நடப்பு
காலாண்டு முடிவுகள்
Published:Updated:

ஃபண்ட் பரிந்துரை!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

இதுவரை முதலீட்டுக்கு உகந்த பல பங்கு சார்ந்த திட்டங்கள் குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் வகைகளில் ஒன்றான டிஎஸ்பி – பிஆர் மணி மேனேஜர் ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.

பொதுவாக, மியூச்சுவல் ஃபண்ட் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ரிஸ்க்தான்; ஏனென்றால் நாம் நினைப்பது பங்கு சார்ந்த திட்டங் களைத்தான். ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகள் நிர்வகிக்கும் சொத்துக்களில் மிகுதியானவை கடன் சார்ந்த திட்டங்கள்தான். கடன் சார்ந்த திட்டங்களில் ரிஸ்க்குக்கு ஏற்றாற்போல் பல வகைகள் உள்ளன.

கடன் சார்ந்த திட்டங்களிலேயே மிக மிகக் குறைந்த ரிஸ்க் உடையவை லிக்விட் ஃபண்டுகளாகும். அதற்கடுத்தாற் போல் உள்ள வகைதான் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள். எஸ்ஐபி போன்ற முதலீட்டு வசதிகள் பல ஃபண்ட் நிறுவனங்களில் லிக்விட் ஃபண்டுகளுக்குப் பரவலாகத் தரப்படு வதில்லை. ஆகவே, சில்லறை முதலீட்டா ளர்களுக்கு முதலீட்டுக்கு உகந்த அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் வகையை இங்கு எடுத்துக் கொண்டுள்ளோம்.

ஃபண்ட் பரிந்துரை!

நம்மில் பலர் ஒரு பாதுகாப்பான உணர்வு கிடைப்பதற்காக, பெரிய தொகைகளை வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்த வட்டியில் (வருடத்துக்கு 4%) பல மாதங்களுக்குப் போட்டு வைக்கிறோம்.
அதுபோல் குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் கட்டுவதற்கு அல்லது இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்துவதற்கு என வங்கி சேமிப்புக் கணக்கிலேயே விட்டுவைக்கிறோம். அல்லது மகன்/ மகள் திருமணம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணத்தில் அந்தச் சேமிப்புக் கணக்கிலேயே பணத்தை விட்டு வைக்கிறோம்.

இன்னும் சிலர் ஷார்ட் டேர்ம் வங்கி டெபாசிட்களில் போட்டு வைக்கிறார் கள். இவை எல்லாவற்றையும்விட சற்று அதிக வருமானம் கிடைக்கக்கூடிய திட்டம்தான் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் வகையைச் சார்ந்த டிஎஸ்பி - பிஆர் மணி மேனேஜர் ஃபண்ட்.

இந்தத் திட்டம் மற்றும் இதுபோன்ற திட்டங்களில் உள்ள பெரிய சௌகரியம்: சேமிப்புக் கணக்கைப்போல எப்போது வேண்டுமானாலும் அபராதக் கட்டணம் ஏதும் இல்லாமல் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி; அதேசமயத் தில் சேமிப்புக் கணக்கைப்போல ஏறக்குறைய இரண்டு மடங்கு வருமானம் கிடைக்கும்.

ஃபண்ட் பரிந்துரை!

இந்த ஃபண்ட் ரூ.2,400-க்கும் மேற்பட்ட தொகையை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் லௌகிக் பாக்வே ஆவார். இந்த ஃபண்டில் உள்ள உபகரணங்களின் சராசரி முதிர்ச்சி காலம் 0.27 ஆண்டுகள் (99 நாட்கள்) ஆகும்.

பொதுவாக, கடன் பத்திரங்களில் சராசரி முதிர்ச்சி காலம் குறைவாக இருந்தால், ரிஸ்க் குறைவு என்று அர்த்தம். இதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள உபகரணங்களில் 48 சதவிகிதம் 60 நாட் களுக்குள் உள்ள மெச்சூரிட்டியுடனும், 35 சதவிகிதம் 150  நாட்களுக்குள் உள்ள மெச்சூரிட்டியுடனும், மற்றவை அதற்குமேல் உள்ள மெச்சூரிட்டியுடனும் உள்ளது.

அதேபோல் இந்த ஃபண்டில் உள்ள உபகரணங்களின் ஆவரேஜ் கிரெடிட் ரேட்டிங் AAA ஆகும். இந்த ரேட்டிங் மிக மிகப் பாதுகாப்பான உபகரணங்களைக் கொண்டுள்ளது.

