Published:Updated:

பட்ஜெட் 2014 பலன் தரும் பங்குகள்!

சோழா செக்யூரிட்டீஸ் ரிசர்ச் டீம்தொகுப்பு: சி.சரவணன்

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்திருக்கும் முதல் பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு பல சலுகைகளை அளித்திருக்கிறார். இந்த சலுகைகளினால் எந்தெந்த பங்குகளின் விலை ஏறும்? இதோ ஆறு அற்புதமான பங்குகள் அடங்கிய பட்டியலைத் தருகிறோம்.

பட்ஜெட் 2014  பலன் தரும் பங்குகள்!

 பட்ஜெட் சலுகை:

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட் டிருக்கும் பல சலுகைகள் பொருளாதார மந்தநிலையை சீராக்க உதவும். அப்படி நடக்கும்போது வங்கிகள் வேகமான வளர்ச்சிகாணும். அந்தவகையில் இந்தச் சலுகைகள் யெஸ் பேங்க்ன் வேகமான வளர்ச்சிக்கு உதவும்.

சாதக அம்சங்கள்:

முன்னணி புதிய தலைமுறை தனியார் வங்கியான இது, 560 கிளைகள், 1140 ஏடிஎம் மையங்களுடன் செயல்பட்டு வருகிறது.

பட்ஜெட் 2014  பலன் தரும் பங்குகள்!

சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு மூலம் 22% தொகை திரளுவதால், இதன் நிதி திரட்டும் செலவு கணிசமாக குறைகிறது. மொத்த வாராக் கடன் 0.3%, நிகர வாராக் கடன் 0.05%, மூலதன தன்னிறைவு விகிதம் 14.4 சதவிகிதமாக இருப்பது வங்கியின் வலிமையைக் காட்டுகிறது.

எஸ்எம்இ, ரீடெயில் பிரிவில் கூடுதல் கவனம் செலுத்துவதால், நடப்பு 201415ம் நிதியாண்டில் இதன் கடன் வளர்ச்சி சுமார் 20 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 1215 மாதங்களில் மேலும் 100150 கிளைகளைத் திறக்க இந்த வங்கி திட்டமிட்டுள்ளது.

பங்கு மதிப்பீடு:

இந்த வங்கிப் பங்கு, அதன் 201516ம் நிதியாண்டுக்கான புத்தக மதிப்பில் 1.8 மடங்கு அளவில் வர்த்தகமாகி வருகிறது.  

ரிஸ்க்:

இந்த வங்கி, கட்டணம் மற்றும் கருவூல வருவாயையே அதிகமாக நம்பி இருப்பது.

 பட்ஜெட் சலுகை:

மத்திய பட்ஜெட்டில் நகர்ப்புறங்களில் குறைந்த விலை வீடுகள் கட்ட ரூ.4,000 கோடி, கிராமப்புற வீட்டு வசதி மேம்பாட்டுக்கு ரூ.8,000 கோடி ஒதுக்கீடு, வீட்டுக் கடன் வட்டிச் சலுகை ரூ.50,000 அதிகரிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இவை ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு சாதகமான விஷயமாக இருக்கிறது.

பட்ஜெட் 2014  பலன் தரும் பங்குகள்!

சாதக அம்சங்கள்:

தென்னிந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் குறைந்த மற்றும் நடுத்தர அளவு வீட்டுக் கடன் வழங்கும் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான இதற்கு 90க்கும் மேற்பட்ட கிளைகள், 31 சாட்டிலைட் மையங்கள் இருக்கின்றன.

201415ம் ஆண்டில் இதன் மொத்த கடன் வளர்ச்சி 3035 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.  

நகரமயமாதல், வீடு வாங்கும் திறன் அதிகரிப்பு போன்றவை வீட்டுக் கடனுக்கான தேவையை அதிகரிக்கும். இது இந்த நிறுவனத்துக்கு லாபகரமாக இருக்கும்.  

பங்கு மதிப்பீடு:

இந்தப் பங்கு, அதன் 201516ம் நிதியாண்டுக்கான புத்தக மதிப்பில் 2.9 மடங்கு அளவில் வர்த்தகமாகி வருகிறது.  

