பான் கார்டு எண்ணை ஆதார் எண்ணுடன் 2021 ஜூன் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்; அப்படி இணைக்கவில்லை எனில், உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்துகொள்ளுங்கள் என்னும் கே.ஓய்.சி செல்லாது. மேலும், பான் எண்ணும் செயல்பாட்டில் இருக்காது. கே.ஓய்.சி செயல் இழந்துவிட்டால் மியூச்சுவல் ஃபண்டில் புதிய முதலீட்டை மேற்கொள்ள முடியாமல் போகும். குறிப்பாக, எஸ்.ஐ.பி முதலீட்டு முறையில் முதலீடு செய்ய முடியாது. பான் எண் செயல்பாட்டில் இல்லையெனில், உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலிருந்து பணம் எடுக்க முடியாத நிலை உருவாகும் எனச் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் ஆதார் - பான் கார்டை இணைக்க, மீண்டும் கால அவகாசம் 2021 செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதுவரை காத்திருக்காமல் உங்கள் முதலீட்டுக்கு பாதிப்பு வராமல் இருக்க பான் ஆதார் எண்ணை முன்கூட்டியே இணைத்துவிடுவது நல்லது.
பான் கார்டு, ஆதார் கார்டு இணைப்பு என்பது பெரிய வேலை இல்லை. பான் சேவை மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம், எஸ்.எம்.எஸ், ஆன்லைன் மூலம் இணைக்கலாம்.