Published:Updated:

SGB: தொடங்கியது 9-வது சீரீஸ் தங்கப்பத்திர வெளியீடு; இதில் முதலீடு செய்தால் என்ன லாபம்?

தங்கம்
News
தங்கம்

கிரெடிட், டெபிட் கார்டு, ஆன்லைன் அல்லது யூ.பி.ஐ முறையில் மேற்கொள்ளும் தங்கப்பத்திர முதலீடுகளுக்கு 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். இதனால், மின்னணு பணப் பரிவர்த்தனையில் தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம், 4,736 ரூபாய்க்கு கிடைக்கும்.

மத்திய அரசின் ஒன்பதாம் கட்ட தங்கப் பத்திர வெளியீடு, இன்று (10.01.2022) துவங்குகியுள்ளது. இந்த பத்திர வெளியீடு, ஐந்து நாட்கள் அதாவது, வருகிற 14-ம் தேதி வரை நடைபெறும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 1 கிராம் தங்கத்தின் விலை 4,786 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015 நவம்பரில், இந்த தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில், டீமேட் வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும். நிதியமைச்சகத்தின் சார்பாக, ரிசர்வ் வங்கி இந்த தங்கப் பத்திர வெளியீட்டை மேற்கொள்ளும்.

சாவரின் கோல்டு
சாவரின் கோல்டு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்படும்.

50 ரூபாய் தள்ளுபடி

கிரெடிட், டெபிட் கார்டு, ஆன்லைன் அல்லது யூ.பி.ஐ முறையில் மேற்கொள்ளும் தங்கப்பத்திர முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். இதனால், மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம், 4,736 ரூபாய்க்கு கிடைக்கும். கடந்த நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெற்ற இதற்கு முந்தைய எட்டாவது தங்கப் பத்திர வெளியீட்டில், 1 கிராம் தங்கம் ரூ.4,791 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Gold investment
Gold investment

தங்கத்தை மக்கள் ஒரு பாதுகாப்பான முதலீடாக நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் பெரும்பாலானவர்கள் நேரடியாக பிசிக்கல் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். அப்படி முதலீடு செய்யும் போது செய்கூலி, சேதாரம் என நஷ்டம் ஏற்படும். ஆனால், தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்யும் போது முதலீட்டுக்கு கூடுதலாக 2.5% வட்டி கிடைக்கிறது. எந்தவொரு நஷ்டமும் ஏற்படாது. ஆகையால், தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அரசின் தங்கப்பத்திரங்களே பெஸ்ட் சாய்ஸ்.