக, மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் இந்தியச் சந்தையில் முதலீடு செய்ய நிறைய பொறுமை வேண்டும். அந்தப் பொறுமை இந்த ஃபண்ட் மேனேஜரிடம் உள்ளது. தரமான நிறுவனங்களை வைத்துள்ளதால், இந்த ஃபண்ட் சந்தை இறங்குமுகமாக இருக்கும்போது, திடமாக நிற்கும். மிட் - ஸ்மால் கேப் ஃபண்ட் என்றாலே ரிஸ்க் மற்றும் ரிவார்டு ஆகிய இரண்டுமே அதிகமாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபண்ட் பரிந்துரை : ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் முதலீடு செய்க!

கடந்த ஆண்டுகளில் (2008 மற்றும் 2011-ம் ஆண்டுகளைத் தவிர) இந்த ஃபண்ட் நிஃப்டி 50 குறியீட்டைவிட அதிகமான வருமானத்தைத் தந்துள்ளது. சந்தை வீழ்ச்சியில் இருக்கும்போது, சந்தையைவிட அதிகமாக விழும்; அதே சமயம், சந்தை காளையின் பிடியில் இருக்கும்போது, சந்தையைவிட மிகவும் அதிகமான வருமானத்தைத் தரும்.

உதாரணத்துக்கு, 2009-ம் ஆண்டு, சந்தை 18.64% வருமானத்தைத் தந்தது. ஆனால், இந்த ஃபண்ட் 94.40% வருமானத்தைத் தந்தது. அதேசமயம், 2011-ம் ஆண்டுச் சந்தை 6.31% வருமானத்தைத் தந்தது. ஆனால்,

ஃபண்ட் பரிந்துரை : ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் முதலீடு செய்க!

இந்த ஃபண்டின் வருமானம் 18.31% ஆகும்.

இந்த ஃபண்ட் நிஃப்டி குறியீட்டுடன் ஒப்பிடும்போது, நிதி மற்றும் எஃப்எம்சிஜி துறையில் அண்டர்வெயிட்டாகவும்  (under weight)  ஆகவும், ஹெல்த்கேர், இன்ஜினீயரிங் மற்றும் கெமிக்கல்ஸ் துறையில் ஓவர்வெயிட்டாகவும் (over weight) உள்ளது. இது மிட் கேப் ஃபண்டாக இருந்தபோதிலும் அதன் பீட்டா (0.89) சந்தையைவிட குறைவாகவே உள்ளது.

இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது  (25.06.2007) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.2,83,700-ஆக உள்ளது. இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்தோ ரூ.3,000 கோடிக்கு மேல்.

நேரடியாக மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்ய திணறுபவர்களுக்கு இந்த ஃபண்ட் ஒரு நல்ல முதலீட்டுக் கருவி. இளம்வயதினர், செல்வத்தைப் பன்மடங்காக்க விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள், நீண்ட நாள் காத்திருக்க முடிந்தவர்கள், குறுகிய காலத்தில் பணம் தேவைப்படாதவர்கள், மிட்-ஸ்மால் கேப் நிறுவனங்கள் இனிவரும் காலத்தில் வேகமாக வளரும் என நினைப்பவர்கள் போன்ற அனைவரும் இந்த ஃபண்டில் தாராளமாகவும், மொத்தமாகவும், எஸ்ஐபி மற்றும் எஸ்டிபி முறையிலும் முதலீடு செய்யலாம்.

ஃபண்ட் பரிந்துரை : ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் முதலீடு செய்க!

முதலீட்டுக் காலம்!

இந்த ஃபண்டில் அதிகமாக மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் இடம் பெற்றுள்ளதால், நீண்ட காலத்தில்தான் வருமானம் தரக்கூடியதாக இருக்கிறது.

ஃபண்ட் பரிந்துரை : ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் முதலீடு செய்க!

யார் முதலீடு செய்யக் கூடாது?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான, நிலையான வருமானத்தை  விரும்பு பவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள் ஆகியோர் இந்த ஃபண்டில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பதே நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism