Published:Updated:

ஃபண்ட் பரிந்துரை!

ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ்ஷீல்டு ஃபண்ட்: முதலீடு செய்கசொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

பிரீமியம் ஸ்டோரி

சமீபத்தில் வந்த பட்ஜெட்டில் நமது மத்திய நிதி அமைச்சர் 80சி பிரிவின் கீழ் கிடைக்கும் வருமான வரிச் சலுகையை அனைவருக்கும்  ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்தியுள்ளார். அந்த ரூ.1.50 லட்சத்தில் இஎல்எஸ்எஸ் (ELSS – Equity Linked Savings Scheme)என்று சொல்லக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்ட முதலீடும் அடக்கம். அவ்வாறு வரிச் சலுகை தரக்கூடிய திட்டங்களுள் ஒன்றான ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ்ஷீல்டு திட்டத்தைப் பற்றி விரிவாக இந்த வாரம் பார்ப்போம்.

80சி பிரிவின் கீழ் வரும் முதலீடுகளில் மிகக் குறுகிய லாக்இன் உள்ள முதலீடு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடாகும். இதன் லாக்இன் காலம் 3 வருடங்கள் தான். இ்ந்த முதலீட்டில் டிவிடெண்ட் ஆப்ஷனில் செல்பவர்களுக்கு, வருடா வருடம் டிவிடெண்ட் கையில் கிடைத்துவிடும். வரிச் சலுகையும் கிடைக்கும்; கையில் கேஷ் ஃப்ளோவும் கிடைக்கும். 80சி பிரிவின் கீழ் இதுபோன்ற வசதி இருக்கும் முதலீடுகள் வெகு சிலவே.

ஃபண்ட் பரிந்துரை!

பல சிறு முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதல்முறை நுழைவது வரியைச் சேமிக்கத்தான். வரியைச் சேமிப்பதோடு மட்டுமல்லாமல், இந்தத் திட்டங்கள் நீண்ட காலத்தில் நல்ல வளர்ச்சியைத் தந்துள்ளன/ தரக்கூடியவை.

ஃபண்ட் பரிந்துரை!

இந்தத் திட்டம் ஏப்ரல் மாதம் 1999ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2007ம் ஆண்டிலிருந்து ஆனந்த்  ராதாகிருஷ்ணன் இதன் ஃபண்ட் மேனேஜராக உள்ளார். 2011ம் ஆண்டிலிருந்து இவருடன் அனில் பிரபுதாஸ் என்பவரும் நிர்வகித்து வருகிறார். ஆனந்த் ராதாகிருஷ்ணன் ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் மற்றும் ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் போன்ற ஃபண்டுகளையும் நிர்வகித்து வருகிறார். ஃப்ராங்க்ளின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஒரு நல்ல செயல்பாடு மற்றும் செயல்முறைகளைக் கொண்ட நிறுவனமாகும். சென்னையில் இயங்கி வரும் வெகுசில ஃபண்ட் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

இந்தத் திட்டம் 63 சதவிகிதத்தை லார்ஜ் கேப் பங்குகளிலும், 33 சத விகிதத்தை மிட் கேப் பங்குகளிலும், எஞ்சியதை ஸ்மால் கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், இன்போஃசிஸ்,

ஹெச்டிஎஃப்சி பேங்க் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்குகளாக உள்ளன. அமரராஜா பேட்டரீஸ், கும்மின்ஸ் இந்தியா, பிடிலைட், கரூர் வைஸ்யா பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க், கிரீவ்ஸ் காட்டன், பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் போன்ற மிட் கேப் பங்குகள் இதன் போர்ட்ஃபோலியோவில் இடம் பெற்றுள்ளன்ன. ஃபைனான்ஸ் மற்றும் ஹெல்த்கேர் துறைகளில் ஓவர்வெயிட்டாகவும், எனர்ஜி, டெக்னாலஜி போன்ற துறைகளில் அண்டர்வெயிட்டாகவும் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் (2003–2013) இரண்டு ஆண்டுகளைத் தவிர (2006 மற்றும் 2016, ஒவ்வொரு ஆண்டும் நிஃப்டி 50 குறியீட்டவிட சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த ஃபண்ட் ஸ்டெடியாகச் செயல்படும் திட்டமாகும். ஆகவே, அக்ரெஸிவ்வான (அதேசமயம் ஏற்ற இறக்கம் அதிகமுடைய) வருமானத்தை விரும்புபவர்கள் இந்த ஃபண்டை நாட வேண்டாம்.

ஃபண்ட் பரிந்துரை!

இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (ஏப்ரல் 10, 1999) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், இன்றைய தினத்தில் (ஜூலை 18, 2014) ரூ.33 லட்சத்துக்கும் மேலாக உள்ளது. இது கூட்டு வட்டியில் ஏறக்குறைய ஆண்டுக்கு 25.72% (சிஏஜிஆர்) வருமானத்துக்குச் சமம். இது ஓர் உன்னதமான வருமானமாகும்.

இந்த ஃபண்டில் குறைந்தபட்ச மொத்த முதலீடு, மறுமுதலீடு மற்றும் எஸ்ஐபி முதலீடு என அனைத்தும் ரூ.500தான். இது குறைந்தபட்ச முதலீடு செய்ய விருப்பப்படும் பல முதலீட்டாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷன், ஆரம்பித்த மறு ஆண்டிலிருந்து ஒரு சில ஆண்டுகளைத் தவிர (2002, 2003, 2009), தொடர்ந்து இந்த ஆண்டுவரை டிவிடெண்டை வழங்கியுள்ளது. 2000 மற்றும் 2007ம் ஆண்டுகளில் இருமுறை டிவிடெண்டையும் வழங்கியுள்ளது. இதன் டிவிடெண்ட் ஆப்ஷன் என்ஏவி ரூ.36.59 ஆகும். கேஷ் ஃப்ளோவை விரும்புபவர்கள் டிவிடெண்ட் ஆப்ஷனை நாடிச் செல்லலாம்.

ஃபண்ட் பரிந்துரை!

நீண்ட கால செயல்பாட்டைக் கொண்ட இந்தத் திட்டதில் எஸ்ஐபி முறையிலும், சந்தை சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும், வரிச் சலுகை பெற விரும்புபவர்கள், முதலீடு செய்யலாம். எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும்போது ஒவ்வொரு மாத முதலீட்டுக்்கும், 3 வருட லாக்இன் என்பதை நினைவில் கொள்க.

யாருக்கு உகந்தது?

மாத சம்பாத்தியம் ரூ.2 லட்சத்துக்கு மேல் இருந்து, 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கை எதிர்பார்ப்பவர்கள், அவ்வாறு செய்யும் முதலீட்டில் ரிஸ்க் எடுத்து, அந்த ரிஸ்குக்கு ஏற்றாற்போல வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள்.

ஃபண்ட் பரிந்துரை!

யாருக்கு உகந்ததல்ல!

80சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை தேவைப்படாதவர்கள், ரிஸ்க் எடுக்க விருப்பமில்லா தவர்கள், உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புகிறவர்கள், பங்குச் சந்தை குறித்து போதிய ஞானம் இல்லாதவர்கள்.

ஃபண்ட் பரிந்துரை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு