நரேந்திர மோடி பிரதமரானபின், இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தைக் கண்டிருக்கிறது. இடையிடையே இறக்கம் காணப்பட்டாலும், சந்தை நீண்ட காலத்தில் நல்ல ஏற்றத்தைக் காணும் என்பது பரவலான கணிப்பாக இருக்கிறது. பங்குச் சந்தை ஏற்றத்தால் பல பங்குகள் நல்ல லாபத்தைத் தந்திருக்கின்றன. இதேபோல், பங்கு (ஈக்விட்டி) சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் கணிசமான லாபத்தைத் தந்திருக்கின்றன. இந்த லாபத்தைப் பார்த்துவிட்டு, ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்பவர் களின் எண்ணிக்கை அண்மை மாதங் களில் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்வதற்கான ஃபோலியோ ஒரு லட்சத்துக்கும் மேல் புதிதாக ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட்டில் மட்டும் 1,28,658 ஈக்விட்டி ஃபண்ட் ஃபோலியோக்கள் ஆரம்பிக்கப்பட்டி ருக்கிறது. இதையும் சேர்த்தால், ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ள மொத்த ஃபோலியோக்களின் எண்ணிக்கை 2,94,41,948-ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் வரையில் புதிதாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈக்விட்டி ஃபோலியோக்கள் புதிதாக ஆரம்பிக்கப் பட்டுள்ளன.

தற்போதைய நிலையில், ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் - இயக்குநர் காந்த் மீனாட்சியிடம் கேட்டோம்.

‘‘ஏறுமுகத்தில் இருக்கும் சந்தையில் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வது தவறில்லை. பொதுவாக, முதலீட்டாளர்கள் ஏறுமுகச் சந்தையை ஒரு நல்ல அறிகுறியாகக் கருதி, முதலீடு செய்யத் துவங்குகின்றனர். எந்தச் சந்தைச் சூழலிலும் முதலீடு செய்யத் துவங்கலாம் என்ற எண்ணத்தில் தவறு எதுவும் இல்லை.

குறிப்பாக, தவணைமுறை முதலீடான எஸ்ஐபி முதலீடு துவங்க எல்லா தருணமும் நல்ல தருணமே. ஆனால், சந்தைக் குறியீடுகள் ஏறுமுகத்தில் இருக்கையில் சீக்கிரம் லாபம் பார்த்து வெளியேறிவிடலாம் என்ற ஆசையில் உள்ளே இறங்குவது ஆபத்தில் முடியலாம். எப்படி இறங்கும் சந்தையைக் கண்டு பயப்பட்டு ஒதுங்கக் கூடாதோ, அதேபோல் ஏறும் சந்தை கண்டு பேராசை படவும் கூடாது” என்றவர், சந்தை உச்சத்தில் இருக்கும் இந்தச் சமயத்தில் நல்ல ஃபண்டுகளை எப்படி அடையாளம் காண்பது என்பது பற்றியும் சொன்னார்.

‘‘சந்தை வேகமான ஏற்றத்தில் இருக்கும்போது, சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகள் அதிகமாக லாபம் தருவது போலத் தோற்றமளிக்கும். அந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருக்கும் ஸ்மால் அண்ட் மிட் கேப் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். லார்ஜ் கேப், மிட் கேட், ஸ்மால் கேப் பங்குளை முதலீட்டுத் தொகுப்பில் (போர்ட்ஃபோலியோ) பரவலாகக் கொண்டிருக்கும் ஈக்விட்டி ஃபண்டுகள் நீண்ட காலத்தில் நல்ல லாபத்தைத் தருபவை.

ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு செய்யும் புதியவர்களுக்கு ஈக்விட்டி டைவர்ஸிஃபைடு ஃபண்டுகள் ஏற்றதாக இருக்கும். இதில் திரட்டப்பட்ட நிதி பல்வேறு துறையைச் சேர்ந்த பல நிறுவனப் பங்குகளில் பிரித்துப் போடப்படும். இதன்மூலம் ரிஸ்க் பரவலாக்கப்படுகிறது. அதனால் ஓரளவுக்கு நல்ல வருமானத்தையும் எதிர்பார்க்க முடியும்.

