நடப்பு
Published:Updated:

ஃபண்ட் பரிந்துரை!

ஃபண்ட் பரிந்துரை!

ஃபண்ட் பரிந்துரை!

யூடிஐ ஈக்விட்டி ஃபண்ட் ஒரு லார்ஜ் மற்றும் மிட் கேப் ஃபண்ட் ஆகும். இது மே 1992-ல் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். ஜூலை 2005-க்கு முன்புவரை இந்தத் திட்டம் யூடிஐ மாஸ்டர்கெயின் என்று அழைக்கப் பட்டது.

நாம் ஏற்கெனவே யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் என்ற திட்டத்தைப் பற்றி இந்தப் பகுதியில் அலசினோம். அதன் ஃபண்ட் மேனேஜரான அனூப் பாஸ்கர்தான் இந்த ஃபண்டையும் நிர்வகித்து வருகிறார். இவரே, யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பங்கு சார்ந்த முதலீடுகளின் தலைமை முதலீட்டு அலுவலரும் ஆவார்.

இந்த ஃபண்ட் தனது முந்தைய அவதாரத்தில் (மாஸ்டர்கெயின் பெயரில் இருந்தபோது), பிற ஈக்விட்டி ஃபண்டுகளுடன் ஒப்பிடுகையில், சுமாரான செயல்பாட்டினைத்தான் கொண்டிருந்தது.

ஏப்ரல் 2007-ல் அனூப் பாஸ்கர் ஃபண்ட் மேனேஜராகப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து மிகவும் நன்றாகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஃபண்ட் தற்போது ரூ.3,559 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.

ஃபண்ட் பரிந்துரை!

ஏறக்குறைய 82 சதவிகிதத்தை லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளிலும், எஞ்சியதை மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. இந்த பங்குகளின் சராசரி சந்தை மதிப்பு சுமார் 68,634 ரூபாய். 1.6 சதவிகித தொகையை கடன் பத்திரங்களில் வைத்திருக்கிறது. 0.4 சதவிகித தொகையைக் கையிருப்பாகவும் வைத்திருக்கிறது.

டிசிஎஸ், இன்போஃசிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.

ஃபண்ட் பரிந்துரை!

2008-லிருந்து தொடர்ச்சியாக நிஃப்டியைவிட அதிக வருமானம் தந்துள்ளது. தற்போது ஃபைனான்ஸ், டெக்னாலஜி மற்றும் எனர்ஜி துறை களில் நிஃப்டி குறியீட்டுடன் ஒப்பிடும்போது, அண்டர் வெயிட்டா கவும், ஹெல்த்கேர் மற்றும் ஆட்டோ மொபைல் துறைகளில் ஓவர்வெயிட்டா கவும் உள்ளது.

இந்த ஃபண்ட் மேனேஜர் தனது போர்ட்ஃபோலியோவில் பங்குகளை தேர்வு செய்வதற்கு ‘ரிலேடிவ் வேல்யூ’ மதிப்பீட்டைக் கையாளுகிறார். ஆகவே, சற்று பி/இ அதிகமாக உடைய பங்குகளை இதன் போர்ட்ஃபோலியோவில் பார்ப்பது ஆச்சர்யமில்லை.

இந்த ஃபண்ட் மேனேஜர் இந்த ஃபண்டின் மிகப் பெரிய பாசிட்டிவ் அம்சமாகும். அதுவே, இந்த ஃபண்டின் ரிஸ்க் எனவும் கூறலாம். இவர் ஃபண்டுகளைத் தேர்வு செய்வதில் வல்லவர்; அதேசமயத்தில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தாலும் அதைத் துரிதமாகச் சரிபடுத்திக் கொள்வார்.

இதன் போர்ட்ஃபோலியோவில் 68 பங்குகள் உள்ளன. பிற ஃபண்டுகளை ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை சற்று அதிகம்தான் என்றாலும், இது ஃபண்டினுடைய ரிஸ்க்கை குறைக்கிறது.

ஃபண்ட் பரிந்துரை!

இது பெரும்பாலும் லார்ஜ் கேப் பங்குகளையே கொண்டுள்ளதால், ஏற்றத்தாழ்வும் சந்தையை ஒட்டியே இருக்கும். அதை இந்த ஃபண்டினுடைய பீட்டாவில் காணலாம். ஃபண்டின் பீட்டாவான 0.90, மார்க்கெட்டைவிடக் குறைவானது.

அதேசமயத்தில், இந்த ஃபண்டின் ஆல்ஃபா 5.03 ஆகும். இது ரிஸ்க் சரிப்படுத்தல் (adjusted) வகையில் பார்க்கும்போது நல்ல ஆல்ஃபா ஆகும். இந்த ஃபண்ட், தொடர்ச்சியாக இதன் கேட்டகிரியில் உள்ள ஃபண்டு களில், முன்னணி வரிசையில் உள்ளது.

இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷன் என்ஏவி ரூ.76.71 ஆகும். இதற்கு முந்தைய காலங்களில் இதன் டிவிடெண்ட் ரெக்கார்டு அவ்வளவு தொடர்ச்சியாக இல்லை என்றாலும், கடந்த இரண்டு வருடமாக (2013 - 2014) தொடர்ந்து கொடுத்து வருகிறது. இது இனிவரும் காலங்களில் தொடரும் என எதிர்பார்க்கிறோம்.

குழந்தைகள் கல்வி / திருமணம், ஓய்வுக்காலம் போன்றவற்றுக்கு முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

ஃபண்ட் பரிந்துரை!

முழுவதுமாக லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் ஃபண்டுகளைவிட, சற்று அதிகமான வருவாய் நீண்ட காலத்தில் இந்த ஃபண்டில் உறுதியாகக் கிடைக்கும்.

 யாருக்கு உகந்தது:

இளம் மற்றும் நடுத்தர வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், பணம் உடனடியாக தேவை இல்லாத வர்கள்.

ஃபண்ட் பரிந்துரை!

  யாருக்கு உகந்ததல்ல:

குறுகிய காலத்தில் பணம் தேவைப் படுபவர்கள், உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.