நடப்பு
புத்தக விமர்சனம்
Published:Updated:

ஃபண்ட் பரிந்துரை

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

கடந்த இரு வாரங்களில் முதலீட்டுக்கு உகந்த இரண்டு மிட் கேப் ஃபண்டுகள் குறித்துப் பார்த்தோம். மிட் கேப் ஃபண்டுகள் நல்ல வருமானத்தைத் தரும் என்றாலும், சந்தையைவிட சற்று அதிகம் ரிஸ்க் கொண்டவை. மிகுதியாக லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்களின் ரிஸ்க், சந்தை ரிஸ்க்கை ஒட்டியே இருக்கும். ஆகவே, இந்தத் திட்டங்களின் வருமானம் சந்தை காளையின் பிடியில் இருக்கும்போது, மிட் கேப் ஃபண்டுகளைவிட குறைவாக இருந்தாலும், சந்தை கரடியின் பிடியில் இருக்கும்போது இவற்றின் வீழ்ச்சியும் குறைவாகவே இருக்கும். ஆகவே, போர்ட்ஃபோலியோவில் ஒரு ஸ்திரத்தன்மையை நாடுபவர்களுக்கு பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் போன்ற ஒரு லார்ஜ் கேப் ஃபண்ட் மிகவும் அவசியம்.

மேலும், ஒருவரின் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் லார்ஜ் கேப் ஃபண்டுகளுக்கு அதிகமான சதவிகித ஒதுக்கீடு தருவது அவசியம். பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் ஏறக்குறைய 81 சதவிகிதத்தை லார்ஜ் கேப் பங்குகளிலும், எஞ்சியதை மிட் கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் தற்போதைய சொத்தின் மதிப்பு ரூ.5,000 கோடிக்கும் மேல்.

இந்த ஃபண்டின் மேனேஜர் மகேஷ் பாட்டீல் ஆவார். இவர் இந்த ஃபண்டின் மேனேஜராக நவம்பர் 2005-லிருந்து உள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் நிஃப்டி 50 குறியீட்டைவிடவும், தனது பெஞ்ச்மார்க்கான பிஎஸ்இ 200-ஐவிடவும் இந்த ஃபண்ட் அதிக வருமானத்தைத் தந்துள்ளது. ஏறும் மற்றும் இறங்கும் சந்தை ஆகிய இரண்டிலும் தொடர்ச்சியாகக் குறியீட்டை மிஞ்சிய லாபம் தருவது அவ்வளவு சுலபமானதல்ல! இந்தத் தொடர்ச்சியான செயல்பாட்டுக்கு இந்த ஃபண்ட் தனக்குத்தானே வகுத்துக்கொண்டுள்ள வியூகமும் ஒரு காரணமாகும்.

ஃபண்ட் பரிந்துரை

இந்த ஃபண்ட் தனது பெஞ்ச்மார்க்காக பிஎஸ்இ 200 குறியீட்டை வைத்துள்ளது. அந்தக் குறியீட்டில் துறைகளுக்கு உள்ள வெயிட்டேஜ்ஜை ஒட்டியே தனது போர்ட்ஃபோலியோவிலும் வெயிட்டேஜ்ஜை வைத்துள்ளது. அதாவது, குறியீட்டில் உள்ள துறை சார்ந்த வெயிட்டேஜ்ஜைவிட, இந்த ஃபண்ட் 25 சதவிகிதத்துக்கும் கூடுதலாகவோ / குறைவாகவோ வைத்துக்கொள்ளலாம். இந்தக் கூடுதல் அல்லது குறைவு 3 சதவிகிதம்கூட இருக்கலாம்.

ஃபண்ட் பரிந்துரை

உதாரணத்துக்கு, குறியீட்டில் நிதித் துறை சார்ந்த பங்குகளின் வெயிட்டேஜ் 20% என வைத்துக்கொண்டால், இந்த ஃபண்டில் நிதித் துறை சார்ந்த பங்குகள் 15 - 25% வரை இருக்கலாம். மற்றுமொரு உதாரணமாக, எஃப்எம்சிஜி துறையை எடுத்துக்கொள்வோம். இந்தத் துறை குறியீட்டில் 10% உள்ளது எனில், இந்த ஃபண்ட்

7 - 13% வரை வைத்துக்கொள்ளலாம். ஆனால், அந்தத் துறைக்குள் உள்ள பங்குகளைத் தேர்ந்தெடுப்பதில்தான் ஃபண்ட் மேனேஜர் தனது திறமையைக் காண்பிக்கிறார்.