ரிஸ்க்:

ரியல் எஸ்டேட் துறை சுணக்கம் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் மாற்றம் ஏற்படும்போது இந்த நிறுவனத்தின் லாபம் குறைய வாய்ப்புள்ளது.

 பட்ஜெட் சலுகை:

மின் உற்பத்தித் துறையில் சீர்திருத்தம் செய்யப்பட இருப்பது, மேலும் மின் திட்டங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட இருப்பது.  

பட்ஜெட் 2014  பலன் தரும் பங்குகள்!

சாதகமான அம்சங்கள்:

மின் பகிர்மானத்தில் உலக அளவில் முன்னணியில் இருக்கிறது, இந்த நிறுவனம். இது ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது.

பல்துறை நிறுவனமாகத் திகழும் இந்த நிறுவனம், இபிசி பிரிவில் பவர் சிஸ்டம்ஸ், கேபிள்கள், டெலிகாம், ரயில்வே உள்ளிட்ட துறைகளிலும் இயங்கி வருகிறது.

இதன் வசம் ரூ.10,200 கோடி மதிப்புக்கு ஆர்டர்கள் இருக்கின்றன. இந்த ஆர்டர்களில் 45% உள்நாட்டையும், 55% வெளிநாடுகளையும் சார்ந்ததாக இருக்கிறது. மேலும், புதிய ஆர்டர்களும் வந்துகொண்டிருக்கின்றன.

தானேயில் உள்ள இதன் நிலத்தை விற்று, ரூ.2,000 கோடி கடனை அடைக்க இருக்கிறது.  

பங்கு மதிப்பீடு:

இந்தப் பங்கு, அதன் 201516ம் நிதி ஆண்டுக்கான பி/இ மதிப்பில் 9 மடங்கில் வர்த்தகமாகி வருகிறது.

ரிஸ்க்:

ஆர்டர்கள் ஏதாவது ரத்தாவது, திட்டங்களைச் செயல்படுத்துவதில் தாமதம், வாடிக்கை நிறுவனங் களிடமிருந்து பணம் வருவது தாமதமாவது போன்றவற்றால் லாபம் குறையக்கூடும்.

 பட்ஜெட் சலுகை:

கச்சா பாமாயில் இறக்குமதிக்கான சுங்கவரி ரத்து செய்யப்பட்டிருப்பது

சாதக அம்சங்கள்:

 பல்துறை நிறுவனமான இது எஃப்எம்சிஜி, ஹோட்டல்கள், காகித அட்டைகள், சிறப்புவகை காகிதங்கள், பேக்கேஜிங், விவசாயப் பொருள்கள் ஏற்றுமதி போன்றவற்றில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

பட்ஜெட் 2014  பலன் தரும் பங்குகள்!

 இந்திய சிகரெட் சந்தையில் மதிப்பின் அடிப்படையில் இதன் சந்தைப் பங்களிப்பு 85 சதவிகிதமாகவும், எண்ணிக்கையின் அடிப்படையில் 70 சதவிகிதமாகவும் உள்ளது.

 கடந்த 12 பட்ஜெட்டைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், பட்ஜெட்டுக்கு பின் மூன்று மாத காலத்தில் இந்த நிறுவனப் பங்கின் விலை சராசரியாக 11.13%, அதிகபட்சமாக 24% அதிகரித்துள்ளது.    

பங்கு மதிப்பீடு:

கடந்த 18 ஆண்டுகளில் இந்த நிறுவனப் பங்கு கூட்டு சராசரியாக 26% வருமானம் தந்துள்ளது.

இந்தப் பங்கு, அதன் 201516 ம் நிதி ஆண்டுக்கான பி/இ மதிப்பில் 26 மடங்கில் வர்த்தகமாகி வருகிறது.  

ரிஸ்க்:

பட்ஜெட்டில் சிகரெட்டுக்கான வரி 11 சதவிகிதத்திலிருந்து 72 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சிகரெட் விலையை ஐடிசி 20% அதிகரிக்கக்கூடும். இதனால் விற்பனை குறைந்து லாப வரம்பு பாதிப்புக்கு உள்ளாகக்கூடும்.

