Published:Updated:

ஃபண்ட் பரிந்துரை!

ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட்: முதலீடு செய்கசொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்

இந்த வருட பட்ஜெட்டில் 80சி பிரிவின் கீழ் உள்ள வரிச் சலுகையை அதிகரித்ததிலிருந்து மக்களின் ஆர்வம், இந்தப் பிரிவின் கீழ் வரும் முதலீட்டு வகைகளில் அதிகரித்துள்ளது. 80சி-ன் கீழ் வரும் பலவகை முதலீடுகளில் டாக்ஸ் சேவர் அல்லது இஎல்எஸ்எஸ் (ELSS – Equity Linked Savings Scheme) என்று சொல்லக்கூடிய மியூச்சுவல் ஃபண்டு களும் அடக்கம். இந்தவகையில் சில வாரங்களுக்கு முன்பு ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ்ஷீல்டு ஃபண்ட் குறித்துப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் குறித்துப் பார்ப்போம்.

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஆக்ஸிஸ் பேங்கினால் புரமோட் செய்யப்பட்டது. ஆக்ஸிஸ் பேங்க் 74.99% பங்கினையும், மீதியை யூ.கே-வைச் சார்ந்த ஸ்கிரோடர்ஸ்

(Schroders) என்ற ஃபண்ட் நிர்வகிக்கும் நிறுவனமும் வைத்துள்ளது. ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் அக்டோபர் 2009-ல் ஆரம்பிக்கப்பட்டு, இன்றைய தினம் ரூ.11,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. பொதுவாக நாம் 5 ஆண்டுகளுக்குக் குறைவான செயல்பாடுள்ள திட்டங் களைப் பரிந்துரைக்கு எடுத்துக் கொள்வதில்லை. இருந்தபோதிலும் குறுகிய காலத்திலேயே இந்தத் திட்டம் தொடர்ச்சியாக நன்றாகச் செயல்பட் டுள்ளதால், இந்தவாரப் பரிந்துரைக்கு இந்தத் திட்டத்தை எடுத்துக் கொண்டுள்ளோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஃபண்ட் பரிந்துரை!

2009-ம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்த போது ரூ.1 கோடிக்கும் குறைவான சொத்துக்களைக் கொண்டிருந்த இந்தத் திட்டம், தற்போது ரூ.1,335 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த வேகமான வளர்ச்சிக்குக் காரணம் இதன் நல்ல செயல்பாடும், முதலீட்டாளர்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ள வருமானமும்தான்.

4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது ஒருவர் முதலீடு செய்த ரூ.1 லட்சமானது இன்று ரூ.2,51,531-ஆக உள்ளது. இது கிட்டத்தட்ட ஆண்டுக்கு 21.82% கூட்டு வட்டிக்குச் சமமாகும். மூன்றாண்டு கால அடிப்படையில் பார்க்கும்போது டாக்ஸ் சேவிங் வகை ஃபண்டுகளில் டாப்பராக உள்ளது.

ஃபண்ட் பரிந்துரை!
ஃபண்ட் பரிந்துரை!

இந்த ஃபண்டின் நல்ல செயல்பாட்டுக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அரசாங்க ஈடுபாடு இருப்பதால்  இந்த ஃபண்ட் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விரும்புவதில்லை. நல்ல குவாலிட்டியான தனியார் துறை பங்குகளையே தனது போர்ட்ஃபோலியோ வில் வைத்துள்ளது. மற்றொன்று போர்ட்ஃபோலியோ அலோகேஷன் ஆகும்.

இந்த ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோவில் 50% லார்ஜ் கேப் பங்குகளையும் எஞ்சியதை மிட் கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. இந்த இரு காரணங்களுமே இந்த ஃபண்டுக்கு நல்ல வெற்றியைத் தந்துள்ளது. இவைதவிர அதிகமான லீவரேஜ் உள்ள நிறுவனங்களை இந்த ஃபண்ட் தொடுவதில்லை. மேலும், புரமோட்டரின்/ மேனேஜ்மென்ட்டின் கடந்தகால சொல்களையும் செயல்களையும் ஒப்பிட்டுப்பார்த்து, எந்த அளவுக்குச் சொன்னதைச் செய்துள்ளார்கள் என்று கவனிக்கிறது. இதுபோல் பல ஃபில்டர்களைக் கையாண்டு பங்குகளைப் பொறுக்குகிறது.