இந்த வியூகம் இதுவரை பிரமாதமான முறையில் இந்த ஃபண்டில் வேலை செய்துள்ளது. ஆகவே, ஓர் ஒழுக்கமான, நல்ல வியூகம் உள்ள, தொடர்ச்சியாகக் குறியீட்டைவிட நல்ல வருமானத்தைத் தரவல்ல ஃபண்டைத் தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல ஃபண்டாகும்.

இந்த ஃபண்டினுடைய தாரக மந்திரம் தனது பெஞ்ச்மார்க் குறியீட்டைவிட, ஏறும் சந்தையானாலும் சரி  இறங்கும் சந்தையானாலும் சரி, அதிக வருமானத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான். தனது போர்ட்ஃபோலியோவில் ஐசிஐசிஐ பேங்க்கைத் தவிர மற்ற ஒவ்வொரு பங்கும் 5% மிகாமல் உள்ளது. நிஃப்டி 50 குறியீட்டை ஒப்பிடும்போது, நிதித் துறையில் ஓவர்வெயிட்டாகவும், டெக்னாலஜி மற்றும் எனர்ஜி துறையில் அண்டர்வெயிட்டாகவும் உள்ளது.

இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (ஆகஸ்ட் 30, 2002) ஒருவர் செய்த ரூபாய் 1 லட்சம் முதலீடானது, இன்று ரூ.14.09 லட்சமாக உள்ளது. இது சிஏஜிஆர் அடிப்படையில் ஆண்டுக்கு

25.01 சதவிகித வருமானத்துக்கு சமமானது. கடந்த 11-க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் போட்ட முதலீடு 14 மடங்காகி உள்ளது.

பொதுவாக, நாம் ஃபண்டுகளைப் பரிந்துரைக்கும்போது, ஃபண்ட் மேனேஜரும் சரி, அவருடன் உள்ள குழுவினரும் சரி எவ்வளவு காலம் இருந்துள்ளார்கள், இனி எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்வோம். அந்த வகையில் இந்த மியூச்சுவல் ஃபண்டின் மேனேஜர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஃபண்டை நிர்வகித்து வருகிறார். மேலும், இதே ஃபண்ட் நிறுவனத்தில் தொடர்ந்து தனது சேவையைச் செய்துவருவார் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது. இதுவும் இந்த ஃபண்டுக்கு ஒரு பாசிட்டிவ் அம்சமாகும்.

ஃபண்ட் பரிந்துரை

இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷன், ஃபண்ட் துவங்கிய அடுத்த ஆண்டிலிருந்து ஒரு வருடத்தைத் தவிர (2005), ஒவ்வொரு ஆண்டும் டிவிடெண்ட் வழங்கியுள்ளது. பல ஆண்டுகளில் இருமுறைகூட டிவிடெண்ட் வழங்கியுள்ளது. டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ.27.12 ஆகும்.

யாருக்கு உகந்தது?

அனைத்து வயதினர், பணம் அதிகமாக உள்ளவர்கள், சந்தை ஏற்ற இறக்கத்தோடு இருக்கும்போது நிலையான வருமானத்தை நாடுபவர்கள், ஸ்திரமான பங்கு சார்ந்த போர்ட்ஃபோலியோவை நாடுபவர்கள், பங்கு சார்ந்த முதலீட்டில் கன்ஸர்வேட்டிவ்வாக இருப்பவர்கள்.

ஃபண்ட் பரிந்துரை

யாருக்கு உகந்ததல்ல?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், முதலீடு செய்வதற்கு சர்ப்பிளஸ் இல்லாதவர்கள், உறுதியான, நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், ரிஸ்க் எடுக்க தயங்குபவர்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் குறித்து போதிய ஞானம் இல்லாதவர்கள்.

மியூச்சுவல் ஃபண்டுக்கு முதன்முறை முதலீட்டாளர்கள், கன்ஸர்வேட்டிவ்வாக இருப்பவர்கள், தங்களது கோர் போர்ட்ஃபோலியோவுக்கு (சிஷீக்ஷீமீ றிஷீக்ஷீtயீஷீறீவீஷீ) முதல்தர ஃபண்டுகளை நாடுபவர்கள் என அனைவரும் இந்த ஃபண்டில் எஸ்ஐபி மற்றும் எஸ்டிபி மூலமாகவும், சந்தைச் சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் தாராளமாகவும் முதலீடு செய்யலாம். உங்கள் முதலீட்டு கால அளவு குறைந்தது 5 ஆண்டுகளாவது இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.