 பட்ஜெட் சலுகை:

முந்தைய அரசு, வாகன உற்பத்தி வரியை 12 சதவிகிதத்திலிருந்து 8 சத விகிதமாகக் குறைத்திருந்தது. இந்தச் சலுகையை இப்போதைய அரசு மேலும் 6 மாதகங்களுக்கு நீட்டித்து உள்ளது.  

சாதக அம்சங்கள்:

வாகனங்களில் பயன்படுத்தப்படும் வொயர்கள் மற்றும் கண்ணாடிகள் தயாரிப்பில் இந்தியாவின் முக்கிய நிறுவனமாக இருக்கிறது.  

பட்ஜெட் 2014  பலன் தரும் பங்குகள்!

ஸ்டோன்ரிட்ஜ் நிறுவனத்தின் வாகன வொயர் பிரிவை 6.57 கோடி டாலருக்கு வாங்க இருக்கிறது. இது நிறைவேறும்பட்சத்தில் அமெரிக்கா விலிருந்து இந்த நிறுவனத்துக்கு வருமான அளவு சுமார் 15 சதவிகிதமாக அதிகரிக்கும்.

நடப்பு நிதியாண்டில் இந்தியா, மெக்சிகோ, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிதாக 1214 தொழிற்சாலைகளை உருவாக்க இருக்கிறது.  இந்த நிறுவனம், 50 கோடி யூரோ (ரூ.4,000 கோடி) திரட்ட இருக்கிறது.  

இதன் மொத்த ஆர்டர் சுமார் 1,000 கோடி யூரோவாக உள்ளது.

பங்கு மதிப்பீடு:

இந்தப் பங்கு, அதன் 201516ம் நிதி ஆண்டுக்கான இபிஎஸ் மதிப்பில் 25.1 மடங்காக வர்த்தகமாகி வருகிறது.  

ரிஸ்க்:

ஐரோப்பாவில் தொடர்ந்து மந்தநிலை ஏற்பட்டால், காப்பர் விலை அதிகரிப்பு, வாகன விற்பனை குறைவு போன்றவை இந்த நிறுவனத்துக்குள்ள ரிஸ்காக உள்ளன.

 பட்ஜெட் சலுகை:

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டிருக்கும் டிஜிட்டல் இந்தியா, 100 ஸ்மார்ட் நகரங்கள், இகவர்னன்ஸ் மேம்பாடு போன்ற திட்டங்கள் இந்த நிறுவனத்துக்கு சாதகமாக இருக்கிறது.

சாதக அம்சங்கள்:

ஐ.டி துறையைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் பழைய பெயர் இன்ஃபோடெக் என்டர்பிரைசஸ்.  இந்த நிறுவனம் இன்ஜினீயரிங் தீர்வுகள், புராடக்ட் உருவாக்கம் உள்ளிட்ட ஐ.டி பணிகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதால், இனி வரும் மாதங்களில் நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பட்ஜெட் 2014  பலன் தரும் பங்குகள்!

கையில் அதிக பணம் இருப்பதால் இந்த நிறுவனம், இதர நிறுவனங்களைக் கையகப்படுத்துவதன் மூலம் வளர்ச்சி காண இருக்கிறது.

 டாலர் மதிப்பில் இந்த நிறுவனத்தின் வருமானம் 201415ம் ஆண்டில் 16 சத விகிதமாக  இருக்கும்.

பங்கு மதிப்பீடு:

இதன் தற்போதைய விலை என்பது 201415ம் ஆண்டுக்கான இபிஎஸ்ல் 11.2 மடங்காக உள்ளது.

ரிஸ்க்:

டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு மாற்றத்தை முதலீட்டாளர்கள் கட்டாயமாக கவனிக்க வேண்டும்.

குறிப்பு: பங்கு விலை நிலவரம், ஜூலை 17  ம் தேதி நிலவரப்படி. இலக்கு விலை ஓராண்டுக்கானது.