‘‘ஏறுவதெல்லாம் இறங்குவதற்கே; இறங்குவதெல்லாம் ஏறுவதற்கே!’’ ஷேருச்சாமி மாதிரி தத்துவ முத்துக்களை உதிர்த்துக்கொண்டே வந்தார் ஷேர்லக். இந்த வாரத்தின் முதல் சில நாட்களில் சந்தை பெரிய அளவில் சரிந்ததைத்தான் அவர் சொல்ல வருகிறார் என்பது புரிந்தது. ‘‘மேற்கொண்டு சொல்லுங்கள்’’ என்றோம். மேவாயைத் தடவியபடி பேச ஆரம்பித்தார்.

‘‘சந்தை சறுக்கியதற்கு டிரேடர்கள் நடத்திய திருவிளையாடல்தான் காரணம். வாரத் தொடக்கத்தில் வந்த இடைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை. அமெரிக்காவின் ஃபெட், வட்டி விகிதத்தை உயர்த்துகிற மாதிரியும் இருந்தது. தவிர, ஸ்காட்லாந்து இங்கிலாந்திலிருந்து பிரிந்துசென்றால், இந்தியாவின் ஏற்றுமதி பாதிப்படையும். இந்த மாதிரி காரணங்களை எல்லாம் வைத்து, கரடி டிரேடர்கள் சந்தையை கீழே இழுத்தனர். ஆனால், சில நாட்களுக்குத்தான் அவர்களால் அதைச் செய்ய முடிந்தது. அமெரிக்காவில் வட்டி விகிதத்தை உயர்த்த ஆறு மாதமாகும் என்கிற அறிவிப்பு வந்தவுடன் மீண்டும் சந்தையை உயர்த்தினர்.

என்றாலும் வெள்ளியன்று மீண்டும் ஏற்ற இறக்கமாகவே சந்தை இருந்தது. அடுத்த வாரத் தொடக்கத்தில் டிரேடர்கள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. சந்தை இறங்கும்பட்சத்தில் கொஞ்சம் பெரிய இறக்கத்தையோ அல்லது உயரும்பட்சத்தில் நல்ல ஏற்றத்தையோ சந்திக்க வாய்ப்புண்டு.

சந்தை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தாலும் நீண்ட காலத்தில் ஏறுமுகமாகத்தான் இருக்கும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். குறிப்பாக, கார்வி பங்கு தரகு நிறுவனம், சென்செக்ஸ் தீபாவளிக்குள் 29300 புள்ளிகளும், 2020-ல் 1 லட்சம் புள்ளிகளையும் தொடும் என பாசிடிவ்வாகச் சொல்லி உள்ளது. அந்தவகையில் நல்ல நிறுவனப் பங்குகளைக் கரெக்ஷன்களின்போது வாங்கிச் சேர்க்கலாம்’’ என நீண்ட விளக்கம் தந்தவருக்கு, ஏலக்காய் டீ தந்தோம். அதை ரசித்துக் குடித்தார்.

‘‘மிட் கேப் பங்குகள் முதலீட்டில் கூடுதல் கவனம் தேவை என்கிறார்களே அனலிஸ்ட்கள் ஏன்? அப்படி அதில் என்ன பிரச்னை இருக்கிறது?’’ என்று கேட்டோம்.

‘‘கடந்த சில மாதங்களாக அந்நிய நிதி முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐகள்) மிட் கேப் பங்குகளில் அதிக முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் பிராஃபிட் புக்கிங் செய்யும்போது, அதிகம் இறங்குவது மிட் கேப் பங்குகளாக இருக்கும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். அடிப்படையில் வலுவில்லாத மிட் கேப் பங்குகள் 15-20%, தரமான மிட் கேப் பங்குகள் 5% வரை இறங்கக்கூடும். ஜெயின் இரிகேஷன், என்சிசி, இந்தியா சிமென்ட்ஸ், மணப்புரம் ஃபைனான்ஸ், ஹெச்டிஐஎல், எஸ்கேஎஸ் மைக்ரோ ஃபைனான்ஸ் போன்ற நிறுவனப் பங்குகளில் எஃப்ஐஐகளின் முதலீடு அண்மை மாதங்களில் கணிசமாக உயர்ந்தி ருக்கிறது. புதிய முதலீட்டாளர்கள் இந்த விஷயத்தை மனதில் வைத்துக்கொள்வது நல்லது’’ என எச்சரிக்கைத் தொனியில் பேசினார் ஷேர்லக்.

‘‘சந்தையின் ஏற்றத்தைப் போலவே நம்மவர்களும் பங்குகளில் வேகமாக முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் போலிருக்கிறதே?’’ என்றோம் மகிழ்ச்சியோடு.

