கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நம் நாட்டில் இருந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகம் பேசப்பட்டு வருகிறது. என்றாலும், மிகக் குறைந்த முதலீட்டாளர்களே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறார்கள்.

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடாகி இருக்கும் மொத்தத் தொகையில் 87% இந்தியாவில் உள்ள 15 முக்கிய நகரங்களி லிருந்துதான் வருகிறது. அதிலும் குறிப்பாக, மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து 85% வருகிறது. ஆனால், சிறிய நகரங்களில் வசிக்கும் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது குறைவாகவே இருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முதலீட்டைத் தொடங்க என்ன செய்ய வேண்டும், என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

பான் கார்டு!

வருடத்துக்கு 50,000 ரூபாய்வரை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர் களுக்கு பான் கார்டு தேவையில்லை. ஆனால், 50,000-த்துக்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்போகிறீர்கள் எனில், வருமான வரித் துறை வழங்கும் பான் கார்டு எண் அவசியம் வேண்டும்.

வங்கிக் கணக்கு!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பணப் பரிவர்த்தனை அனைத்தும் காசோலை மூலமே பெறப் படும். எனவே, காசோலை யுடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம்.

முதலீட்டாளர்கள் முதலீட்டைத் திரும்பப் பெறும்போது வங்கிக் கணக்கு மூலமே பணத்தைத் திரும்பப் பெற முடி யும். முதலீட்டாளர்கள் அவர்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து மட்டுமே காசோலை அளிக்க வேண்டும். மூன்றாவது நபர் வங்கிக் கணக்கிலிருந்தோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கிலிருந்தோ காசோலை அளிக்க இயலாது.

கேஒய்சி விதிமுறைகள்!

பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி விதிமுறைப்படி, முதலீட்டாளர்கள் தங்களின் விவரத்தை கேஒய்சி (Know your customer) படிவம் மூலம் கீழே குறிப்பிட்டுள்ள சான்று களுடன் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

1 கேஒய்சி படிவம்
2. புகைப்படம்
3. வீட்டு முகவரிச் சான்று
(முகவரி ஆதாரம்)
4. அடையாளச் சான்று (அடையாள ஆதாரம்)

முதலீட்டாளர்கள் கேஒய்சி ஆவணங் களுடன் முதலீட்டுக்கான படிவமும், காசோலையும் சேர்த்து அருகிலுள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கிளைகளிலோ அல்லது ஆர்டிஏ
(Registrar and Transfer Agent) - யிடமோ சமர்ப்பிக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட விவரங்களையோ அதற்குரிய படிவங்களையோ மியூச்சுவல் ஃபண்ட் கிளை நிறுவனங்கள் மற்றும் ஆர்டிஏவை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

டீமேட் கணக்கு!

கோல்டு இடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவை. இந்த டீமேட் கணக்கு பங்கு முதலீட்டுக்கான டீமேட் கணக்குதான். அது இருக்கும்பட்சத்தில், அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லை எனில், புதிதாக டீமேட் கணக்கு ஆரம்பிக்க வேண்டியிருக்கும். இதற்கு பான் கார்டு, வங்கிக் கணக்கு இருந்தால் போதும்.

இ-மெயில், செல்போன்!

கேஒய்சி படிவத்திலும், முதலீட்டுக்கான படிவங்களிலும் பயன்பாட்டில் இருக்கும் இ-மெயில் முகவரி மற்றும் செல்போன் எண்ணை நிரப்புவது சிறந்தது. இதன்மூலம் உங்களது முதலீடு தொடர்பான பரிமாற்றங்கள் / மாறுதல்கள் அனைத்தும் இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கு வரும்.