இதன் போர்ட்ஃபோலியோ கச்சிதமாக 36 பங்குகளைக் கொண்டுள்ளது. டாப் 10 பங்குகள் 51% இடத்தைப் பிடித்துள்ளன. நிஃப்டி யுடன் ஒப்பிடும்போது நிதி, ஆட்டோ, டெக்னாலஜி, ஹெல்த்கேர் போன்ற துறைகளில் ஓவர்வெயிட்டாக உள்ளது.

ஃபண்ட் பரிந்துரை!

இந்த ஃபண்டின் மற்றொரு சிறப்பம்சம் குறைந்த அளவு ரிஸ்க்கில் அதிக அளவு வருமானத்தைத் தந்துள்ளது தான். இந்த ஃபண்டின் பீட்டா 0.87; ஆனால் இதன் ஆல்ஃபா 10.0 ஆகும். நாம் இந்தப் பகுதியில் இதுவரை பார்த்த ஃபண்டுகளிலேயே மிகவும் குறைந்த ரிஸ்க்கில் அதிகமான ஆல்ஃபாவைக் கொண்டுள்ள ஃபண்ட் இதுதான்.

இந்த ஃபண்டின் நெகட்டிவ் என பார்த்தால் குறைந்தகாலச் செயல்பாடு, புதிய ஃபண்ட் நிறுவனம், அதிகமான டேர்னோவர் போன்றவை ஆகும். குறைந்தகாலமாக இருந்தபோதிலும் இதன் செயல்பாடு மிகவும் நன்றாக இருந்துள்ளது.

புதிய ஃபண்ட் நிறுவனமாக இருந்தபோதிலும், இதன் புரமோட்டர் நாம் எல்லோரும் அறிந்த ஆக்ஸிஸ் பேங்க் ஆகும். இந்த வங்கி வேகமாக வளர்ந்துவரும் ஒரு முன்னணி நிறுவனமாகும். டேர்னோவர் அதிகமாக இருப்பதின் முக்கியக் காரணம், இந்த ஃபண்டின் வேகமான வளர்ச்சி ஆகும். புதிய பணம் வேகமாக உள்ளேவரும் போது, அந்தப் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். அதுவும் டேர்னோவர் விகிதத்தை அதிகப்படுத்தும்.

ஃபண்ட் பரிந்துரை!

இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ.20.05 ஆகும். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட செயல்பாட்டில் மூன்று முறை டிவிடெண்டை வழங்கியுள்ளது. சில ஆண்டுகளில் இந்த ஃபண்டின் சொத்து மதிப்பு நிலையாகும்போது, தொடர்ச்சி யான டிவிடெண்டை வழங்குவதற்குத் தனக்குத்தானே வியூகம் அமைத்துக் கொள்ளும் என நம்புகிறோம். அதேபோல் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு நிலைபெறும்போது டேர்னோவர் விகிதமும் குறையும்.


கிட்டத்தட்ட இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோதிலிருந்தே இதன் ஃபண்ட் மேனேஜராக ஜினேஷ் கோப்பானி உள்ளார். இந்த ஃபண்டின் தொடர்ச்சியான சிறந்த செயல்பாட்டுக்கு இவரின் மேலாண்மை ஒரு முக்கியக் காரணமாகும்.

ஃபண்ட் பரிந்துரை!

பல பாசிட்டிவ் அம்சங்கள் கொண்ட இந்த ஃபண்டில் 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகை தேவைபடுபவர்கள் தாராளமாக எஸ்ஐபி முறையிலும், சந்தையின் சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டின் மிட் கேப் ஃபோக்கஸ், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் சூட் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

யாருக்கு உகந்தது?

சம்பாத்தியம் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் இருந்து 80C பிரிவின் கீழ் வருமான வரி விலக்கை எதிர்பார்ப்பவர்கள், அவ்வாறு செய்யும் முதலீட்டில் ரிஸ்க் எடுத்து, எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்றாற் போல் வருமானத்தை எதிர்பார்ப்பவர் கள் ஆகியோருக்கு இந்த ஃபண்ட் உகந்தது.   

ஃபண்ட் பரிந்துரை!

யார் முதலீடு செய்யக்கூடாது?

80சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை தேவைப்படாதவர்கள், ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாதவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் குறித்து போதிய ஞானம் இல்லாதவர்கள் ஆகியோருக்கு இந்த ஃபண்ட் ஏற்றதல்ல.