‘‘மொபைல் டிரேடிங் பற்றித்தானே குறிப்பிடுகிறீர்கள். ஆம், ஸ்மார்ட் போன்கள் மூலம் முதலீடு செய்வது 2013, ஆகஸ்டில் சராசரியாகத் தினசரி ரூ.122.75 கோடியாக இருந்தது. இது 2014 ஆகஸ்டில் ரூ.439 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட இது ஏறக்குறைய 257% அதிகம். இதே காலத்தில் என்எஸ்இ-ல் மொபைல் டிரேடிங் வர்த்தகம் ரூ.1,680 கோடியிலிருந்து ரூ.3,358 கோடியாக அதிகரித்திருக்கிறது. சந்தையில் புதிதாக முதலீடு செய்பவர்களில் சுமார் 35% பேர் அவர்களின் முதல் முதலீட்டை ஸ்மார்ட் போன் மூலம் செய்வதாகப் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. கலக்கட்டும் இந்த ஹைடெக் முதலீட்டாளர்கள்’’ என்று வாழ்த்தினார்.

‘‘ஐ.டி பங்குகளில் முன்பு போல முதலீடு அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறதே?’’ என்றோம்.

‘‘அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு, இந்திய பொருளாதார வளர்ச்சி ஆகியவை ஐ.டி துறைகளுக்கான தேவையை அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு கடந்த மூன்று மாதங்களாக ஐ.டி நிறுவனப் பங்குகளில் முதலீட்டை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன. ஆகஸ்ட் மாத இறுதியில் ஐ.டி நிறுவனப் பங்குகளில் நமது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ரூ.29,688 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஜூலை மாதத்தில் ரூ.27,596 கோடியாக இருந்தது. மொத்தம் நிர்வகிக்கப்பட்டு வரும் ரூ.2.81 லட்சம் கோடி ஈக்விட்டி ஃபண்ட் சொத்து மதிப்பில் ஐ.டி பங்குகளின் பங்களிப்பு 10.53 சதவிகிதமாக உள்ளது.

இன்னொரு முக்கிய விஷயம். ஆகஸ்ட் மாதத்தில் பங்கேற்பு ஆவணங்கள் என்கிற பி-நோட்கள் மூலமாகச் செய்யப்படும் முதலீடு ரூ.2.04 லட்சம் கோடியாக (34 பில்லியன் டாலர்) அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே, மத்தியில் நிலையான அரசு அமைந்துள்ளதால் பி-நோட்கள் முதலீடு இந்திய பங்குச் சந்தையில் அதிகரித்து வருகிறது. இந்த முறையில் வெளிநாட்டு பெரும் பணக்காரர்கள், ஹெட்ஜ் ஃபண்டுகள், இதர வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியப் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றன.

மொத்த எஃப்ஐஐ முதலீட்டில் பி-நோட்களின் பங்களிப்பு 10.3 சதவிகிதமாக உள்ளது. அதேநேரத்தில் சில ஆண்டுகளுக்குமுன் இது 50% அளவுக்கு இருந்தது. இந்த பி-நோட்கள் மூலம் முதலீடு செய்பவர்களின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று செபி கட்டாயப்படுத்தியதால், முதலீட்டின் அளவு குறைந்து போனது’’ என்றவர், ‘‘இந்தப் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு எஃப்ஐஐகளின் முதலீடு முக்கிய காரணமாக இருக்கிறது. அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.5,400 கோடியை முதலீடு செய் திருக்கிறார்கள்’’ என்றும் சொன்னார்.

‘‘அலிபாபாவின் ஐபிஓ அகில உலகத்தையே ஆச்சரிப்படுத்தி இருக்கிறதே!’’ என்றோம்.

‘‘ஆமாம், சீனாவின் இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா குரூப் ஹோல்டிங், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து 21.8 பில்லியன் டாலரை திரட்டி இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ஏறக்குறைய 1,30,800 கோடி. இந்த ஐபிஓ உலக அளவிலான பெரிய ஐபிஓகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஒரு பங்கின் விலை 68 டாலர்.

அலிபாபா ஐபிஓ மிகப் பெரிய வெற்றி கண்டதைத் தொடர்ந்து அதை தொடங்கிய ஜாக் மா உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறார். காரணம், அலிபாபாவை தொடங்கியவர் என்கிற முறையில் அவருக்கு இந்த நிறுவனத்தில் இருக்கும் பங்குகளின் மதிப்பு சுமார் 78 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல். ஆனால், ஜப்பானை சேர்ந்த டெலிகாம் நிறுவனமான சாஃப்ட் பேங்க் 4.74 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளையும், யாகூ நிறுவனம் 2.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கின்றன.''

கடைசி செய்தி: ஐபிஓ முடிந்து இன்று லிஸ்ட்டான அலிபாபா பங்கு 92.70 டாலர்களாக உயர்ந்து வர்த்தகம் ஆகத் தொடங்கியது! இது ஐபிஓ விலையைவிட 36% அதிகம். அலிபாபா பங்கு வாங்கியவர்கள் ஏக உற்சாகத்தில் இருக்கிறார்கள்! அட்ரா சக்கை, அட்ரா சக்கை!