வருமான வரிச் சலுகை எதிர்பார்ப்பவர்கள், இஎல்எஸ்எஸ் என்கிற பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ள லாம். இந்த இஎல்எஸ்எஸ் ஃபண்டும் ஒரு ஈக்விட்டி டைவர்ஸிஃபைடு ஃபண்ட்தான். இதில் வருமான வரிச் சலுகை கிடைப்பதால் முதலீட்டை மூன்றாண்டுகளுக்குள் எடுக்க முடியாது. ஏற்கெனவே இஎல்எஸ்எஸ் ஃபண்டில் முதலீடு செய்து மூன்றாண்டுகள் முடிந்தவர்கள், அதிக லாபம்

எதிர்பார்த்தால், அந்த முதலீட்டை டாப் ஈக்விட்டி டைவர்ஸிஃபைடு ஃபண்டுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்” என்றவர், ஃபண்டை தேர்ந்தெடுப்பது பற்றி பேச ஆரம்பித்தார்.

‘‘நீங்கள் தேர்வு செய்யும் ஃபண்ட், சந்தை இறங்கும்போது, ஃபண்ட் சார்ந்த பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் இறங்கிய அளவுக்கு இறங்காமல் இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். அதேசமயம் சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது பெஞ்ச்மார்க் இண்டெக்ஸைவிட அதிக லாபம் தருவதாக இருப்பதுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏஜென்ட் சொன்னார் என்பதற்காக எந்த ஈக்விட்டி ஃபண்டிலும் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யக் கூடாது. அந்த ஃபண்ட் கடந்த காலங்களில் எப்படி செயல்பட்டி ருக்கிறது, அந்த ஃபண்டின் போர்ட் ஃபோலியோவில் எந்தெந்த பங்குகள் இடம் பெற்றிருக்கின்றன, அந்த ஃபண்டை நிர்வகிக்கும் ஃபண்ட் மேனேஜர் திறமையானவரா என்பதைக் கவனிப்பதும் அவசியம்.

துறை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதாக இருந்தால், உங்களுக்கு அந்தத் துறை சார்ந்த அறிவு இருப்பது அவசியம். இல்லை எனில் நஷ்டத்தைச் சந்திக்க நேரலாம்.

சந்தையின் ஏற்றத்தைப் பயன்படுத்தி, குளோஸ்டு எண்டட் ஃபண்ட் திட்டங்கள் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கியுள்ளன. இவற்றைத் தவிர்க்க வேண்டும். காரணம், அந்த ஃபண்ட் சரியாகச் செயல்படவில்லை எனில், நினைத்த நேரத்தில் வெளிவர முடியாமல் போய்விடும். மேலும், அவசரத் தேவைக்கு யூனிட்களை விற்கவும் முடியாது.

குறைந்தது ஐந்து ஆண்டுகள் புழக்கத்தில் இருக்கும் ஃபண்டுகளில் நல்ல, தொடர்ந்து நிலையான லாபம் தரும் ஃபண்டுகளை அடையாளம் கண்டு முதலீடு செய்ய வேண்டும். கடந்த ஓராண்டில் தந்திருக்கும் அதிக லாபத்தை மட்டும் கவனத்தில் கொண்டு முதலீடு செய்யக் கூடாது.

அதேபோல், ஒரே ஃபண்டில் மொத்த முதலீட்டையும் மேற்கொள்ளக் கூடாது. முதலீட்டு தொகையை 3 - 4 ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வது நல்லது. அப்போதுதான் முதலீட்டு மீதான ரிஸ்க்-ஐ குறைக்க முடியும்” என்றார்.

சந்தை ஏற்றத்தில் புதிதாக முதலீடு செய்பவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் கவனிக்கலாமே!