Published:Updated:

ஃபண்ட் பரிந்துரை

யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்: முதலீடு செய்க!சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

கடந்த வாரம் ஒரு லார்ஜ் கேப் ஃபண்டைப் பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரமும் மற்றுமொரு லார்ஜ் கேப் ஃபண்டான யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டைப் பற்றி காண்போம்.

கடந்த 1, 3, 5, 7 ஆண்டுகளில் இந்த ஃபண்டானது நிஃப்டி 50 குறியீட்டைவிட அதிக வருமானம் தந்துள்ளது. இதன் ஃபண்ட் மேனேஜர் அனூப் பாஸ்கர் ஆவார். இவரே யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பங்கு சார்ந்த ஃபண்டுகளின் தலைவராகவும் உள்ளார். இதற்குமுன் சுந்தரம் மற்றும் ஃப்ராங்க்ளின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களில் வேலை செய்துள்ளார். சுந்தரம் செலக்ட் மிட் கேப் ஃபண்டை வெற்றிகரமாக நிர்வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யூடிஐ ஒரு பொதுத்துறை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஆகும். இதன் பங்குதாரர்கள் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் (எஸ்பிஐ, எல்ஐசி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க்) மற்றும் டி.ரோவ் பிரைஸ் குரூப் என்ற அமெரிக்க நிறுவனம் ஆகும்.

ஃபண்ட் பரிந்துரை

பல நேரங்களில் அரசாங்கத்தின் தலையீடு இருந்தபோதிலும், அனூப் பாஸ்கர் இந்த நிறுவனத்தில் சேர்ந்ததில் இருந்து ஃபண்டுகளின் செயல்பாடு மிகவும் நன்றாக உள்ளது. இவரின் வருகை யூடிஐ நிறுவனத்துக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இவர் 2007-ம் ஆண்டு இந்த ஃபண்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். இந்தத் திட்டத்தை ஜூலை 2011-ம் ஆண்டிலிருந்து நிர்வகித்து வருகிறார்.

ஃபண்ட் பரிந்துரை

இந்த ஃபண்ட் மிகுதியாக லார்ஜ் கேப் பங்குகளிலேயே (86%) முதலீடு செய்துள்ளது. எஞ்சியதை (14%) கிரிஸில், எம்ஆர்எஃப், ஸ்ரீ சிமென்ட், அதானி போர்ட்ஸ் போன்ற மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்துள்ளது.

இதன் போர்ட்ஃபோலியோ மிகவும் கச்சிதமாக 47 பங்குகளுடன் உள்ளது. போர்ட்ஃபோலியோ கச்சிதமாக இருப்பதால், ஐந்து பங்குகள், 5% அல்லது அதற்கும் அதிகமான அளவில் போர்ட்ஃபோலியோவில் உள்ளன. இதன் போர்ட்ஃபோலியோ ஃபைனான்ஸ் மற்றும் எனர்ஜி துறை களில் அண்டர்வெயிட்டாகவும், ஆட்டோமொபைல் துறையில் ஓவர்வெயிட்டாகவும் உள்ளது.

இந்த ஃபண்டின் பீட்டா 0.81 ஆகும். இது கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர் களுக்கு மிகவும் பொருந்தும். ஏனென்றால், சந்தை இறங்கும்போது இந்த ஃபண்ட் சந்தையைவிட குறைவாகவே இறங்கும். உதாரணத்துக்்கு சந்தை 10% இறங்கினால், இந்த ஃபண்ட் 8-10 சதவிகிதம்தான் இறங்கும்.

இந்த ஃபண்டின் பாஸிட்டிவ் அம்சங்கள்: மிகவும் தரமான பங்குகளையே எப்போதும் தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளது. இதனுடைய ரிசர்ச் டீம் மிகவும் உறுதியாக உள்ளது.

டி.ரோவ் பிரைஸ் நிறுவனத்தின் உதவியுடன், யூடிஐ பெரிய அளவில் செயல்முறைகளை மேம்படுத்தியுள்ளது. அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல், தொடர்ச்சியாக ஒருநிலையான செயல்பாட்டைக் கொடுத்துவருகிறது.

ஒரு தனி ஃபண்ட் மேனேஜரின் மேல், நிறுவனம் கொண்டுள்ள ரிஸ்க்கை குறைப்பதற்கு, 30 சதவிகிதத்துக்கு மேலான சொத்துக்களை ஒரு ஃபண்ட் மேனேஜர் நிர்வகிப்பதை இந்த நிறுவனம் அனுமதிப்பதில்லை.

ஃபண்ட் பரிந்துரை

இந்த ஃபண்டில் குறைந்தபட்ச எஸ்ஐபி முதலீடு ரூ.500-தான். இந்தத் தொகை பல ஃபண்ட் நிறுவனங்களில் ரூ.1,000-ஆக உள்ளது. பல முதலீட்டாளர் களுக்கு இது ஒரு பெரிய பாஸிட்டிவ் ஆகும்.

இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ.16.88 ஆகும். திட்டம் ஆரம்பித்த மறுவருடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து டிவிடெண்டை வழங்கி வருகிறது. இது சீனியர் சிட்டிசன் மற்றும் கேஷ் ஃப்ளோ தேவைப்படுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

சந்தை திடீரென்று ஏறும்போது, இந்த ஃபண்டின் ஏற்றம் சற்று மெதுவாக இருக்கும்.  ஆனால், சந்தை கரடியின் பிடியில் இருக்கும்போது அல்லது சமமான நிலையில் இருக்கும்போது, இதன் செயல்பாடு மிகவும் நன்றாக இருக்கும்.

ஃபண்ட் பரிந்துரை

ஆகவே, நீண்ட நாள் முதலீட்டை நாடுபவர்கள், நிலையான செயல்பாட்டை விரும்புபவர்கள், கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்கள், கோர் போர்ட்ஃபோலியோவுக்கு ஃபண்டைத் தேடுபவர்கள், எப்போதும் தரமான போர்ட்ஃபோலியோவை விரும்புபவர்கள் போன்ற அனைவரும் இந்த ஃபண்டில் எஸ்ஐபி/ எஸ்டிபி முறையிலும், சந்தை சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் தாராளமாக முதலீடு செய்யலாம். குறைந்தது ஐந்து வருட முதலீட்டுக் காலம் உள்ளவர்கள் இந்த ஃபண்டில் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

ஃபண்ட் பரிந்துரை

யாருக்கு உகந்தது?

அனைத்து வயதினர், முதல்முறை முதலீட்டாளர்கள், பணம் உபரியாக உள்ளவர்கள், சந்தை ஏற்ற இறக்கமாக உள்ளபோது நிலையான வருமானத்தை நாடுபவர்கள், ஸ்திரமான பங்கு சார்ந்த போர்ட்ஃபோலியோவை நாடுபவர்கள், பங்கு சார்ந்த முதலீட்டில் கன்ஸர்வேட்டிவ்வாக இருப்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த ஃபண்ட்
உகந்தது.

ஃபண்ட் பரிந்துரை

யாருக்கு உகந்ததல்ல!

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், முதலீடு செய்வதற்கு சர்ப்பிளஸ் இல்லாதவர்கள், உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள், பங்குச் சந்தை குறித்த போதிய ஞானம் இல்லாதவர்கள் போன்றவர்களுக்கு இந்த ஃபண்ட்
உகந்ததல்ல.