ஃபண்ட் பரிந்துரை!

இதன் போர்ட்ஃபோலியோவில் 47% தரமான தனியார் துறை மற்றும் பொதுத்துறை நிறுவன கமர்ஷியல் பேப்பர்களிலும், 36% பொதுத்துறை வங்கிகளின் டெபாசிட்களிலும், மற்றவை தரமான நிறுவனங்களின் பாண்டுகள், என்சிடி-கள் மற்றும் டிரஷரி பில்களிலும் உள்ளது.

இந்த ஃபண்டில் முதலீடு செய்யும்போது சிறு முதலீட்டாளர்கள் குரோத் ஆப்ஷனில் செல்லலாம். குரோத் ஆப்ஷன் தவிர, தினசரி டிவிடெண்ட், வாராந்திர டிவிடெண்ட், மாதாந்திர டிவிடெண்ட், டிவிடெண்ட் ரீஇன்வெஸ்ட்மென்ட் என பலவித ஆப்ஷன்கள் உள்ளன.

ஆனால், டிவிடெண்ட் ஆப்ஷனில் செல்லும்போது 28.33% (தனி நபர்கள்) அல்லது 33.99% (கம்பெனிகள்) டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரியைப் பிடித்துக்கொண்டுதான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் டிவிடெண்டை கொடுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்க.

ஃபண்ட் பரிந்துரை!

இந்தத் திட்டத்தில் நுழைவுக் கட்டணமோ அல்லது வெளியேற்றுக் கட்டணம் ஏதுமோ இல்லை. போட்ட சில நாட்களிலேயே பணத்தை எடுத்துக் கொள்ளலாம் அல்லது எவ்வளவு காலம்  வேண்டுமானாலும் விட்டுவைக்கலாம். சில தினங்கள் அல்லது மிகக் குறுகிய காலத் தேவைகளுக்கு வருபவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டாம்.

குறைந்தது ஒரு மாதத்துகாகவாவது தேவைப்படாத பணத்தை இந்தத் திட்டத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம். தேவைப்படும்போது  மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும். குறைந்தபட்ச எஸ்ஐபி முதலீடு ரூ.500 ஆகும். ஆகவே, சிறு முதலீட்டாளர்களுக்கு இது ஒரு கச்சிதமான முதலீட்டு வாய்ப்பாகும்.
எஸ்ஐபி மற்றும் மொத்த முதலீட்டை இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் எப்போது  வேண்டுமானாலும் துவக்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீட்டை துவக்குவதற்கு எந்த நேரமும் நல்ல நேரமே.
 

ஃபண்ட் பரிந்துரை!

அவ்வப்போது வங்கி சேமிப்புக் கணக்கில் தூங்கிக்கொண்டிருக்கும் பணத்தை இந்தத் திட்டத்துக்கு முதலீட்டாளர்கள் மாற்றிவிடலாம். பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு ஒரு நாளாகும் (விடுமுறை தவிர்த்து). இந்தத் திட்டத்தில் ஆன்லைன் அல்லது எஸ்எம்எஸ் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

ஃபண்ட் பரிந்துரை!

நாம் ஏற்கெனவே கண்டதுபோல், எந்த வயதினரும் தங்களுடைய குறுகிய காலத் தேவைகளுக்கு இந்தத் திட்டத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

உங்கள் பணம் உங்களது வங்கி சேமிப்புக் கணக்குகளில் தூங்காமல்,  முடங்கிக் கிடக்காமல் உங்களுக்காக வேலை செய்வதற்கு இது ஓர் அரிய முதலீட்டு வாய்ப்பாகும்.

யாருக்கு உகந்தது?

சேவிங்ஸ் கணக்கில் தூங்கிக் கொண்டிருக்கும் பணத்துக்கு, ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, சில நாட்களிலிருந்து சில மாதங்களுக்குள் பணம் தேவைப்படுபவர்களுக்கு, எப்போது வேண்டுமானாலும் பணம் தேவைப்படுபவர்களுக்கு, சேவிங்ஸ் கணக்கைவிட அதிக வருமானம் பெற விரும்பும் முதலீட்டாளர்கள் போன்றவர்களுக்கு இந்த ஃபண்ட் உகந்தது.

யாருக்கு உகந்ததல்ல?

அதிக வருமானத்தைப் பெற விரும்புகிறவர்கள், அதிக ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள், கேரன்டீட் வருமானத்தைப் பெற விரும்பும் முதலீட்டாளர்கள் போன்றவர்களுக்கு இந்த ஃபண்ட் உகந்ததல்ல.